Anshitha : ’பிரியங்கா சொன்ன விஷயம்.. பிக் பாஸ் வீடு கொடுத்த தைரியம் ’.. பிரேக் -அப் குறித்து மனம் திறந்த அன்ஷிதா!
- Anshitha : அன்ஷிதா பிக்பாஸ் ஃபினாலே மேடையில் தான் ஏற்கனவே காதலித்து வந்த நபரை பிரேக் -அப் செய்ததாக கூறினார். இதுதொடர்பாக அன்ஷிதா கொடுத்துள்ள சமீபத்திய பேட்டி பலரது கவனத்தினை ஈர்த்துள்ளது.
- Anshitha : அன்ஷிதா பிக்பாஸ் ஃபினாலே மேடையில் தான் ஏற்கனவே காதலித்து வந்த நபரை பிரேக் -அப் செய்ததாக கூறினார். இதுதொடர்பாக அன்ஷிதா கொடுத்துள்ள சமீபத்திய பேட்டி பலரது கவனத்தினை ஈர்த்துள்ளது.
(1 / 7)
பிக்பாஸ் தமிழ் சீசன் 8-ல் போட்டியாளர் விஷாலும் அன்ஷிதாவும் காதலிப்பதாக ஒரு பேச்சு ரசிகர்கள் மத்தியில் உலாவி வருகின்றது. அப்படி இருக்கும்போது, அன்ஷிதா பிக்பாஸ் ஃபினாலே மேடையில் தான் ஏற்கனவே காதலித்து வந்த நபரை பிரேக் -அப் செய்ததாக கூறினார்.
(2 / 7)
பிக்பாஸ் ஃபினாலே மேடையில் பேசிய அன்ஷிதா, பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு முன்னர், நான், அந்த நபரிடம் எப்போதும் கெஞ்சிக் கொண்டுதான் இருப்பேன். ஆனால் பிக்பாஸ் வீடு எனக்கு நம்பிக்கை கொடுத்துள்ளது. அந்த நபர் இனிமேல் என் வாழ்க்கையில் தேவையில்லை என்ற மனநிலையைக் கொடுத்தது. எனவே நான் எவிக்ட் ஆனதும் அந்த நபரின் வீட்டிற்கே சென்று, இனிமேல், நீ எனது வாழ்க்கையில் இல்லை, எனக்கு நீ வேண்டாம் என கூறிவிட்டேன் எனக் கூறினார்.
(3 / 7)
தற்போது அன்ஷிதா அளித்த பேட்டியில், இது தொடர்பாக அவர் பேசியுள்ளார். அதில் "அந்த நபரிடம் நான் முதலில் அன்பிற்காக பலமுறை கெஞ்சியுள்ளேன். ஆனால் காதல் யாரையும் கெஞ்ச வைக்காது. கெஞ்ச வைத்தால் அது காதலாக இருக்காது. நான் அப்போது என்னை நேசிக்காமல் இருந்துவிட்டேன். ஆனால் இப்போது நான் என்னை மிகவும் நேசிக்கின்றேன்.
(4 / 7)
ஒருமுறை பிரியங்கா அக்கா என்னிடம் ஒரு விஷயத்தைக் கூறினார். எப்போது உன்னை எதற்காகவும் விட்டுக் கொடுக்காதே, சுயமரியாதை யாருக்காவும் விட்டுக் கொடுக்காதே என்றார். பிரியங்கா அக்கா சொன்ன விஷயம், பிக் பாஸ் வீடு கொடுத்த தைரியம் என்னை மாற்றியது.
(5 / 7)
நான் அவரை வேண்டாம் என அவரது முகத்திற்கு நேராக சொன்னேன், சிரித்துக் கொண்டு கூறினேன். பிக் பாஸ் வீடு என்னையே என்னிடம் திருப்பிக் கொடுத்துள்ளது என தெரிவித்துள்ளார்.
(7 / 7)
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
மற்ற கேலரிக்கள்