இன்றைய தங்கம் விலை நிலவரம்: தங்கம் விலையில் மாற்றமா? மே 07, 2025 தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் இதோ!
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (மே 07) குறைந்துள்ளது. சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளியின் இன்றைய விலை நிலவரம் குறித்து பார்ப்போம்.

(1 / 7)
தங்கம், வெள்ளி விலை நிலவரம் 07.05.2025: சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நாள்தோறும் நிர்ணயம் செய்யப்படுகிறது.
(2 / 7)
இந்தச் சூழலில் தங்கம் விலையில் கடந்த சில நாட்களாக ஏற்றம், இறக்கம் காணப்பட்டது. வாரத்தின் முதல் நாளான திங்கள்கிழமை கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ரூ.8,775-க்கும் சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.70,200-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
(3 / 7)
இந்த நிலையில், சென்னையில் இன்று (மே 07) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 குறைந்துள்ளது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை மற்றும் வெள்ளியின் இன்றைய விலை நிலவரம் குறித்து பார்ப்போம்.
(4 / 7)
இன்றைய தங்கம் விலை நிலவரம்: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (மே 07) சவரனுக்கு ரூ.200 குறைந்து ஒரு சவரன் ரூ.72,600-க்கு விற்கப்படுகிறது. ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.25 குறைந்து ரூ.9,075-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
(5 / 7)
நேற்றைய தங்கம் விலை நிலவரம்: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று (மே 06) ஒரு சவரன் ரூ.72,800-க்கு விற்கப்பட்டது. ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.9,100-க்கு விற்பனை செய்யப்பட்டது.
(6 / 7)
இன்றைய வெள்ளி விலை நிலவரம்: வெள்ளி விலையில் இன்று (மே 07) எவ்வித மாற்றமும் இல்லாமல் கிராம் ரூ.111க்கும், 1 கிலோ கட்டி வெள்ளி ரூ.111,000-க்கும் விற்கப்படுகிறது.
(7 / 7)
தங்கம் விலை உயர்வு ஏன்? இந்தியாவிலும் குறிப்பாக தமிழ்நாடு உள்பட தென்னிந்தியாவிலும் தங்கம் விற்பனை சிறப்பாக நடைபெறுவது வழக்கம். குழந்தை பிறப்பது முதல் பல்வேறு நல்ல நிகழ்ச்சிகளுக்கு தங்கம் வாங்குவது நமது வழக்கமாக உள்ளது. தங்கம் எப்போதுமே ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் முக்கிய முதலீடுகளில் ஒன்றாக நமது நாட்டில் இருக்கிறது. இதன் காரணமாகவும் தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
மற்ற கேலரிக்கள்