தமிழ்நாட்டில் புத்தாண்டு கொண்டாட இது தான் சரியான இடம்! குறிச்சு வச்சுக்கோங்க! எல்லாரும் போகலாம்!
- புத்தாண்டு என்றாலே மக்கள் அனைவரும் குஷியாகி விடுகிறார்கள். அந்த அளவிற்கு அதில் கொண்டாட்டமும், மகிழ்ச்சியும் இணைந்து ஒரு சேர கிடைக்கின்றன. இந்த புத்தாண்டை உங்களது மனம் மகிழும் வகையில் சிறப்பிக்க தமிழ்நாடுகளிலேயே பல இடங்கள் உள்ளன.
- புத்தாண்டு என்றாலே மக்கள் அனைவரும் குஷியாகி விடுகிறார்கள். அந்த அளவிற்கு அதில் கொண்டாட்டமும், மகிழ்ச்சியும் இணைந்து ஒரு சேர கிடைக்கின்றன. இந்த புத்தாண்டை உங்களது மனம் மகிழும் வகையில் சிறப்பிக்க தமிழ்நாடுகளிலேயே பல இடங்கள் உள்ளன.
(1 / 6)
தமிழ்நாடு பல விதமான வித்தியாசமான இடங்களுக்கு பிரபலமானதாகும். வெளிநாட்டினர் கூட நம் தமிழ் நாட்டினைத் தேடி வருகின்றனர். உலக அளவில் பிரபலமான நமக்கு அருகில் உள்ள இடங்களை குறித்து நாம் அறிந்து வைத்திருப்பதில்லை. 2025 ஆம் ஆண்டு பிறக்கப் போகிறது. இந்த புத்தாண்டை சிறப்பாக கொண்டாட சில இடங்கள் உள்ளன. அங்கு சென்று சிறப்பாக கொண்டாடுங்கள். (Pixabay)
(2 / 6)
கோயம்புத்தூரில் இருந்து சுமார் 190 கிமீ தொலைவில் உள்ள அழகிய மலைவாசஸ்தலமான ஏற்காடு புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு பிரபலமான இடமாகும். இது சூரிய உதயம் மற்றும் சூரிய அஸ்தமன காட்சிகளுக்கு பெயர் பெற்றது, மேலும் புகைப்படம் எடுப்பதற்கான பல காட்சிகள் உள்ளன. இங்கு சென்றால் ஒரு புது விதமான அனுபவம் கிடைப்பது உறுதி.
(3 / 6)
மலைகளின் ராணி" என்று அழைக்கப்படும் ஊட்டி, ஆடம்பர ஹோட்டல்கள் முதல் நெருக்கமான அமைப்புகள் வரை புத்தாண்டைக் கொண்டாட பல்வேறு இடங்களை வழங்குகிறது. தாவரவியல் பூங்கா, மலர் கண்காட்சி, படகு சவாரி மற்றும் மலை ரயில் என ஓட்டு மொத்தமாக கொண்டாட ஒரு சிறப்பான இடமாகும்.
(4 / 6)
தமிழ் நாட்டின் தலைநகரமான சென்னை பல்வேறு இடங்களைக் கொண்டுள்ளது. இங்கு தான் பல கோடி மக்கள் ஒவ்வொரு ஆண்டும் தங்களது புத்தாண்டை கொண்டாடுகின்றனர், மெரீனா கடற்கரை, கோவளம் கடற்கரை உட்பட பல கடற்கரைகள் மற்றும் பெரிய மால்கள் என பல இடங்கள் உள்ளன.
(5 / 6)
ஆன்மிக வழிபாட்டாளர்களுக்கு பல்வேறு கோயில்கள் தொடங்கி, சுற்றி பார்க்க மகால், கடைகள் நிறைந்த வீதிகள் என பல்வேறு வசதிகளை உள்ளடக்கிய நகரமாக மதுரை இருந்து வருகிறது.இந்த ஊரின் சாப்பாட்டிற்காகவே மக்கள் கூட்டம் கூட்டமாக இங்கு தேடி வருவார்கள். புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு கடந்த சில ஆண்டுகளாக இந்த மதுரை சிறப்பான ஊராக இருந்து வருகிறது.
மற்ற கேலரிக்கள்