Today Gold Rate: தங்கம் விலை சற்று உயர்வு.. இன்றைய மார்க்கெட் நிலவரம் இதுதான்..!
- Today Gold Rate: கடந்த சில நாட்களாக சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை அதிகரித்து வந்த நிலையில், இன்றும் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை (ஜூன் 24) அதிகரித்துள்ளது.
- Today Gold Rate: கடந்த சில நாட்களாக சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை அதிகரித்து வந்த நிலையில், இன்றும் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை (ஜூன் 24) அதிகரித்துள்ளது.

(1 / 6)
சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நாள்தோறும் நிர்ணயம் செய்யப்படுகிறது. அதன்படி, தங்கம் விலை கடந்த சில மாதங்களாக திடீரென அதிரடியாக உயர்வதும், குறைவதுமாக இருந்து வந்தது.
(2 / 6)
சென்னையில் கடந்த சில நாட்களாக 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை வரலாறு காணாத வகையில் நாளுக்கு நாள் புதிய உச்சத்தை அடைந்து வருகிறது. இந்நிலையில், சென்னையில் 22 ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.40 உயர்ந்துள்ளது. சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளியின் இன்றைய விலை நிலவரம் குறித்து பார்ப்போம்.
(3 / 6)
இன்றைய தங்கம் விலை நிலவரம்: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூன் 24) சவரனுக்கு ரூ.40 உயர்ந்து ஒரு சவரன் ரூ.53,600-க்கு விற்கப்படுகிறது. ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.5 உயர்ந்து ரூ.6,700-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
(4 / 6)
நேற்றைய தங்கம் விலை நிலவரம்: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று (ஜூன் 23) சவரன் ரூ.53,560-க்கு விற்கப்பட்டது. ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.6695-க்கு விற்பனை செய்யப்பட்டது.
(5 / 6)
இன்றைய வெள்ளி விலை நிலவரம்: வெள்ளி விலை கிராமுக்கு 30 காசுகள் குறைந்து ரூபாய் 96.20-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.96,200-க்கும் விற்பனையாகிறது.
மற்ற கேலரிக்கள்