Captain Vijayakanth : கோபமடைந்த கேப்டன்.. தன் படம் ஓடாது என ஓபன் டாக்.. ஆர்.வி.உதயகுமார் சொன்ன ரகசியம்!
- Captain Vijayakanth : கேப்டன் விஜயகாந்த் அவர்கள் நடிப்பில் மிகவும் முக்கியமான படம் சின்ன கவுண்டர். 1992 ஆம் ஆண்டு பொங்கல் திருநாளன்று வெளிவந்த படம். ஆர். வி. உதயகுமார் இயக்கி இருந்தார். வெகுவாக ஆக்சன் ஹீரோவாக பார்த்து பழகிப்போயிருந்த காலத்தில் இந்த படம் விஜயகாந்த்தை வித்தியாசப்படுத்தியது.
- Captain Vijayakanth : கேப்டன் விஜயகாந்த் அவர்கள் நடிப்பில் மிகவும் முக்கியமான படம் சின்ன கவுண்டர். 1992 ஆம் ஆண்டு பொங்கல் திருநாளன்று வெளிவந்த படம். ஆர். வி. உதயகுமார் இயக்கி இருந்தார். வெகுவாக ஆக்சன் ஹீரோவாக பார்த்து பழகிப்போயிருந்த காலத்தில் இந்த படம் விஜயகாந்த்தை வித்தியாசப்படுத்தியது.
(1 / 5)
சின்ன கவுண்டர்: கடினமான கதாபாத்திரங்களை நடித்துக் கொண்டிருந்தாலும் அவ்வப்போதும் மென்மையான கதாபாத்திரங்களையும் ஏற்று நடிப்பார் விஜயகாந்த். அப்படி எடுக்கப்பட்ட திரைப்படம் தான் இந்த சின்ன கவுண்டர். மிகப்பெரிய வசூல் சாதனை செய்த சிறந்த திரைப்படங்களில் இதுவும் ஒன்று.
(2 / 5)
கேப்டன் விஜயகாந்த் அவர்கள் நடிப்பில் மிகவும் முக்கியமான படம் சின்ன கவுண்டர். 1992 ஆம் ஆண்டு பொங்கல் திருநாளன்று வெளிவந்த படம். ஆர். வி. உதயகுமார் இயக்கி இருந்தார். வெகுவாக ஆக்சன் ஹீரோவாக பார்த்து பழகிப்போயிருந்த காலத்தில் இந்த படம் விஜயகாந்த்தை வித்தியாசப்படுத்தியது.
(3 / 5)
சுகன்யா, மனோரமா, வடிவேலு, கவுண்டமணி செந்தில் என பலர் நடிப்பில் வந்த இந்த படத்தை விஜயகாந்த் ரசிகர்கள் இன்றுவரை கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் படத்தின் இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் சின்ன கவுண்டர் திரைபடம் குறித்து சேனல் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் விஜயகாந்திற்கு இந்த படம் ஓடும் என்று நம்பிக்கை இல்லை என்று தெரிவித்து ஆச்சரியப்பட வைத்துள்ளார்.
(4 / 5)
விஜயகாந்த் தினமும் மிஷின் கன், பைட், பறந்து பறந்து அடிக்குறது அப்படின்னு இருந்த நேரத்தில் இது ஏதோ பொழுது போக்கிற்காகன்னு வந்து சின்ன கவுண்டர் நடிச்சார் என்பது தான் உண்மை. அந்த படத்தில் அவர் கேரக்டர பத்தி வரும் போது எல்லாருமே அவர சுத்தி பேசிக்கிட்டு இருப்பாங்க. அவரு இப்படி இவரு இப்படி.. கவுண்டர் வந்தாலே அப்படின்னு பேசிக்கிட்டு இருப்பாங்க. விஜயகாந்திற்கு டையலாக்கே இருக்காது.
(5 / 5)
அதை என்னிடம் கேட்க மாட்டார். அசிஷ்டெண்டுகளை கூப்பிட்டு ஏய்.. என்ன வந்து டயலாக்கே வைக்கமாட்டானா.. அவன் அவன் பேசுறான் நான் சும்மா நின்னிக்கிட்டு பார்த்துக்கிட்டே இருக்கணுமா.. இந்த படம் ஓடாது அப்படின்னுலாம் சொல்லுவார். அப்பறம் ஒரு நாள் இந்த ஹீரோவே ஒரு உன்னதமான ஹீரோ. ஊரே வந்து அவன பத்திதா பேசுது. அப்பறம் அவனே தன்ன பத்தி பேசிட்டா நல்லா இருக்காது அப்படின்னு சொன்ன உடனே புரிஞ்சுக்கிட்டார். அதுல இருந்து தான் இந்த டாப்பிக்கையே விட்டார் என்கிறார் உதயகுமார்.
மற்ற கேலரிக்கள்