அட்டாக் மோடில் தீபக் மனைவி.. அருணை வெளுத்து வாங்கியது ஏன் தெரியுமா? இதுதான் காரணமாம்!
அருண் சொன்ன விஷயம் தன்னை மிகவும் காயப்படுத்தியதாக கூறிய தீபக்கின் மனைவி, அவர் உண்மையில் அப்படி கிடையவே கிடையாது என தெரிவித்தார்.
(1 / 5)
பிக்பாஸ் வீட்டில் தற்போது freezing task நடைபெற்று வருகிறது. இதில் தீபக் மனைவி மற்றும் மகன் இருவரும் பிக்பாஸ் வீட்டில் வருகை தந்துள்ளன. தீபக் மனைவி அருணிடம் சரமாரி கேள்வி கேட்டுள்ளார்.
(2 / 5)
தீபக் உடனான சண்டைக்கு பின் கார்டன் ஏரியாவிற்கு சென்று சத்யாவிடம் பேசும்போது, நான் இப்போ டிரெண்டிங்ல இருக்க ஹீரோ, என்கிட்டயே இப்படி நடந்துக்கிறாரு. அப்போ அவர் டிரெண்டிங்ல இருக்கும்போது அவருடைய அசிஸ்டண்ட் கிட்ட எப்படி நடந்திருப்பார் என்று பேசி இருந்தார். அது தன்னை மிகவும் காயப்படுத்தியதாக கூறிய தீபக்கின் மனைவி, அவர் உண்மையில் அப்படி கிடையவே கிடையாது என தெரிவித்தார்.
(3 / 5)
மேலும் பேசிய அவர், தீபக் அப்படி ஒன்றும் கிடையாது. அவருடைய பர்சனல் லைஃப் உங்களுக்கு தெரியாது. தீபக் உடன் நண்பர்கள் அனைவரும் இன்னமும் மிகவும் நெருங்கிய நண்பர்களாக இருக்கிறார்கள். அவருடைய நண்பர்களுக்கு ஒரு ப்ராஜெக்ட் கிடைத்தால் அது எங்களுக்கு கிடைப்பது போல இருக்கும் அவ்வளவு நாங்கள் மகிழ்ச்சியாக கொண்டாடுவோம். தீபக் அப்படிப்பட்ட நபர் கிடையாது. நீங்கள் அவரை இப்படி பேசியது எனக்கு பிடிக்கவில்லை எனக் கூறினார்.
(4 / 5)
அருண் இதை கேட்டு மௌனம் காக்கிறார். பின்னர் சாரி கேட்கிறார். இதன் பிறகு அவர் பல பொழுதுபோக்காக பேசி பிக்பாஸ் போட்டியாளர்களை மகிழ்ச்சியாக வைத்திருக்கிறார். ஆனாலும் அருண் மட்டும் முகத்தை சோகமாகவே வைத்துள்ளார். இதிலிருந்து மீண்டு பழையபடி அருண் விளையாடுவாரா? அல்லது இந்த விஷயத்தில் லாக்காகி அப்படியே அமைதி காப்பாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
மற்ற கேலரிக்கள்