Bhagyaraj Interview: ‘முந்தானை முடிச்சு’ செய்த வேலை.. முகம் சுழித்த சிவாஜி வீட்டு பெண்கள்! - கே.பாக்யராஜ்!
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Bhagyaraj Interview: ‘முந்தானை முடிச்சு’ செய்த வேலை.. முகம் சுழித்த சிவாஜி வீட்டு பெண்கள்! - கே.பாக்யராஜ்!

Bhagyaraj Interview: ‘முந்தானை முடிச்சு’ செய்த வேலை.. முகம் சுழித்த சிவாஜி வீட்டு பெண்கள்! - கே.பாக்யராஜ்!

Feb 13, 2024 09:21 AM IST Kalyani Pandiyan S
Feb 13, 2024 09:21 AM , IST

என்னை பார்த்தவுடன் அவர் வா பாக்கி... என்று ஏற்கனவே நான் அவருக்கு பரிச்சயமானவர் போல பேசினார். எனக்கு அது ஆச்சரியமாக இருந்தது. - பாக்யராஜ்!

சிவாஜி உடனான முதல் சந்திப்பு குறித்து இயக்குநர் பாக்யராஜ் மாயம் யூடியூப் சேனலுக்கு கடந்த ஒரு வருடத்திற்கு முன்னர் பேட்டியளித்தார்.  அதில் அவர் பேசும் போது, “தாவணிக்கனவுகள் கதையை எழுதி முடித்தவுடன், அந்தக் கதையில் ஒரு ஓய்வு பெற்ற மிலிட்டரி ஆபீசர் கேரக்டர் இடம் பெற்று இருந்தது. அந்த கேரக்டரை நான் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் வழியில் வாழ்வது போல வடிவமைத்து இருந்தேன். அந்த கேரக்டரில் நடிகர் சிவாஜி நடித்தால் நன்றாக இருக்கும் என தோன்றியது. இதனையடுத்து அவரிடம் கதை சொல்ல சென்றேன்.  

(1 / 5)

சிவாஜி உடனான முதல் சந்திப்பு குறித்து இயக்குநர் பாக்யராஜ் மாயம் யூடியூப் சேனலுக்கு கடந்த ஒரு வருடத்திற்கு முன்னர் பேட்டியளித்தார்.  அதில் அவர் பேசும் போது, “தாவணிக்கனவுகள் கதையை எழுதி முடித்தவுடன், அந்தக் கதையில் ஒரு ஓய்வு பெற்ற மிலிட்டரி ஆபீசர் கேரக்டர் இடம் பெற்று இருந்தது. அந்த கேரக்டரை நான் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் வழியில் வாழ்வது போல வடிவமைத்து இருந்தேன். அந்த கேரக்டரில் நடிகர் சிவாஜி நடித்தால் நன்றாக இருக்கும் என தோன்றியது. இதனையடுத்து அவரிடம் கதை சொல்ல சென்றேன்.  (thequint)

என்னை பார்த்தவுடன் அவர் வா பாக்கி... என்று ஏற்கனவே நான் அவருக்கு பரிச்சயமானவர் போல பேசினார். எனக்கு அது ஆச்சரியமாக இருந்தது. காரணம் என்னை யாரும் அவ்வளவு சீக்கிரத்தில் பாக்கி என்று அழைக்க மாட்டார்கள்.இதனையடுத்து நான் அவருக்கு கதையை விவரித்தேன் கதை அவருக்கு பிடித்திருந்தது. படம் செய்யலாம் என்று ஒத்துக் கொண்டார்.  

(2 / 5)

என்னை பார்த்தவுடன் அவர் வா பாக்கி... என்று ஏற்கனவே நான் அவருக்கு பரிச்சயமானவர் போல பேசினார். எனக்கு அது ஆச்சரியமாக இருந்தது. காரணம் என்னை யாரும் அவ்வளவு சீக்கிரத்தில் பாக்கி என்று அழைக்க மாட்டார்கள்.இதனையடுத்து நான் அவருக்கு கதையை விவரித்தேன் கதை அவருக்கு பிடித்திருந்தது. படம் செய்யலாம் என்று ஒத்துக் கொண்டார்.  (thequint)

அன்றைய சந்திப்பில் இன்னொரு சுவாரசியமான சம்பவமும் நடந்தது. அவர் என்னை பார்த்து... பாக்கி நீ ரொம்ப மோசம் என்றார். சிவாஜி சார் அப்படி சொன்னவுடன் எனக்கு ஒன்றுமே ஓடவில்லை. உடனே நான் அவரிடம் இப்போதுதான் நான் உங்களை முதன்முறையாக பார்க்கிறேன். பார்க்கும் பொழுதே இப்படி சொல்கிறீர்களே என்று கேட்டேன். அதற்கு அவரோ, ஆமாம் நீ எங்கள் வீட்டுப் பெண்களையெல்லாம் கெடுத்து வைத்திருக்கிறாய் என்றார். தொடர்ந்து பேசிய அவர் ஒரு சுவாரசியமான சம்பவத்தை பகிர்ந்தார்.  

(3 / 5)

ஒரு நாள் ஷூட்டிங் முடிந்து வீட்டிற்கு வந்திருக்கிறார். அப்போது வீட்டில் உள்ள பெண்கள் அனைவரும் நான் இயக்கிய ‘முந்தானை முடிச்சு’ படத்திற்கு சென்று இருக்கிறார்கள். சரி வீட்டில்தான் யாருமில்லையே... என்று சொல்லி அவர் கீழே அமர்ந்து இருந்திருக்கிறார்.  

(4 / 5)

சிறிது நேரத்திற்கு பிறகு அவர்கள் வந்திருக்கிறார்கள். அவர்களிடம் எங்கே சென்று இருந்தீர்கள் என்று சிவாஜி கேட்க, அவர்கள் முந்தானை முடிச்சு என்று சொன்னதோடு, படம் ஆபாசபடம் போல இருப்பதாக சொல்லி முகம் சுளித்திருக்கிறார்கள். ஆனால் ஒரு நாள் இடைவெளியில் மீண்டும் அந்தப்படத்தை அவர்கள் பார்க்கச் சென்று விட்டார்கள். அந்த நாளும் சிவாஜி கீழே காத்திருக்க... எல்லோரும் வந்து இருக்கிறார்கள். இதைப்பார்த்த சிவாஜி எல்லாரையும் கலாய்த்து தள்ளியிருக்கிறார். அதற்காகதான் அவர் என்னை அப்படி சொல்லி இருக்கிறார்.

(5 / 5)

மற்ற கேலரிக்கள்