Hero Xoom 160: எக்கசக்க புது அம்சங்கள்.. புத்தம் புது பொலிவுடன் ஹீரோ நிறுவனத்தின் ஹீரோ ஜூம் 160 மோட்டர் சைக்கிள்
- Hero Xoom 160: ஹீரோ ஜூம் 160, 14.6 பிஹெச்பி மற்றும் 14 என்எம் டார்க்கை வெளிப்படுத்தும் ஒரு திரவ-குளிரூட்டப்பட்ட எஞ்சின் மூலம் இயக்கப்படுகிறது. இதன் விலை ரூ. 1.48 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) வரை இருக்கும் என கூறப்படுகிறது
- Hero Xoom 160: ஹீரோ ஜூம் 160, 14.6 பிஹெச்பி மற்றும் 14 என்எம் டார்க்கை வெளிப்படுத்தும் ஒரு திரவ-குளிரூட்டப்பட்ட எஞ்சின் மூலம் இயக்கப்படுகிறது. இதன் விலை ரூ. 1.48 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) வரை இருக்கும் என கூறப்படுகிறது
(1 / 10)
ஹீரோ ஜூம் 160, பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ 2025இல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது உற்பத்தியாளரின் வரிசையில் முதலிடத்தில் இருக்கும் ஒரு மேக்ஸி-ஸ்கூட்டர் ஆகும். இந்த ஸ்கூட்டர் முதலில் EICMA (சர்வதேச சைக்கிள், மோட்டார் சைக்கிள் மற்றும் துணைக்கருவிகள் கண்காட்சி) 2023இல் அறிமுகமானது
(2 / 10)
ஹீரோ ஜூம் 160, டியூப் இல்லாத அகலமான பிளாக்-பேட்டர்ன் டயர்களால் மூடப்பட்ட 14 இன்ச் அலாய் வீல்களுடன் வருகிறது. முன் டயர் 120/70 அளவிலும், பின்புற டயர் 140/60 அளவிலும் உள்ளது. ஸ்கூட்டர் பினிஷிங் மேட் க்ரீன் மற்றும் கருப்பு நிறத்தில் அழகாக அலங்கரிக்கப்பட்டுள்ளது. ஒற்றை-துண்டு இருக்கையும் தைக்கப்படுகிறது
(3 / 10)
ஹீரோ ஜூம் 160ஐ இயக்குவது ஒரு ஒற்றை சிலிண்டர், திரவ குளிரூட்டப்பட்ட எஞ்சின் ஆகும். இது 8,000 rpmஇல் 14.6 bhp அதிகபட்ச சக்தியையும் 6,500 rpmஇல் 14 Nm உச்ச முறுக்குவிசையையும் வெளியிடுகிறது. கியர்பாக்ஸ் CVT யூனிட் உடன் ஒரு உலர் மையவிலக்கு கிளட்ச்சை கொண்டதாக உள்ளது
(4 / 10)
முன்பக்கத்தில் டெலஸ்கோபிக் ஹைட்ராலிக் ஷாக் அப்சார்பர்களாலும், பின்புறத்தில் இரட்டை ஷாக் அப்சார்பர்களாலும் சஸ்பென்ஷன் கடமைகள் செய்யப்படுகின்றன. இது ஹீரோ i3s சைலண்ட் ஸ்டார்ட் தொழில்நுட்பத்தையும் வழங்குகிறது
(5 / 10)
ஸ்கூட்டரில் இரட்டை அறை ஹெட்லேம்ப்கள் மற்றும் பொசிஷன் லேம்ப்கள் பொருத்தப்பட்டுள்ளன. இவைகளுடன் பின்புறத்தில் இடம்பிடித்திருக்கும் டெயில் லேம்ப் உட்பட அனைத்தும் LED யூனிட்களாக இருக்கின்றன
(6 / 10)
ஹீரோ ஸ்கூட்டரில் ப்ளூடூத் இணைப்பு மற்றும் டர்ன்-பை-டர்ன் நேவிகேஷன் ஆகியவற்றை ஆதரிக்கும் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டரை பொருத்தப்பட்டுள்ளது. இது ரைடருக்கு அனைத்து முக்கிய தகவல்களையும் காண்பிக்கும்
(7 / 10)
ஹீரோ ஜூம் 160 ரிமோட் சீட் ஓப்பனிங் கொண்ட ஸ்மார்ட் சாவியுடன் வருகிறது. தேவைப்படும் பட்சத்தில் ரைடர்கள் இருக்கைக்கு அடியில் பொருட்களை சேமித்து வைத்து கொள்ள உதவும். இரவில் உதவுவதற்கு பூட் லைட்டும் உள்ளது
(8 / 10)
ஹீரோ ஜூம் 160 நான்கு வண்ண விருப்பங்களை கொண்டுள்ளன. அதன்படி மேட் ரெயின்ஃபாரெஸ்ட் கிரீன், சம்மிட் ஒயிட், கேன்யன் கிரீன் மற்றும் மேட் வோல்கானிக் கிரீன்
(9 / 10)
ஹீரோ ஜூம் 160 142 கிலோ எடையும், 7 லிட்டர் எரிபொருள் டேங்கையும் கொண்டுள்ளது. பரிமாணங்களை பொறுத்தவரை, ஹீரோ ஜூம் 160 1,983 மிமீ நீளம், 772 மிமீ அகலம் மற்றும் 1,214 மிமீ உயரம் கொண்டது
மற்ற கேலரிக்கள்