Benefits Of Red Wine: தினமும் ஒரு கிளாஸ் ரெட் ஒயின் குடித்தால் இத்தனை நன்மைகளா?..ஆய்வுகள் சொல்வது என்ன?
- Benefits Of Red Wine: ரெட் ஒயின் ஆரோக்கியமானதாக கருதப்படுகிறது. ரெட் ஒயின் என்பது பல்வேறு வகையான திராட்சை பழங்களை கொண்டு தயாரிக்கப்படுவது ஆகும். ரெட் ஒயின் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி தெரிந்துகொள்வோம்.
- Benefits Of Red Wine: ரெட் ஒயின் ஆரோக்கியமானதாக கருதப்படுகிறது. ரெட் ஒயின் என்பது பல்வேறு வகையான திராட்சை பழங்களை கொண்டு தயாரிக்கப்படுவது ஆகும். ரெட் ஒயின் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி தெரிந்துகொள்வோம்.
(1 / 7)
ரெட் ஒயினானது பல்வேறு ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் நிறைந்த அடர் நிற திராட்சைகளை நொதிக்க வைத்து தயாரிக்கப்படுகிறது. இதனால் ரெட் ஒயின் பல்வேறு நன்மைகளை தருவதாக சொல்லப்படுகிறது.
(2 / 7)
ரெட் ஒயினுக்காக பயன்படுத்தப்படும் திராட்சைகளில் ரெஸ்வரேட்ரால், கேட்டசின்கள், எபிகேட்டசின்கள் மற்றும் ப்ரோ அந்தோசைனிடின்கள் போன்ற பல்வேறு ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் நிறைந்துள்ளன. இந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் இதய நோய்களின் அபாயத்தைக் குறைக்கும்.
(3 / 7)
ரெட் ஒயின் குடிப்பவர்களுக்கு உடல் எடைக்கு ஏற்ற உயரம் சரியாக இருக்காது என ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். இதனால் தான் ரெட் ஒயினை அளவோடு பருகுவது ஆரோக்கியமானது என கருதப்படுகிறது.
(4 / 7)
ரெட் ஒயின் குடிப்பதால் தோலின் நிறம் கூடும், சரும பொழிவு மேம்படுவதோடு இளமை தன்மையும் அதிகரிக்கும், நோய் எதிர்ப்பு மண்டலம் வலுப்பெறும் என்றும் கூறப்படுகிறது.
(5 / 7)
ஒருவர் தினமும் ஒரு டம்ளர் ரெட் ஒயின் குடித்தால், அது மன அழுத்தத்தைக் குறைப்பதோடு, கவலையையும் குறைக்கும். ஆகவே இரவு நேர உணவின் போது ஒரு டம்ளர் ரெட் ஒயினையும் அன்றாடம் சேர்த்துக் கொள்ளுங்கள்.
(6 / 7)
ரெட் ஒயினில் தூக்கத்தை தூண்டும் மெலடோன் என்ற உட்பொருள் அதிக அளவில் உள்ளது. எனவே தூக்கமின்மை பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் ரெட் ஒயினை தினமும் ஒரு டம்ளர் குடிக்கலாம். ஆனால் இரவு தூக்கத்திற்கு செல்லும் முன்பு குடிக்க வேண்டும். குறைந்தது இரண்டு மணி நேரத்திற்கு முன்பு குடித்து விட வேண்டும்.
மற்ற கேலரிக்கள்