Year Ender 2024: பாக்ஸ் ஆபிஸ் சர்ச்சை முதல் போலி மரண நாடகம் வரை.. பாலிவுட் சினிமாவை உலுக்கிய சம்பவங்கள் ஓர் பார்வை!
2024 ஆம் ஆண்டு பாலிவுட்டில் பல பெரிய நிகழ்வுகள் இருந்தன, அவை சமூக ஊடகங்களில் வைரலாகின. அந்த பெரிய நிகழ்வுகள் மற்றும் சர்ச்சைகள் என்னவென்று பார்ப்போம்...
(1 / 7)
2024 ஆம் ஆண்டில் 'ஜிக்ரா' பாக்ஸ் ஆபிஸ் சர்ச்சை முதல் பூனம் பாண்டேவின் போலி மரண அறிவிப்பு வரை இந்த ஆண்டு பாலிவுட்டில் பல முக்கிய சம்பவங்கள் நடந்துள்ளன. அதுபற்றிய செய்தி தொகுப்பு இதோ..!
(2 / 7)
இந்த ஆண்டின் தொடக்கத்தில் வெளியான ஆலியா பட்டின் 'ஜிக்ரா' திரைப்படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வசூலை போலியாக மிகைப்படுத்தி கூறியதாக, திவ்ய குமார் கோஸ்லாவால் என்பவரால் குற்றம் சாட்டப்பட்டது பாலிவுட்டில் பெரும் சர்ச்சையாக வெடித்தது. தயாரிப்பாளர்கள் படத்தின் வசூல் புள்ளிவிவரங்களை மிகைப்படுத்தியதாகக் அவர் தெரிவித்திருந்தார்.
(3 / 7)
ஜூன் 6, 2024 அன்று சண்டிகர் விமான நிலையத்திலிருந்து டெல்லிக்கு சென்று கொண்டிருந்த நடிகை கங்கனா ரனாவத், விமான நிலையத்தில் பெண் கான்ஸ்டபிள் குல்விந்தர் கவுர் என்பவரை கன்னத்தில் அறைந்த விவகாரம் பாலிவுட் திரையுலம் மட்டுமின்றி இந்திய அரசியலிலும் பெரும் சர்ச்சையை கிளப்பி இருந்தது.
(4 / 7)
இந்த ஆண்டின் மிகப்பெரிய செய்தி என்னவென்றால், சல்மான் கானுக்கு லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலிடமிருந்து கொலை மிரட்டல்கள் வந்தன. சல்மான் கானின் வீட்டிலும் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. ஷாருக்கானுக்கும் மிரட்டல்கள் வந்தன. மிரட்டல் செய்தவர் ஷாருக்கிடம் பல லட்ச ரூபாய் கேட்டதாக எழுந்த செய்தி திரையலுகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
(5 / 7)
இந்த ஆண்டு பரவலாக விவாதிக்கப்பட்ட ஹேமா கமிட்டி அறிக்கை, மலையாள திரையுலகில் பெண்களுக்கு எதிரான 17 துன்புறுத்தல்களை எடுத்துக்காட்டுகிறது, இதில் ஊதிய சமத்துவமின்மை, கற்பழிப்பு அச்சுறுத்தல்கள் மற்றும் தேவையற்ற பாலியல் கருத்துக்கள் ஆகியவை அடங்கும். இந்த விவகாரம் பாலிவுட் வரை எதிரொலித்தது.
(6 / 7)
அல்லு அர்ஜுனின் 'புஷ்பா 2' தற்போது பாக்ஸ் ஆபிஸில் வலுவான செயல்திறனுக்காக செய்திகளில் உள்ளது. ஆனால் ஹைதராபாத்தில் 'புஷ்பா 2' படத்தின் பிரீமியரின் போது ஒரு சோகமான சம்பவம் நடந்தது. கூட்ட நெரிசலில் சிக்கி பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்திய சினிமாவே கொண்டாடிக் கொண்டிருக்கும் அல்லு அர்ஜூன் மீதும் வழக்கு பாய்ந்துள்ளது.
(7 / 7)
பிக்பாஸ் பிரபலமும், பிரபல மாடல் நடிகையுமான பூனம் பாண்டே, சமீபத்தில் கர்ப்பப்பை புற்றுநோய் காரணமaக் இறந்துவிட்டதாக சோஷியல் மீடியாவில் செய்தி வெளியானது. அதனை பூனம் பாண்டேயின் மேலாளரும் உறுதிபடுத்தினார். ஆனால் அடுத்த நாளே, `தான் இறக்கவில்லை என்றும், கர்ப்பப்பை புற்று நோய் குறித்து பெண்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும் என்பதற்காக இது போன்று நடந்து கொண்டதாகவும்’ பூனம் பாண்டே வீடியோ ஒன்றையும் வெளியிட்டார். இந்த போலி மரண விவகாரம் பாலிவுட் திரையுலகில் அதிர்வலையை ஏற்படுத்தியது.
மற்ற கேலரிக்கள்