பலர் பணக்காரர்கிட்ட பேசுவாங்க.. எங்ககூட பேசமாட்டாங்க.. பிக்பாஸில் என் மகன் ஜெயிப்பார்.. முத்துக்குமரன் தாய்-தந்தை பேட்டி
- பலர் பணக்காரர்கிட்ட தான் பேசுவாங்க.. எங்ககூட பேசமாட்டாங்க.. பிக்பாஸில் முத்துக்குமரன் ஜெயிப்பார்.. தாய்-தந்தை உருக்கமான பேட்டியளித்துள்ளனர்.
- பலர் பணக்காரர்கிட்ட தான் பேசுவாங்க.. எங்ககூட பேசமாட்டாங்க.. பிக்பாஸில் முத்துக்குமரன் ஜெயிப்பார்.. தாய்-தந்தை உருக்கமான பேட்டியளித்துள்ளனர்.
(1 / 6)
பிக்பாஸ் தமிழ் சீசன் 8ல் வெற்றிகரமாக பங்கேற்பாளராக இருப்பவர், முத்துக்குமரன். இவரது பூர்வீகமான ஊர், சிவகங்கை மாவட்டம், கல்லல். அங்கு வசிக்கும் முத்துக்குமரனின் தாய் மற்றும் தந்தை முத்துக்குமரனின் பிரத்யேக யூட்யூப் சேனலில் அளித்த பேட்டியில் கூறியிருந்ததின் தொகுப்பு அடுத்தடுத்து கொடுக்கப்பட்டுள்ளது. அவையாவன:முத்துக்குமரனின் தாய்: பிக்பாஸ் புகழ் முத்துக்குமரனின் அம்மா, முத்துக்குமரன் நல்லா விளையாண்டுட்டு இருக்கார். இயற்கையிலேயே அவர் அப்படி தான். ஜெயிச்சிட்டு வந்திடுவான் என்கிற ஃபீலிங் இருக்கு.
(2 / 6)
முத்துக்குமரனின் தந்தை: சென்னையில் இருக்கும்போது தினமும் அவங்க அம்மாவுக்கு போன் அடிச்சிடுவார். அம்மா சாப்பிட்டீங்களா, அப்பா சாப்பாட்டாங்களான்னு தினந்தோறும் அடிச்சிக் கேட்பார். இப்போது பிக்பாஸ்க்குள் போனதுக்குப் பின், அவர்கூட பேசமுடியலையேன்னு வருத்தமாக இருக்கு. புள்ள சாப்பாட்டாரோ இல்லையோன்னு கவலையா இருக்கு. பிக்பாஸ் ஷோக்குள் போகுறது எல்லாம் கன்ஃபார்ம் ஆகிட்டு, மூன்று நாட்களுக்கு முன்புதான் சொன்னார்.
(3 / 6)
முத்துக்குமரனின் அம்மா: நடிகர், நடிகைகளை தான் பிக்பாஸ் வீட்டுக்குள் பார்க்குறோம். என் புள்ள இருக்காங்க அப்படின்னவுடன், இதுக்குமேல் என்னப்பா வேணும். சொன்னவுடன் நம்பவே இல்லை. ஆனால், முன்னாடி பிக்பாஸ் மாதிரி விஷயம் கிடைச்சால் என்னம்மா சொல்லுவீங்கன்னு கேட்பான். நான் கிடைக்கும்போது பார்க்கலாம்ன்னு சொல்வேன். எப்பயுமே முயற்சி செய்றது எல்லாத்தையும் சொல்லமாட்டார், முத்துக்குமரன். ஜெயிச்சதுக்கப்புறம்தான் சொல்வார். எங்கு போனாலும் ஜெயிச்சிட்டு தான் வருவார், குமரன். அவருடைய சிரமங்களை எல்லாம் வெளியில் சொல்லமாட்டாங்க. சாப்பிட்டிருக்கமாட்டான் போன் செய்யும்போது, ஆனால், சாப்பிட்டேன் சொல்வாங்க.முத்துக்குமரனின் தந்தை: பொதுவாகவே சாமி, குமரன் ஒரு வலுவான பிள்ளை தான். ஆரம்பத்தில் சோர்வாக இருந்தால் கூட, அதன்பின் அவரை நாங்க வலுவான குழந்தையாக மாத்திட்டோம். உணவுப் பழக்க வழக்கம், உடற்பயிற்சி, கபடி, கிரிக்கெட்னு போய் உடலை வலிமைப்படுத்தினார். நம்மவீட்டுப்புள்ள பிக்பாஸுக்குள் போய் ஜெயிப்பார்னு நம்பிக்கை பரிபூரணமாக இருந்தாலும், அவரை பிரிஞ்சு இருக்குற கவலையும் இருந்துச்சு.
(4 / 6)
முத்துக்குமரனின் அம்மா: சின்ன வயசிலேயே நான் சொல்வேன். முயல் வேட்டைக்குப் போயிட்டு, முயலை பிடிச்சிட்டு வர்றது பெரிய விஷயமில்லை. சிங்க வேட்டைக்குப் போய் நான் தோத்திட்டு வந்திட்டாக்கூட பரவாயில்லைனு தான் நான் சொல்லுவேன். அதெல்லாம் அவன் மூளைக்குள்ள இருக்கு போலிருக்கு. பத்திரமாக இருந்துக்கணும்பா. நேரத்துக்கு சாப்பிட்டுக்கணும். நேரத்துக்கு தூங்கிக்கணும்பா. அதை மட்டும்தான் சொல்லிக்குவேன்.நான் நேரில் போய் பார்த்தது பிக்பாஸ் ஷோ தான். விஜய்சேதுபதி சார் மிகப்பெரிய நடிகன். பிரபலமானவர். ஆனால், அந்த இடத்தில் அவர் எனக்கு குமரன் மாதிரிதான் தெரிஞ்சுச்சு. இன்னொரு புள்ள. மைக்கைக் கொண்டு வந்து கையில் கொடுத்ததும் பேசத்தெரியாதுன்னு தான் சொன்னேன். உடனே, அவங்க கேட்குறது பதில் சொல்லுங்கன்னு தான் சொன்னாங்க. அவங்க கேட்டதுக்குப் பதில் சொன்னேன். அது பெஸ்ட் ஆகிடுச்சு.
(5 / 6)
முத்துக்குமரனின் அப்பா: தனக்கு ஒரு நல்ல மேடை கிடைக்கணும்னு எதிர்பார்ப்பு குமரன்கிட்டேயும் இருந்துச்சு. கிடைச்சதும் அவரும் சந்தோஷப்பட்டார். பிக்பாஸ் நிறைய பேர் பார்க்கிற நிகழ்ச்சி, இதில் போனதுக்குப் பின் நிறைய பாப்புலாரிட்டி கிடைக்கும்ன்னு நினைச்சது தான்.
(6 / 6)
முத்துக்குமரனின் அம்மா: ஒன்னு பணக்காரனாக இருக்கணும். இல்லையென்றால், அழகாக டிரெஸ் செய்திருக்கணும். இல்லையென்றால், அழகாக இருக்கணும். அப்படி இருந்தால் இன்னிக்குப் பேசுவாங்க. இதுதான் சமுதாயத்தில் இருக்கு. அப்படி இருக்கும்போது, பேசாதவங்களும் பேசுறாங்கன்னா, குமரன். எங்களுக்கெல்லாம் பெரிய அதிசயம். ஆச்சரியம். நாங்க சின்னதில் இருந்து ரொம்ப கஷ்டப்பட்டு வந்தவங்க தான். இன்னிக்கு இது மிகப்பெரியது எங்களுக்கு’’ என சொல்லிமுடித்தார்.நன்றி: முத்துக்குமரன் யூட்யூப் சேனல்
மற்ற கேலரிக்கள்