Preity Zinta: கண்ணக்குழி அழகி.. கிரிமினல் சைக்காலஜி டூ பாலிவுட் நாயகி.. நெஞ்சினிலே பாடலால் நெஞ்சில் குடி புகுந்த நடிகை
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Preity Zinta: கண்ணக்குழி அழகி.. கிரிமினல் சைக்காலஜி டூ பாலிவுட் நாயகி.. நெஞ்சினிலே பாடலால் நெஞ்சில் குடி புகுந்த நடிகை

Preity Zinta: கண்ணக்குழி அழகி.. கிரிமினல் சைக்காலஜி டூ பாலிவுட் நாயகி.. நெஞ்சினிலே பாடலால் நெஞ்சில் குடி புகுந்த நடிகை

Jan 31, 2025 07:00 AM IST Muthu Vinayagam Kosalairaman
Jan 31, 2025 07:00 AM , IST

  • HBD Preity Zinta: மணிரத்னம் இயக்கிய தில் சே, தமிழில் உயிரே படம் மூலம் தனது சினிமா பயணத்தை தொடர்ந்த பாலிவுட் நடிகை ப்ரீத்தி ஜிந்தா 25 ஆண்டுகளுக்கு மேலாக நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். ப்ரீத்தி ஜிந்தா என்றாலே நினைவுக்கு வருவது அவரது கண்ணக்குழி அழகுதான்.

பாலிவுட் சினிமாக்களில் 2000ஆவது ஆண்டு தொடக்கத்தில் முன்னணி ஹீரோயினாக வலம் வந்த ப்ரீத்தி ஜிந்தா, கான் நடிகர்களின் மனம் கவர்ந்த நாயகியாகவும் இருந்துள்ளார். இதுவரை 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கும் இவர் இன்றுதனது 50வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்

(1 / 8)

ஹிமச்சல பிரதேசம் மாநிலம் சிம்லாவை சேர்ந்த ப்ரீத்தி ஜிந்தா, அடிப்படையாக ஆங்கிலத்தில் ஹானர்ஸ், கிரிமினல் சைக்காலஜி மாணவியாக இருந்துள்ளார். மாடலிங் மீது ஏற்பட்ட ஆர்வத்தால் அந்த துறையில் நுழைந்து பின்னர் நடிகையாகியுள்ளார். 

(2 / 8)

1998இல் இவர் நடிகையான அறிமுகமான ஆண்டில் மூன்று படங்கள் வெளியாகின. இதில் சோல்ஜர் என்ற படத்துக்காக சிறந்த அறிமுக நடிகை பிலிம்பேர் விருதை வென்றார்

(3 / 8)

மணிரத்னம் இயக்கிய உயிரே படத்தில் நெஞ்சினிலே நெஞ்சினிலே பாடலில் ஷாருக்கானுடன் செம ஆட்டம் போட்டு தமிழ் ரசிகர்கள் நெஞ்சில் குடிபுகுந்தார். இவர் நேரடியாக தமிழ் படங்கள் எதுவும் இதுவரை நடிக்கவில்லை 

(4 / 8)

பல்வேறு விதமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் ப்ரீத்தி ஜிந்தா இதுவரை 2 முறை பிலிம்பேர் விருதை வென்றுள்ளார். மொத்தம் 30க்கும் மேற்பட்ட விருதுகளை பெற்றுள்ளார்

(5 / 8)

நடிகையாக மட்டுமில்லாமல், சமூக ஆர்வலம், தொழிலதிபராகவும் வலம் வருகிறார் ப்ரீத்தி ஜிந்தா. ஐபிஎல் போட்டிகளில் பஞ்சாப் அணியின் இணை உரிமையாளராக முதல் சீசனில் இருந்து ப்ரீத்தி ஜிந்தா, தனது அணி விளையாடும் போட்டியில் தவறாமல் ஆஜராகி சியர் செய்யும் நபராக இருந்துள்ளார்

(6 / 8)

அமெரிக்காவை சேர்ந்த தொழிலதிபரான ஜீன் குட்இனஃப் ​ என்பவரை திருமணம் செய்து கொண்ட ப்ரீத்தி ஜிந்தா, வாடகை தாய் மூலம் ஆண் மற்றும் பெண் இரட்டையர்களை பெற்றெடுத்து தாயாக இருந்து வருகிறார்

(7 / 8)

இரண்டு முறை இறப்பின் விளிம்பு வரை சென்று தப்பியுள்ளார் ப்ரீத்தி ஜிந்தா. இலங்கையின் கொழும்பு நகரில் நடந்த டெம்ப்டேஷன் இசை நிகழ்ச்சியில் ஏற்பட்ட வெடி விபத்தில் இருந்தும், இந்திய பெருங்கடல் ஏற்பட்ட சுனாமி விபத்தில் இருந்தும் தப்பியள்ளார். ஏராளமான ரசிகர்களையும், ஃபாலோயர்களையும் கொண்ட நடிகையாக தொடர்ந்து நடித்து வருகிறார்

(8 / 8)

மற்ற கேலரிக்கள்