BigBoss7: மாயா - பூர்ணிமாவின் பிரதீப் குறித்த பயம்.. கனவுலகில் வாழும் விக்ரம்.. ஹைலைட்ஸ்!
- பிக்பாஸ் நிகழ்ச்சியில் 42ஆவது நாளில் ட்ரெண்டிங் வீடியோக்களின் ஹைலைட் டேட்டாக்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
- பிக்பாஸ் நிகழ்ச்சியில் 42ஆவது நாளில் ட்ரெண்டிங் வீடியோக்களின் ஹைலைட் டேட்டாக்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
(1 / 4)
பிக்பாஸ் ஹவுஸில் மாயாவும் பூர்ணிமாவும் அருகருகே அமர்ந்து உணவினை உண்டுகொண்டே பேசுகின்றனர். 'வெளியே போயிட்டு நீங்க சேஃப் ஆக இருக்கமுடியுமா.. பிரதீப்புக்கும் ஃபாலோவர்ஸ் எல்லாம் இருக்காங்க’ என்கிறார், மாயா. அது டவுட் தான் என்கிறார், பூர்ணிமா. அதைத் தொடர்ந்து, 'நான் வெளியே போய் பிரதீப்பிடம் எல்லா உண்மையையும் சொல்லிடுவேன்' என்கிறார், மாயா. இது தொடர்பான வீடியோ சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது.
(2 / 4)
பிக் பாஸ் ஹவுஸில் பூர்ணிமா தான், அர்ச்சனாவுடன் வந்த புதிதில் நன்றாகப் பழகியதாகவும் இடையில் கடந்த வாரம் சில விஷயங்கள் பிடிக்கவில்லை என்பதால் தங்களுக்குள் சில விஷயங்கள் ஒத்துவரவில்லை எனக்கூறி லட்டு ஒன்றைத் தருகிறார். அப்போது கூல் சுரேஷ் எல்லோரும் சேர்ந்து விச்சு என்கிற விசித்ரா அம்மாவை காலி செய்ய முயற்சி செய்கின்றனர் என நக்கல் அடிக்கின்றார். அதற்கு ஒட்டுமொத்த குழுவும் சிரிக்கிறது. மேலும் பூர்ணிமா தான் எதிரியாக விசித்ராவைப் பார்ப்பதாக சொல்லி ஒரு பொருளை ஒப்படைக்கிறார்.
(3 / 4)
பிக்பாஸில் சிலை மாதிரியான டாஸ்கில் சரவண விக்ரம் ஒரு ஸ்டேஜ் மீது ஏறி குரங்குபோல் போஸ் கொடுக்கிறார். அப்போது அருகில் வரும் பிராவோ இவர் யார் என கேட்கிறார், இவர் தான் ஸ்பைடர் மேன், சக்திமானுக்கெல்லாம் முன்னோடி என அறிமுகப்படுத்துகிறார், கானா பாலா. அப்போது அங்கு இருக்கும் நபர்களுக்கு சிரிப்பினை அடக்கமுடியவில்லை. பின் பிராவோ, அந்த சிலைபோன்ற மனிதரின் அருகில் சென்று படம் எடுத்துக்கொள்கிறார்.
மற்ற கேலரிக்கள்