Cauvery issue: தமிழ்நாட்டுக்கு 1 TMC தண்ணீர் தர முடியாது! 8000 கன அடி தண்ணீர் மட்டுமே தர முடியும்!சித்தராமையா!
- Cauvery issue: தமிழகத்துக்கு 8,000 கன அடி தண்ணீர் திறந்து விடப்படும் என அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு பின்னர் கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.
- Cauvery issue: தமிழகத்துக்கு 8,000 கன அடி தண்ணீர் திறந்து விடப்படும் என அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு பின்னர் கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.
(1 / 5)
தமிழ்நாட்டுக்கு 8000 கன அடி தண்ணீர் மட்டுமே தர முடியும் என கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா கூறி உள்ளார்.
(PTI)(2 / 5)
காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக தமிழகம் மற்றும் கர்நாடக அரசுகளுக்கு இடையே நீண்ட நெடுங்காலமாக பிரச்னைகள் நிலவி வருகிறது. இரு மாநில மக்களுக்கும் முக்கிய ஆதாரமாக காவிரி ஆறு விளங்குகின்றது. தினமும் ஒரு டிஎம்சி தண்ணீரை தமிழ்நாட்டுக்கு தர வேண்டும் என்று கர்நாடகாவுக்கு காவிரி நதிநீர் ஒழுங்காற்றுக் குழு உத்தரவிட்டு இருந்தது.
(3 / 5)
இந்த விவகாரம் தொடர்பாக கர்நாடகாவில் அனைத்துக் கட்சிக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் துணை முதல்வர் டி.கே.சிவக்குமார், எதிர்க்கட்சித் தலைவர் ஆர்.அசோகா, ஜேடி எம்எல்ஏ ஜிடி தேவகவுடா, விவசாய சங்கத் தலைவர்கள், சட்ட வல்லுநர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
(CM of Karnataka X)(4 / 5)
செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், அண்டை மாநிலமான தமிழகத்திற்கு காவிரி ஆற்றில் இருந்து தினமும் 8,000 கனஅடி நீரை இந்த மாத இறுதி வரை திறந்துவிட கர்நாடக அரசு தயாராக இருப்பதாக முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.
(PTI)மற்ற கேலரிக்கள்