Budhwa Mangal: ஜேஷ்டா மாத முதல் செவ்வாய்.. அனுமனுக்கு உகந்த புத்வா மங்கள்.. இப்படி வழிபட்டால் அனுமனின் அருளைப் பெறலாம்
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Budhwa Mangal: ஜேஷ்டா மாத முதல் செவ்வாய்.. அனுமனுக்கு உகந்த புத்வா மங்கள்.. இப்படி வழிபட்டால் அனுமனின் அருளைப் பெறலாம்

Budhwa Mangal: ஜேஷ்டா மாத முதல் செவ்வாய்.. அனுமனுக்கு உகந்த புத்வா மங்கள்.. இப்படி வழிபட்டால் அனுமனின் அருளைப் பெறலாம்

May 27, 2024 01:15 PM IST Marimuthu M
May 27, 2024 01:15 PM , IST

  • Budhwa Mangal: இந்து நாட்காட்டியின்படி, மே 24ஆம் தேதி வெள்ளிக்கிழமை, ஜேஷ்டா மாதம் தொடங்கியது. ஜேஷ்டா மாதத்தின் ஒவ்வொரு செவ்வாய்க் கிழமையும் ‘புத்வா மங்கள்’ என அழைக்கப்படுகிறது. இது ஆஞ்சநேயருக்கு ஒதுக்கப்பட்ட நாளாகும்.

Budhwa Mangal: இந்து நாட்காட்டியின்படி, மே 24ஆம் தேதி வெள்ளிக்கிழமை, ஜேஷ்டா மாதம் தொடங்கியது. ஜேஷ்டா மாதத்தின் ஒவ்வொரு செவ்வாய்க் கிழமையும் ‘புத்வா மங்கள்’ என அழைக்கப்படுகிறது. இது ஆஞ்சநேயருக்கு ஒதுக்கப்பட்ட நாளாகும். புத்வா மங்களின் முதல் செவ்வாய்க்கிழமை மே 28ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. இந்த நாளில் மே 28ஆம் தேதி அதிகாலை 4:27 மணிக்குத் தொடங்கி, நள்ளிரவு 2:05 மணிவரை நீடிக்கும்.இந்த காலத்தில் ‘பிரம்ம யோகம்’ உண்டாகிறது. அப்போது சந்தோஷம் சார்ந்த நிகழ்வுகள் உண்டாகும். நீங்கள் ஒரு புதிய தொழிலை செய்யத் தொடங்க நினைத்தால், ’புத்வா மங்களில்’ செய்யலாம். நன்கொடைகள் மற்றும் சுப காரியங்கள் செய்யப்படுகின்றன.

(1 / 7)

Budhwa Mangal: இந்து நாட்காட்டியின்படி, மே 24ஆம் தேதி வெள்ளிக்கிழமை, ஜேஷ்டா மாதம் தொடங்கியது. ஜேஷ்டா மாதத்தின் ஒவ்வொரு செவ்வாய்க் கிழமையும் ‘புத்வா மங்கள்’ என அழைக்கப்படுகிறது. இது ஆஞ்சநேயருக்கு ஒதுக்கப்பட்ட நாளாகும். 

புத்வா மங்களின் முதல் செவ்வாய்க்கிழமை மே 28ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. இந்த நாளில் மே 28ஆம் தேதி அதிகாலை 4:27 மணிக்குத் தொடங்கி, நள்ளிரவு 2:05 மணிவரை நீடிக்கும்.

இந்த காலத்தில் ‘பிரம்ம யோகம்’ உண்டாகிறது. அப்போது சந்தோஷம் சார்ந்த நிகழ்வுகள் உண்டாகும். நீங்கள் ஒரு புதிய தொழிலை செய்யத் தொடங்க நினைத்தால், ’புத்வா மங்களில்’ செய்யலாம். நன்கொடைகள் மற்றும் சுப காரியங்கள் செய்யப்படுகின்றன.

புத்வா மங்களின் வரலாறு என்ன?மகாபாரத காலத்தில், பாண்டவர்களில் ஒருவரான பீமன்,தான் வலிமையானவர் என்று பெருமிதம் கொண்டார். அவரது ஆணவத்தை அடக்க, அனுமன் குரங்கு வடிவில் விஸ்வரூபமெடுத்தார். அந்த நாளே ‘புத்வா மங்கள்’ என அழைக்கப்படுகிறது.அனுமனின் ஆசியைப் பெற விரும்பினால், ’புத்வா மங்கள்’ நாளில், அனுமனின் ஆலயம் சென்று, பிரசாதம் வழங்க வேண்டும். ஆலமர இலை கொண்டு அனுமனுக்கு அர்ச்சனை செய்வது, அந்த இலையை நதியில் மிதக்கச் செய்வது பல பிரச்னைகளில் இருந்து விடுபட உதவுகிறது.

(2 / 7)

புத்வா மங்களின் வரலாறு என்ன?

மகாபாரத காலத்தில், பாண்டவர்களில் ஒருவரான பீமன்,தான் வலிமையானவர் என்று பெருமிதம் கொண்டார். அவரது ஆணவத்தை அடக்க, அனுமன் குரங்கு வடிவில் விஸ்வரூபமெடுத்தார். அந்த நாளே ‘புத்வா மங்கள்’ என அழைக்கப்படுகிறது.

அனுமனின் ஆசியைப் பெற விரும்பினால், ’புத்வா மங்கள்’ நாளில், அனுமனின் ஆலயம் சென்று, பிரசாதம் வழங்க வேண்டும். ஆலமர இலை கொண்டு அனுமனுக்கு அர்ச்சனை செய்வது, அந்த இலையை நதியில் மிதக்கச் செய்வது பல பிரச்னைகளில் இருந்து விடுபட உதவுகிறது.

புத்வா மங்களில் எப்படி பூஜை செய்வது?‘புத்வா மங்கள்’நாளில், காலையில் எழுந்து, நீராடிவிட்டு, வீட்டின் பூஜையறையை சுத்தம்செய்து, சுத்தமான ஆடைகளை அணிந்துகொள்ளவேண்டும். அனுமன் படத்துக்கு முன் நெய்தீபம் ஏற்றி, அனுமன் மந்திரங்களை பாராயாணம் செய்யவேண்டும். இந்த பூஜையின் நாளின் போது வெண்மை அல்லது கருப்பு நிற ஆடைகளை அணியக்கூடாது. யாரையும் அவமதிக்கக் கூடாது. கடன் கொடுக்கவோ, வாங்கவோ கூடாது.

(3 / 7)

புத்வா மங்களில் எப்படி பூஜை செய்வது?

‘புத்வா மங்கள்’நாளில், காலையில் எழுந்து, நீராடிவிட்டு, வீட்டின் பூஜையறையை சுத்தம்செய்து, சுத்தமான ஆடைகளை அணிந்துகொள்ளவேண்டும். அனுமன் படத்துக்கு முன் நெய்தீபம் ஏற்றி, அனுமன் மந்திரங்களை பாராயாணம் செய்யவேண்டும். 

இந்த பூஜையின் நாளின் போது வெண்மை அல்லது கருப்பு நிற ஆடைகளை அணியக்கூடாது. யாரையும் அவமதிக்கக் கூடாது. கடன் கொடுக்கவோ, வாங்கவோ கூடாது.

அனுமனுக்கு இஷ்டமான ராசிகள்:அனைத்து 12 ராசிகளிலும் சில ராசியினருக்கு அனுமனின் ஆசிர்வாதம் எப்போதும் இருக்கும்.மேஷம்: மேஷ ராசியினரை அனுமனுக்கு மிகவும் பிடிக்கும். மேஷ ராசியினர் வாழ்க்கையில் சிக்கல்கள் வரும்போது, அனுமனை வழிபட்டால் சிக்கல்கள் பஞ்சாக பறந்துவிடும்.  பணப்பிரச்னை, மனச்சோர்வு, அறிவுச்சோர்வு ஆகியவை இருந்தால், மேஷ ராசியினர் அனுமனை செவ்வாய்க்கிழமைகளில் வழிபட்டால் தீர்வு கிடைக்கும்.

(4 / 7)

அனுமனுக்கு இஷ்டமான ராசிகள்:

அனைத்து 12 ராசிகளிலும் சில ராசியினருக்கு அனுமனின் ஆசிர்வாதம் எப்போதும் இருக்கும்.

மேஷம்: 

மேஷ ராசியினரை அனுமனுக்கு மிகவும் பிடிக்கும். மேஷ ராசியினர் வாழ்க்கையில் சிக்கல்கள் வரும்போது, அனுமனை வழிபட்டால் சிக்கல்கள் பஞ்சாக பறந்துவிடும்.  பணப்பிரச்னை, மனச்சோர்வு, அறிவுச்சோர்வு ஆகியவை இருந்தால், மேஷ ராசியினர் அனுமனை செவ்வாய்க்கிழமைகளில் வழிபட்டால் தீர்வு கிடைக்கும்.

சிம்மம்: இந்த ராசியினருக்கு குடும்பத்தில் சிக்கல் எழுந்தால், தூய மனதுடன் அனுமனை வழிபட்டால் உடனடியாகப் பிரச்னைகள் அகலும். குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் நிகழாது.

(5 / 7)

சிம்மம்: 

இந்த ராசியினருக்கு குடும்பத்தில் சிக்கல் எழுந்தால், தூய மனதுடன் அனுமனை வழிபட்டால் உடனடியாகப் பிரச்னைகள் அகலும். குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் நிகழாது.

விருச்சிகம்: இந்த ராசியினருக்கு அனுமனின் ஆசியால், கடினமான பணிகளையும் எளிதில் செய்து முடிப்பீர்கள். அனுமன் வழிபாடு பல நல்ல பலன்களை விருச்சிக ராசியினருக்குத் தரும்.

(6 / 7)

விருச்சிகம்: 

இந்த ராசியினருக்கு அனுமனின் ஆசியால், கடினமான பணிகளையும் எளிதில் செய்து முடிப்பீர்கள். அனுமன் வழிபாடு பல நல்ல பலன்களை விருச்சிக ராசியினருக்குத் தரும்.

கும்பம்: கும்ப ராசியினருக்கு அனுமனின் ஆசியுண்டு. கும்ப ராசியினர், செவ்வாய்க்கிழமை அனுமன் கோயிலுக்குச் சென்று வழிபட்டால் தடைகள் நீங்கும். தாமதம் விலகும்.

(7 / 7)

கும்பம்:

 கும்ப ராசியினருக்கு அனுமனின் ஆசியுண்டு. கும்ப ராசியினர், செவ்வாய்க்கிழமை அனுமன் கோயிலுக்குச் சென்று வழிபட்டால் தடைகள் நீங்கும். தாமதம் விலகும்.

(ANI)

மற்ற கேலரிக்கள்