விறுவிறுப்பான களம்! பரபரப்பான சூழல்! 2024 இல் தமிழ்நாடு அரசியல்! என்னென்ன மாற்றங்கள்?
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  விறுவிறுப்பான களம்! பரபரப்பான சூழல்! 2024 இல் தமிழ்நாடு அரசியல்! என்னென்ன மாற்றங்கள்?

விறுவிறுப்பான களம்! பரபரப்பான சூழல்! 2024 இல் தமிழ்நாடு அரசியல்! என்னென்ன மாற்றங்கள்?

Dec 29, 2024 11:33 AM IST Suguna Devi P
Dec 29, 2024 11:33 AM , IST

  • 2024 ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் பல துறைகளுக்கு முன்னேற்றத்தை கொடுத்தாலும், சில துறைகள் வீழ்ச்சியை சந்தித்தன. அதிலும் தமிழக அரசியல் களம் சூடு பிடிக்கத் தொடங்கியது இந்த ஆண்டு எனக் கூறலாம். யாரும் எதிர்பாராத அதிரடி மாற்றங்கள் நடந்தேறின. 

கடந்த சில ஆண்டுகளாகவே தமிழ்நாட்டின் அரசியல் களம் விறுவிறுப்பாக சென்றுக் கொண்டிருக்கிறது. ஜெயலலிதாவின் மரணத்திற்கு பின்னர் இரண்டாக பிரிந்த அதிமுக, வலிமையான திமுக, தமிழ்நாட்டில் தாமரையை மலரச் செய்ய போராடும் பாஜக என ஏற்ற இறக்காமாகவே இருந்து வந்தது. மேலும் இந்த ஆண்டு உதித்த தவெக வும் இந்த வரிசையில் இணைந்துக் கொண்டது. அதில் ஒரு சில நிகழ்வுகளை மட்டும் இங்கு காணலாம். 

(1 / 7)

தமிழ்நாட்டின் 2021 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்ட உதயநிதி சேப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏ வாக வெற்றி பெற்றார். பின்னர் அமைச்சரவையில் விளையாட்டுத் துறை அமைச்சராக பதவி ஏற்றார். அந்த நிலையில் இந்த 2024 ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் மூன்றாவது துணை முதலமைச்சராக பதவி ஏற்றார். திமுகவின் இந்த செயல் பலரது விமர்சனத்திற்கு உள்ளாக்கியது.இது தமிழக அரசியலில் நடந்த திடீர் மாற்றம் ஆகும். 

(2 / 7)

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் இந்த ஆண்டு ஜூலை மாதம் 5ஆம் தேதி 8 பேர் கொண்ட கும்பலால் கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. தமிழ்நாட்டின் சட்ட ஒழுங்கையே கேள்விக்குள்ளாக்கியது. இது தொடர்பாக 8 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. 

(3 / 7)

தமிழ்நாட்டின் முன்னாள் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நீதிபதி அபய் ஓகா தலைமையிலான உச்சநீதிமன்ற அமர்வு ஜாமீன் வழங்கியது. பின்னர் அதிரடியாக அமைச்சராக பதவியேற்றார். ஊழல் வழக்கு காரணமாக கைதான செந்தில் பாலாஜியை அதிமுகவில் இருந்த போது முதல்வர் ஸ்டாலின் விமர்சித்து இருந்தார். ஆனால் திமுகவில் இணைந்த பின்னர் இவ்வாறு முட்டுக் கொடுத்து பேசுவது விமர்சனத்துக்குள்ளானது. 

(4 / 7)

இந்த ஆண்டு நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கியது மிகப்பெரிய விஷயமாக பேசப்பட்டது. அதிலும் தவெக வின் முதல் மாநில மாநாடு விக்கிரவாண்டி சாலையில் மிகவும் பிரம்மாண்டமாக நடந்து முடிந்தது. மத்தியில் மற்றும் மாநிலத்தில் ஆளும் இரு கட்சிகளையும் எதிர்ப்பதாக அறிவித்தார். மேலும் இவரது கொள்கைகள் முன்னுக்கு பின் முரணாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.  

(5 / 7)

விஜய் வெளியிட்ட அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட விசிக வின் ஆதவ் அர்ஜூனா அதன் கூட்டணி கட்சியான திமுகவிற்கு எதிராக பேசியதால் சர்ச்சை கிளம்பியது. இதன் காரணமாக விசிகவில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார். பின்னர் அவராகவே விசிகவில் இருந்து விலகுவதாக அறிவித்தார். தற்போது தவெகவில் இணைய இருப்பதாக பேசப்படுகிறது. 

(6 / 7)

பாட்டாளி மக்கள் கட்சியில் ராமதாஸ் மற்றும் அன்புமணிக்கும் இடையே நடந்த விவாதம் தான் இப்பொழுது பேசு பொருளாக மாறியுள்ளது. ராமதாஸ் அவரது மகள் வழி பேரனை இளைஞர் அணி தலைவராக நியமித்தது அன்புமணிக்கு பிடிக்க வில்லை. மேடையிலேயே இருவரும் விவாதம் செய்தனர். இது நான் தொடங்கிய கட்சி நான் கூறுவதை கேட்க வேண்டும். அப்படி இல்லையென்றால் வெளியே சென்று விட வேண்டியது தான் என ராமதாஸ் பேசினார். அன்புமணியும் எனது புதிய அலுவலகம் சென்னை பனையூரில் இருப்பதாக தெரிவித்தார்.  

(7 / 7)

மற்ற கேலரிக்கள்