தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Bigg Boss Archana: ‘அவர்கிட்ட நிறைய..’ அருணுடன் காதலா? - பேட்டியில் உண்மையை போட்டுடைத்த அர்ச்சனா!

Bigg Boss Archana: ‘அவர்கிட்ட நிறைய..’ அருணுடன் காதலா? - பேட்டியில் உண்மையை போட்டுடைத்த அர்ச்சனா!

May 22, 2024 07:15 PM IST Kalyani Pandiyan S
May 22, 2024 07:15 PM , IST

பாரதி கண்ணம்மா சீரியல் நடிகர் அருணும் காதலிப்பதாக செய்திகள் வெளியாகின. இது குறித்து அர்ச்சனா அண்மையில் கலாட்டா சேனலுக்கு கொடுத்த பேட்டியில் பேசியிருக்கிறார். - அர்ச்சனா!

Bigg Boss Archana: விஜய் டிவியில் ஒளிப்பரப்பான ராஜா ராணி 2 சீரியலில் நடித்து பிரபலமானவர் நடிகை அர்ச்சனா. இதனை தொடர்ந்து, அவருக்கு பிக்பாஸ் 7 நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொண்ட அர்ச்சனா,  அதில் தன்னுடைய திறமையை வெளிப்படுத்தி டைட்டில் வின்னராக மாறினார். இந்த நிலையில் இவரும், பாரதி கண்ணம்மா சீரியல் நடிகர் அருணும் காதலிப்பதாக செய்திகள் வெளியாகின. இது குறித்து அர்ச்சனா அண்மையில் கலாட்டா சேனலுக்கு கொடுத்த பேட்டியில் பேசியிருக்கிறார்.

(1 / 6)

இது குறித்து அவர் பேசும் போது, “அதை பார்க்கும் போது எனக்கு சிரிப்புதான் வந்தது. ஒரு கட்டத்தில் எப்பா டேய்.. என்பது போல எனக்கு இருந்தது.   

(2 / 6)

அதிகமான அறிவையும், திறமையும் கொண்ட ஒருவருடன், என்னுடைய நேரத்தை பகிர்வது எனக்கு முக்கியமான ஒன்றாக பார்க்கிறேன். அவரிடம் இருந்து நான் நிறைய விஷயங்களை கற்றுக்கொள்கிறேன்.   

(3 / 6)

வெளியில், ஒவ்வொரு நாளும் ஒவ்வொன்றை சொல்கிறார்கள். சிலவை நம்பகத்தன்மை கொண்டதாக இருக்கிறது. 

(4 / 6)

முன்னதாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிஆர்ஓ மூலமாகவே விளையாடி பேர் சம்பாதித்து இருக்கிறார் என்றும் அவரது வெற்றியும் அந்த வகையைச் சேர்ந்ததுதான் என்று விமர்சனங்கள் வைக்கப்பட்டன. இது குறித்து அர்ச்சனா பிஹைண்ட் வுட்ஸ் சேனலுக்கு கொடுத்த பேட்டியில், விளக்கம் கொடுத்திருந்தார். அதில் அவர் பேசும் போது, “எனக்கா 19 கோடி ஓட்டுகள்…அவ்வளவு தூரம் என்னை இந்த நிகழ்ச்சியில் மக்கள் பார்த்து இருக்கிறார்களா என்ற சந்தேகம் எனக்கே இருக்கிறது. உண்மையில் வீட்டிற்குள் இருக்கும் பொழுது நமக்கு எந்த ஒரு விஷயமும் தெரியாது.வார இறுதி நாட்களில் பேசும் விஷயங்களை வைத்து மட்டும் தான் நம்மால் நிலைமையை புரிந்து கொள்ள முடியும்.

(5 / 6)

அந்த சமயங்களில் கமல் சார் சொன்ன சில விஷயங்களை வைத்து தான் நான் சில விஷயங்களை திருத்திக் கொண்டேன். உண்மையில் நான் பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியே வரும் பொழுது மிகவும் அமைதியான நிதானமான ஒரு மனுஷியாக மாறி இருக்கிறேன். முன்பெல்லாம் மிகவும் அதிக ஆர்வத்தோடு உற்சாகமாக விஷயங்களை அணுகுவேன். இப்போது அது இல்லை. இன்னொரு விஷயம் நான் பிஆர்ஓ வைத்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் விளையாடினேன் என்ற விமர்சனம் இருக்கிறது.   அவர்கள் வழிக்கே நான் வருகிறேன். பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஜெயித்ததற்காக எனக்கு 50 லட்ச ரூபாய் கொடுத்திருக்கிறார்கள். எனக்கு 19 கோடி மக்கள் ஓட்டு போட்டு இருக்கிறார்கள். இதில் 18 கோடி பேர் என்னை பிடித்து ஓட்டு போட்டு இருக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். என்னை பிடிக்காமல் 1 கோடி பேர் ஓட்டு போட்டு இருக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். ஒரு ஓட்டுக்கு ஒரு ரூபாய் என்று வைத்தால் கூட, மொத்தமாக ஒரு கோடி ரூபாய் எனக்கு கிடைத்து விடும். அந்த ஒரு கோடி என் கையில் இருந்தால், நான் சின்ன பட்ஜெட்டில் ஒரு படத்தை தயாரித்து, அதில் கதாநாயகியாக நடித்து விடுவேன். அதற்காகத்தான் நான் இந்த நிகழ்ச்சிக்குள்ளேயே வந்தேன்.இந்த விமர்சனம் எப்படி இருக்கிறது என்றால், எனக்கு ஓட்டு போட்ட மக்களையே சந்தேகப்படுவது போல இருக்கிறது. சில இடங்களில் நான் ஜெயிக்க வேண்டும் என்று ஓட்டு போட்டதை விட, நான் ஜெயிக்க கூடாது என்று ஓட்டு போட்டவர்களே அதிகம். போற்றுவார் போற்றட்டும் தூற்றுவார் புழுதி வாரி தூவட்டும் என்று இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கிறேன்” என்று பேசினார்

(6 / 6)

டி20 உலகக் கோப்பை 2024

மற்ற கேலரிக்கள்