சீலிங் ஃபேன் கிரீஸ் கரைகளை நீக்கி புத்தம் புது பொலிவுடன் வைக்க வேண்டுமா? இந்த சிம்பிள் டிப்ஸ் போதும்
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  சீலிங் ஃபேன் கிரீஸ் கரைகளை நீக்கி புத்தம் புது பொலிவுடன் வைக்க வேண்டுமா? இந்த சிம்பிள் டிப்ஸ் போதும்

சீலிங் ஃபேன் கிரீஸ் கரைகளை நீக்கி புத்தம் புது பொலிவுடன் வைக்க வேண்டுமா? இந்த சிம்பிள் டிப்ஸ் போதும்

Published May 05, 2025 11:46 PM IST Muthu Vinayagam Kosalairaman
Published May 05, 2025 11:46 PM IST

  • கோடை காலத்தில் அதிக நேரம் மின்விசிறி பயன்படுத்துவதால் தூசி மற்றும் அழுக்கு படிந்த அடர்த்தியான அடுக்கு இடம்பெறும். இது போன்ற கடினமான அழுக்குகளை ஒரு கரைசலின் உதவியுடன் சில நிமிடங்களில் சுத்தம் செய்யலாம்

வீட்டை சுத்தமாக வைத்திருக்கும் பலரும், அதிகம் பயன்படுத்தக்கூடிய கேட்ஜெட், மின் சாதனை பொருள்களை சுத்தம் செய்வதில் மறந்து விடவோ அல்லது அதிக அக்கறை செலுத்தாமலோ இருக்கிறார்கள். மின்னணு பொருள்கள், அப்லையன்சஸ் போன்றவற்றை தினமும் சுத்தம் செய்வது எளிதான காரியமல்ல. எனவே இந்த பொருள்களில் நாளாக நாளாக அதிகமாக அழுக்குகள் படிந்துவிடும். வீடுகளில், அதிலும் கோடை காலத்தில் அதிக நேரம் பயன்படும் சாதனமாக சீலிங் ஃபேன் இருந்து வருகிறது. இதை சுத்தம் செய்வது கடினமானதாகிவிடும்

(1 / 6)

பல நாள்கள் சீலிங் ஃபேன் சுத்தம் செய்யப்படாவிட்டால், ஃபேனில் உள்ள பிளேடுகளில் தடிமனான அளவில் தூசி படிந்துவிடும். முழு வீட்டையும் சுத்தம் செய்த பிறகும், ஒரு அழுக்கான மின்விசிறி உங்கள் முழு வீட்டின் தோற்றத்தையும் கெடுத்துவிடும். அத்துடன் அவற்றில் இருந்து வெளிப்படும் தூசு, துகல்களால் உடல்நல பாதிப்பும் ஏற்படும்

(2 / 6)

உங்கள் வீட்டு மின்விசிறியில் தூசி மற்றும் அழுக்கு படிந்து, சுத்தம் செய்த பிறகும் அதில் படிந்த கிரீஸ் கரையை நீங்காமல் இருந்தால் கவலை வேண்டாம். ஒரு எளிய உதவிக்குறிப்பை பின்பற்றி ஃபேனில் உள்ள க்ரீஸ் கறையை போக்கலாம். மின்விசிறியில் படிந்திருக்கும் கிரீஸை எவ்வாறு எளிதாக சுத்தம் செய்வது என்பதை தெரிந்து கொள்ளலாம்

(3 / 6)

மின்விசிறி சுத்தம் செய்யும் திரவத்தை உருவாக்க, முதலில் நீங்கள் ஒரு டப்பாவில் சுத்தம் செய்யப்பட வேண்டிய உள்ள மின்விசிறியின் அளவுக்கு ஏற்ப ஆலிவ் எண்ணெயை எடுக்க வேண்டும். அதில் சிறிது அளவு வினிகரை கலக்கவும். இந்த இரண்டு பொருட்களையும் நன்கு கலக்கிய பிறகு, இந்த கரைசலில் பேக்கிங் பவுடர் மற்றும் சிறிது அளவு கார்ப்பனேட்டட் குளிர் பானம் சேர்க்கவும். எல்லாவற்றையும் ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் நிரப்பி நன்றாக குலுக்கி கலக்கவும். இப்படி உங்கள் ஃபேன் கிளீனிங் லிக்விட் தயார் செய்து ஃபேன் பிளேடையும் அதிகமாக தேய்க்காமல் எளிதாக சுத்தம் செய்யலாம்

(4 / 6)

ஃபேன் கிரீஸை சுத்தம் செய்ய, முதலில் ஒரு ஸ்டூலில் ஏறி உங்கள் ஸ்ப்ரே பாட்டிலை தயாராக வைத்திருங்கள். ஃபேன்னை அணைத்த பிறகு, இந்த ஸ்ப்ரேயை பிளேடுகளில் நன்றாக தெளிக்க வேண்டும். ஃபேன் மீது ஒரு தடிமனான அடுக்கை ஊற்றி 2-4 நிமிடங்கள் அப்படியே வைக்கவும். பின்னர் செய்தித்தாள் அல்லது காட்டன் துணியின் உதவியுடன் ஃபேன்னை சுத்தம் செய்யவும். இது எளிதில் நீங்காத கிரீஸை நீக்கும். ஃபேன் மீது உள்ள அனைத்து அழுக்கு மற்றும் தூசியும் அதிகமாக அழுத்தி தேய்க்காமல் எளிதாக அகற்றப்படும்

(5 / 6)

வீட்டிலேயே எளிதாக தயார் செய்யக்கூடிய இந்த லிக்விட் மூலம் உங்கள் வீட்டு சீலிங் ஃபேன்களை புத்தம் புது பொலிவுடன் எப்போது வைத்துக்கொள்ளலாம்

(6 / 6)

Muthu Vinayagam Kosalairaman

TwittereMail
கோ. முத்து விநாயகம், தலைமை கன்டென்ட் ப்ரொடியூசராக இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் பணிபுரிகிறார். தொலைக்காட்சி, டிஜிட்டல் ஊடகங்களில் 17+ ஆண்டுகள் அணுபவம் மிக்கவர். தமிழ்நாடு, தேசம் மற்றும் சர்வதேசம், கிரிக்கெட், விளையாட்டு, லைஃப்ஸ்டைல் உள்ளிட்ட பிரிவுகளில் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் செய்திகளை எழுதி வருகிறார். சென்னை பல்கலைகழகத்தில் இளங்கலை காட்சிவழி தொடர்பியல், அண்ணா பல்கலைகழகத்தில் முதுகலை மின்னணு ஊடகம் பிரிவில் பட்டம் பெற்று இவர், 2007 முதல் ஊடகத்துறையில் இருந்து வருகிறார். மக்கள் தொலைக்காட்சி, இந்தியாகிளட்ஸ் இணையத்தளம், ஈடிவி பாரத் ஆகிய நிறுவனங்களை பணியாற்றிய அணுபவம் மிக்கவர். மக்கள் தொலைக்காட்சி, இந்தியாகிளிட்ஸ், ஈடிவி பாரத் ஆகிய நிறுவனங்களை தொடர்ந்து 2021 முதல் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.

மற்ற கேலரிக்கள்