Ind vs Aus 5th Test Results : ‘எதுவுமே செய்யாமே எப்படி பாஸ் ஃபீல் பண்றீங்க?’ பரிசளிப்பில் சலித்துக் கொண்ட டீம் இந்தியா!
- இந்திய டெஸ்ட் அணியின் ஆஸ்திரேலிய சுற்றுப் பயணத்தில், முன்னணி பேட்ஸ்மேன்களின் மோசமான ஃபார்ம் காரணமாக, தொடரை இழந்துள்ளது இந்திய அணி. இது இந்த தொடரில் மட்டும் நடந்ததா? கொஞ்சம் பின்னோக்கியும் பார்க்க வேண்டியுள்ளது.
- இந்திய டெஸ்ட் அணியின் ஆஸ்திரேலிய சுற்றுப் பயணத்தில், முன்னணி பேட்ஸ்மேன்களின் மோசமான ஃபார்ம் காரணமாக, தொடரை இழந்துள்ளது இந்திய அணி. இது இந்த தொடரில் மட்டும் நடந்ததா? கொஞ்சம் பின்னோக்கியும் பார்க்க வேண்டியுள்ளது.
(1 / 6)
ஒருநாள் போட்டி, டி20, டெஸ்ட் என அனைத்து ஃபார்மட்டிலும் டாப்பில் இருந்து வந்த இந்திய அணி, டெஸ்ட் போட்டியில் மட்டும் சமீபத்தில் தொடர்ந்து சொதப்பி வருகிறது. அதற்கு காரணம் என்ன?(AFP)
(2 / 6)
இறுதியாக, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரை 3:1 என்று இழந்துள்ளது இந்தியா. இந்த தொடர் முழுவதும் முன்னணி பேட்ஸ்மேன்கள் சொதப்பினர். குறிப்பாக, ரோஹித் சர்மா, விராட் கோலி, ஷூப்மன் கில் ஆகியோரின் ஆட்டம் திருப்தி அளிக்கவில்லை.(AFP)
(3 / 6)
இலங்கையில் நடந்த டெஸ்ட் தொடரில் தொடங்கியது இந்த சரிவு. கெளதம் கம்பீர் தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்ற பின், டெஸ்ட் தொடரில் இந்தியா சந்திக்கும் மூன்றாவது சரிவு இதுவாகும். இத்தனைக்கும் பின்னடைவில் இருந்த இலங்கை அணியிடம் தோல்வி அடைந்த போதே, தேர்வுக்குழு விழித்திருக்க வேண்டும்.(AP)
(4 / 6)
அதன் பின் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர். பாகிஸ்தானிடம் சூடு வாங்கி வந்த நியூசிலாந்து அணி, இந்திய அணிக்கு சூடு வைத்தது. அப்போதும் சொதப்பியது இதே பேட்ஸ்மேன்கள் தான். அதன் பிறகும் தேர்வாளர்கள் திருந்தவில்லை.(AFP)
(5 / 6)
ஆஸ்திரேலியா மாதிரியான ஒரு வலுவான அணியை, அதன் சொந்த மண்ணில் வீழ்த்த வரும் போது, அதற்கான அணி எப்படி இருக்க வேண்டும்? ஒட்டுமொத்தமாக ஃபார்மில் இல்லாதவர்களை அனுப்பி வைத்துவிட்டு, கோப்பையை எப்படி தூக்க முடியும்? அது தான், இந்த தொடரில் நடந்தது!(AFP)
(6 / 6)
இந்த தொடரின் 5 டெஸ்டுகளிலும், அதற்கு முந்தைய டெஸ்டுகளிலும் சரிவர விளையாடாமல், இறுதியாக நடக்கும் பரிசளிப்பு பகுதியில் முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு, கவலையில் தலையை குணிந்து கொண்டு நிற்பதால் என்ன நடக்கப் போகிறது? தேர்வில் விஐபி என்கிற அந்தஸ்தை தூக்கி எறிந்துவிட்டு, டி20 அணி போல டெஸ்ட் அணியிலும் புது ரத்தம் பாய்ச்சினால் தான், இந்திய அணி மீண்டும் பழைய நிலைக்கு திரும்பும்!(AFP)
மற்ற கேலரிக்கள்