Foreign Cricketers Married Indian Girls: இந்திய மருமகனான கிரிக்கெட் வீரர்கள்
மனம் கவர்ந்த கிரிக்கெட் வீரர் களத்தில் செய்த சாதனைகளின் மீது இருக்கும் ஆர்வ மிகுதி, அவரது தனிப்பட்ட வாழ்க்கை மீதும் ரசிகர்களுக்கு ஏற்படவே செய்கிறது. அந்த வகையில் உலக அளவில் முன்னணி கிரிக்கெட் வீரர்களாக ஜொலித்து இந்திய பெண்ணை திருமணம் செய்து கொண்ட கிரிக்கெட் வீரர்கள் பற்றி தெரிந்து கொள்ளலாம்.
(1 / 6)
ஆஸ்திரேலியாவின் நட்சத்திர ஆல்ரவுண்டரான கிளென் மேக்ஸ்வெல் முதல் இலங்கை அணியின் ஜாம்பவான் பந்து வீச்சாளரான முத்தையா முரளிதரன் வரையில் இந்தியாவின் மருமகன்களாக உள்ளார்கள்.(photos - social media)
(2 / 6)
ஹசான் அலி - சாமியா அர்ஷு: பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஹசான் அலி, இந்தியாவை சேர்ந்த சாமியா அர்ஷு என்பவரை திருமணம் 2019இல் திருமணம் செய்துகொண்டார். ஹரியாணா மாநிலம் ஃபாரிதாபாத்தை சேர்ந்த அர்ஷு, விமான எஞ்சினியராக உள்ளார். சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் தொடர்ந்து பல்வேறு பதிவுகளை பகிர்ந்து வருகிறார்.
(3 / 6)
முத்தையா முரளிதரன் - மதிமலர் ராமமூர்த்தி: இலங்கை அணியின் ஜாம்பவான் ஸ்பின்னரான முத்தையா முரளிதரன், இந்தியா பெண்ணும், தமிழகத்தை சேர்ந்தவருமான மதிமலர் என்பவரை 2005இல் திருமணம் செய்து கொண்டார். டெஸ்ட் கிரிக்கெட் 800 விக்கெட்டுகள் என்ற மைல்கள் சாதனையுடன் இருந்து வரும் முரளிதரன் - மதிமலர் தம்பதிக்கு மகன், மகள் என இரண்டு குழந்தைகள் உள்ளார்கள்
(4 / 6)
ஷான் டெய்ட் - மஷூம் சிங்: ஆஸ்திரேலியாவின் அதிவேக பந்து வீச்சாளரான ஷான் டெய்ட், மஷூம் சிங்கா என்ற இந்திய பெண்ணை திருமணம் செய்துள்ளார். 2010ஆம் ஆண்டில் ஐபிஎல் தொடரின் பார்ட்டியின்போது அவரை சந்தித்த ஷான் டெயிட் பின்னர் 2014இல் திருமணம் செய்து கொண்டார். மஷூம் சிங் மாடலாகவும், தொழில்முனைவோராகவும் உள்ளார். இவர் 2001ஆம் ஆண்டில் மிஸ் எர்த் இந்தியா பட்டத்தை வென்றார்
(5 / 6)
கிளென் மேக்ஸ்வெல் - வினி ராமன்: மற்றொரு ஆஸ்திரேலியா வீரரும், ஆல்ரவுண்டருமான கிளென் மேக்ஸ்வெல், இந்தியாவை பூர்வீகமாக கொண்ட வினி ராமன் என்பவரை 2022இல் திருமணம் செய்து கொண்டார். தமிழகத்தை சேர்ந்தவரான வினி ராமன் - மேக்ஸ்வெல் திருமணம் கிறித்தவ முறைப்படியும், இந்து முறைப்படியும் நடைபெற்றது. 2020ஆம் ஆண்டிலேயே இவர்களது திருமணம் நடைபெற இருந்த நிலையில், கொரோனா பாதிப்பு காரணமாக தள்ளிபோனது
(6 / 6)
சோயிப் மாலிக் - சானியா மிர்சா: உலகமே கொண்டாடிய தம்பதிகளாக சோயிப் மாலிக் - சனியா மிர்சா ஜோடி உள்ளது. சோயிப் மாலிக் கிரிக்கெட்டிலும், சானியா மிர்சா டென்னிஸ் விளையாட்டிலும் ஜொலித்த காலகட்டத்தில் திருமணம் செய்து கொண்டனர். 2008ஆம் ஆண்டில் இவர்களது திருமணம் நடைபெற்ற நிலையில், இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது
மற்ற கேலரிக்கள்