Bigg Boss Aishu Father: பேச்சை கேட்காத ஐஷு.. கும்பமே பாதிக்கட்டது.. வேதனையில் ஐஷு தந்தை!
ஐஷுவின் தந்தை சமீபத்தில் தன் மகள் தொடர்பாக பேட்டி அளித்து இருந்தார்.
(2 / 5)
ஐஷுவின் தந்தை சமீபத்தில், India Glitz Tamil யூடியூப் சேனலில் மகள் தொடர்பாக பேட்டி அளித்து இருந்தார். அதில், “ பிக் பாஸ் பற்றி எந்த ஒரு முன் ஏற்பாடும் இல்லாமல் தான் இருந்தது. செப்டம்பர் 10 ஆம் தேதி தான் தெரியும். ஐஷுக்கும் அப்போது தான் தெரியும். ஐஷுவை அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டாம் என தொடர்ந்து அறிவுறுத்தி வந்தேன். 20 முறை சென்னை வந்தேன். நிகழ்ச்சி தொடர்பாக எவ்வளவு என்னால் சொல்ல முடியுமோ சொன்னேன்.
(3 / 5)
ஐஷு, பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாமல் இருப்பதற்கு என்னவெல்லாம் செய்ய முடியுமோ அந்த அளவுக்கு செய்தேன். இந்த இடம் வேண்டாம் என எவ்வளவோ சொன்னேன். ஒரு கட்டத்தில் ஐஷு பிடிவாதமாக இருந்த காரணத்தினால் தவிர்க்க முடியாமல் அனுமதி கொடுத்தேன்.
(4 / 5)
என் குடும்பத்தில் அனைவரும் இன்ஸ்டாகிராம் பயன்படுத்துகிறார்கள். இத்தனை வருடங்களாக எந்த ஒரு நெகட்டிவ் விமர்சனத்தையும் எதிர்கொண்டது இல்லை. ஆனால் ஐஷு பிக் பாஸ் போனதற்குப் பிறகு எங்கள் வாழ்க்கையே மொத்தமாக மாறியது. முழுக்க நெகட்டிவ் விமர்சனங்கள் தான் இருக்கும்.
(5 / 5)
வெளியே வந்து ஐஷு போட்ட மனிப்பு கடிதம் பற்றி எனக்கு தெரியாது. அவராக தான் அதை எழுதினார். 20 நிமிடம் முன்பாக தான் என்னிடம் காட்டினார். முழு மனதாக தான் அவர் அந்த கடிதம் எழுதினார். ஒரு குறிப்பிட்ட காலம் அந்த கடிதம் இன்ஸ்டாகிராம் தளத்தில் இருந்தது. அதற்கு பிறகு அவரே அதை எடுத்துவிட்டார். ஒரு போட்டியாளரை உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றால் அவரை விமர்சிக்க வேண்டும். அவர்களுடைய குடும்பத்தையும் சேர்த்து விமர்சிப்பது ரொம்பவே தவறானது. எங்களுடைய வாழ்க்கையில் ஒரு பெரிய அலை அடித்து ஓய்ந்தது போல் இருக்கிறது. என் குடும்பம் முழுக்க மன உளைச்சலில் இருந்தது.
மற்ற கேலரிக்கள்





