Navagraha Prayers: நவக்கிரகங்களை வழிபடும் முறையும் அதன் பயன்களும்!
- நவகிரகங்களை எந்தெந்த கிழமைகளில் வழிபட வேண்டும் என்பதை பற்றியும் அவ்வாறு வழிபடும் போது கிடைக்கும் நன்மைகள் பற்றியும் இங்கு காண்போம்.
- நவகிரகங்களை எந்தெந்த கிழமைகளில் வழிபட வேண்டும் என்பதை பற்றியும் அவ்வாறு வழிபடும் போது கிடைக்கும் நன்மைகள் பற்றியும் இங்கு காண்போம்.
(1 / 7)
சந்திர பகவானை திங்கட்கிழமை தோறும் வழிபட்டு வருபவர்களுக்கு எல்லா புகழும் பெறக்கூடிய வாய்ப்புகள் உண்டாகும் என்பது நம்பிக்கை. நவகிரகத்தில் சந்திரனுக்கு உரிய வஸ்திரத்தை சாற்றி சந்திர பகவான் மந்திரங்களை உச்சரித்து அவரை வழிபட்டு வந்தால் மனதில் இருக்கும் சஞ்சலங்கள் நீங்கி மனம் ஒருநிலைப்படும்.
(2 / 7)
செவ்வாய்கிழமைகளில் செவ்வாய் பகவானை வழிபட்டு வருபவர்களுக்கு தைரியம் கிடைக்கும். நம்மை சுற்றி இருக்கும் எத்தகைய பகைவர்களையும் எதிர்கொள்ளும் தைரியம் கிடைக்க வேண்டுமானால் செவ்வாய்கிழமைகளில் செவ்வாய் பகவானை வழிபடுவது சிறப்பானதாகும்.
(3 / 7)
புதன்கிழமை புதன் பகவானை வழிபட்டு வந்தால் நல்ல அறிவாற்றல் பெருகும் என்பது நம்பிக்கை. கல்வி பயிலும் மாணவர்கள் புதன்கிழமையில் புதன் பகவானுக்கு பச்சை வஸ்திரம் சாற்றி வழிபட்டு வந்தால் படித்தது மறந்து போகாது இருக்கும்.
(4 / 7)
வியாழக்கிழமைகளில் குரு பகவானை வழிபட்டு வருபவர்களுக்கு குழந்தை பாக்கியமும், செல்வ செழிப்பும் ஏற்படும்.
(5 / 7)
வெள்ளிக்கிழமைகளில் சுக்கிர பகவானை வழிபட்டு வந்தால் அனைத்து நன்மைகளும் கிடைக்கும். நல்ல மனைவி அல்லது நல்ல கணவன், வீடு, மனை, சொத்துக்கள் போன்ற சுகபோக வாழ்க்கைக்கு தேவையான எல்லாம் பெறுவதற்கு சுக்கிர வழிபாடு செய்து வருவது சிறந்தது.
மற்ற கேலரிக்கள்