Abhishek Raja: விவாகரத்தில் முடிந்த முதல் கல்யாணம்; காதலியை 2 வதாக கரம் பிடித்த பிக்பாஸ் அபிஷேக் ராஜா - விபரம் இங்கே!
Abhishek Raja: அபிஷேக் ராஜா கடந்த 2017 ம் ஆண்டு தீபா நடராஜனை திருமணம் செய்தார். ஆனால் அவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில் இருவரும் கடந்த 2019ம் ஆண்டு விவாகரத்து பெற்றுக்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. - விபரம் இங்கே!

அபிஷேக் ராஜாவிற்கு இரண்டாவதாக திருமணம் நடந்திருக்கிறது. அவர் தன்னுடைய காதலியும், பத்திரிகையாளருமான ஸ்வாதி நாகராஜனை கரம் பிடித்திருக்கிறார். இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
முறிந்து போன முதல் கல்யாணம்
முன்னதாக காதலர் தினத்தன்று, தன்னுடைய காதலியை அறிமுகப்படுத்திய அபிஷேக் ராஜா "குறைபாடுள்ள என்னை ஒரு பார்ட்னராக மாற்றியதற்கு நன்றி. என்னை விட்டுக்கொடுக்காததற்கும் நன்றி!” என்று குறிப்பிட்டு இருந்தார்.
அபிஷேக் ராஜா கடந்த 2017 ம் ஆண்டு தீபா நடராஜனை திருமணம் செய்தார். ஆனால் அவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில் இருவரும் கடந்த 2019ம் ஆண்டு விவாகரத்து பெற்றுக்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
யூடியூபராக இருந்து பல திரைப்படங்களை விமர்சனம் செய்து பிரபலமானவர் அபிஷேக்ராஜா. அதில் கிடைத்த பிரபலத்தின் வாயிலாக, பிக்பாஸ் தமிழ் 5 ஆவது சீசனிலும் போட்டியாளராக களமிறங்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. வீட்டிற்குள் அவர் சக போட்டியாளர்களுடன் நடந்து கொண்ட விதமும், பேசிய வார்த்தைகளும் மக்களிடம் கடுமையான விமர்சனங்களை பெற்றன.
நெட்டிசன்கள் இவர் பேசுவதை க்ரிஞ்ச் என்று கூறி ட்ரோல் செய்தனர். இதனையடுத்து அவர் அவர் பிக்பாஸில் நுழைந்த 21ம் நாள் வெளியேற்றப்பட்டார்.அபிஷேக் ராஜா ஜாம் ஜாம் என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குநராகவும் அறிமுக இருக்கிறார். இந்தப்படத்தை டில்லி பாபு தயாரிக்கிறார். இந்தப்படத்திற்கு தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்கிறார்.
முன்னதாக அபிஷேக் ராஜா விஜய் குறித்து ஹிந்துஸ்தான் தமிழுக்கு அளித்த பேட்டி இங்கே!
அவர் பேசும் போது, “மற்ற நடிகர்களை போல அவர் ஜிம்மே கதின்னெல்லாம் கிடக்கமாட்டார். ஆனா எப்படி தன்னுடைய உடல ட்ரெய்ன் பண்ணனும், எப்படி சாப்பிடனும் போன்றவற்றிலெல்லாம் விஜய் ரொம்பத் தெளிவு.
6 மணிக்கு மேல எதுவும் சாப்பிட மாட்டார்.
நியூஸ பயங்கரமா ஃபாலோ பண்ணுவார். அந்த சமயத்தில ஏதாவது ஒரு விஷயம் அவர ரொம்ப பாதிச்சிருச்சுன்னா அப்படியே ஆஃப் ஆகி விடுவார். ஏன் இப்படியெல்லாம் நடக்குதுன்னு யோசிச்சுக்கிட்டே இருபபார். ஈஸியா ஹர்ட் ஆகிடுவார்.
இந்த சமூகத்த நல்ல நிலைக்கு கொண்டு வரணும் அப்படிங்கிற எண்ணம் விஜய்க்கு எப்போதும் மைண்டில ஓடிக்கிட்டே இருக்கும்.
இணையத்தில விஜய் பயங்கர ஆக்டிவ். யாருக்கு யாரை புடிச்சிருக்கு, இன்னைக்கு மக்களோட ரசனை எப்படி இருக்கு உள்ளிட்ட பல விஷயங்களை அங்க கவனிச்சிக்கிட்டே இருப்பார்.
மிகவும் யதார்த்தாவாதி. அப்படி இருக்குறது விஜய்க்கு ரொம்ப பிடிக்கும். அப்படி இருக்குறதுனாலத்தான் அவரால் ஜெயிச்சிக்கிட்டே இருக்க முடியுது. அவரை அவரே நல்லா கலாய்ச்சிப்பார். அவரை அவரே விமர்சனம் செய்வார்.
காலத்துக்கு ஏத்தமாதிரி நம்மள மாத்திக்கிட்டே இருக்கணும் அப்படிங்கிறதுல ரொம்ப ரொம்ப கவனமா இருப்பார்.அதற்கு உதாரணம்தான்.. முன்பெல்லாம் அமைதியா நிகழ்ச்சிகளுக்கு வந்து போன விஜய் யாரும் எதிர்பார்க்காத வகையில பேச ஆரம்பிச்சது.
அவர் அவரோட வேலையை மிகச்சரியா செஞ்சிக்கிட்டே இருப்பார். தனக்குத்தான் தான் போட்டின்னு நினைப்பார். கடைசி படத்தை விட இந்தப்படம் எவ்வளவு வசூல் பண்ணுச்சு.. அடுத்தப்படம் எவ்வளவு பண்ணனும் அப்படிங்கிற கணக்கில மட்டும்தான் அவரோட கவனம் இருக்கும். விஜய்க்கு பஞ்சுவாலிட்டி ரொம்ப ரொம்ப முக்கியம். அதுல அவரு ரொம்ப ரொம்ப ஸ்ரிக்ட்.” என்று சொல்லி விடை பெற்றார்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

டாபிக்ஸ்