பாலிவுட் முதல் ஹாலிவுட் வரை! இந்தியாவை தாக்கிய அழகிய புயல்! தீபிகா படுகோன் பிறந்தநாள் சிறப்பு பகிர்வு!
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  பாலிவுட் முதல் ஹாலிவுட் வரை! இந்தியாவை தாக்கிய அழகிய புயல்! தீபிகா படுகோன் பிறந்தநாள் சிறப்பு பகிர்வு!

பாலிவுட் முதல் ஹாலிவுட் வரை! இந்தியாவை தாக்கிய அழகிய புயல்! தீபிகா படுகோன் பிறந்தநாள் சிறப்பு பகிர்வு!

Jan 05, 2025 06:30 AM IST Suguna Devi P
Jan 05, 2025 06:30 AM , IST

  • கர்நாடகாவை சொந்தமாக கொண்டு இந்திய திரையுலகம் மற்றும் ஹாலிவுட் திரையுலகம் என அனைத்து இடத்திலும் அழியாத தடத்தை பதித்த நடிகை தீபிகா படுகோன் இன்று அவரது 39 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.  

தென் இந்தியாவில் இருந்து நிறத்தை முதன்மையாக கொண்டு இயங்கி வந்த பாலிவுட் திரையுலகை தன் வசீகர நிறத்தாலும், நடிப்பாலும் மயக்கிய பேரழகி தான் தீபிகா படுகோன். இந்திய சினிமா உலகில் அதிகம் சம்பாதிக்கும் நடிகராகவும் தீபிகா இருந்து வருகிறார். இவரது அசாத்திய நடிப்பாலும், கிறங்கடிக்கும் கண்ணாலும் பல ரசிகர்களின் மனதை ஆட்கொண்டவர். 

(1 / 7)

தீபிகா படுகோன் இந்தியவைச் சேர்ந்தவராக இருந்தாலும் பிறந்தது டென்மார்க்கில் தான். இவர்களது குடும்பத்தினர் அங்கு தான் இருந்தினர். 1986 ஆம் ஆண்டு தீபிகா பிறந்த பின்னர் 11 மாதங்களுக்கு அடுத்து பெங்களூருக்கு திரும்பினார். 

(2 / 7)

தீபிகா படுகோன் இந்தியவைச் சேர்ந்தவராக இருந்தாலும் பிறந்தது டென்மார்க்கில் தான். இவர்களது குடும்பத்தினர் அங்கு தான் இருந்தினர். 1986 ஆம் ஆண்டு தீபிகா பிறந்த பின்னர் 11 மாதங்களுக்கு அடுத்து பெங்களூருக்கு திரும்பினார். (Instagram )

தனது 8 வயது முதலே விளம்பரங்களில் நடித்து வந்த தீபிகா மாடலாகவும் இருந்தார். இவரது பல விளம்பரங்கள் வெளிவந்த போதிலும் 2004 ஆம் ஆண்டு வெளியான அவரது லிரில் சோப் விளம்பரம்தான் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. அதனைத் தொடர்ந்து ஹிமேஷ் ரேஷம்மியாவின் ஹிட் இசை வீடியோவான நாம் ஹை தேராவில் நடித்தார். 

(3 / 7)

பாலிவுட், ஹாலிவுட் என தூள் கிளப்பும் தீபிகா முதன் முதலில் கன்னட மொழியில் தான் ஹீரோயினாக அறிமுகமானார். இப்படத்தில் இவருடன் உபேந்திரா ஹீரோவாக நடித்து இருந்தார். இப்பொழுது அழகியாக புகழப்படும் தீபிகாவும் ஆரம்பத்தில் உருவகேலிக்கு ஆளாகினார். 

(4 / 7)

ஹிந்தியில் அறிமுகமான இவரது முதல் படமான ஓம் சாந்தி ஓம் படம் 2007 இல் வெளியாகி வட இந்தியா முழுவதும் புயலை கிளப்பியது. இதில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக் கானுடன் மிகவும் சிறப்பாக நடித்து இருப்பார். இவர் வரும் காட்சிகளுக்கு ரசிகர்கள் தீபிகாவை பார்க்கவில்லை. சாந்தி பிரியாவாகவே  பார்த்தனர். இப்படத்திற்காக பிலிம்பேரின் சிறந்த அறிமுக இந்தி நடிகை விருது தீபிகாவிற்கு கிடைத்தது. 

(5 / 7)

பாலிவுட் நடிகர், கிரிக்கெட் வீரர் என பலருடன் காதலில் இருப்பதாக அடிக்கடி தீபிகா படுகோன் குறித்து கிசுகிசு பரவியது. ஆனால் ரன்வீர் சிங்கை காதலித்து 2018 ஆம் ஆண்டில் திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இணைந்து நடித்த படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளன. 

(6 / 7)

தீபிகா மற்றும் ரன்வீர் இருவருக்கும் கடந்த செப்டம்பர் மாதம் ஒரு பெண் குழந்தை பிறந்தது. அதற்கு துவா எனப் பெயரிட்டுள்ளனர். தமிழில் கோச்சடையான் படத்திலும் ராஜினிகாந்திற்கு ஜோடியாக நடித்துள்ளார். மேலும் பல மொழிகளில் நடித்துள்ளார். பத்மாவதி, பாஜிராவ் மஸ்தானி, சப்பக் ஆகிய படங்கள் இவரது நடிப்பில் வெளிவந்த சிறந்த படங்களாக்கும். 

(7 / 7)

மற்ற கேலரிக்கள்