Benefits of Tender Coconut : கோடையை குளுமையாக்கும் இளநீரில் உள்ள நன்மைகள் என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள்.
- Benefits of Tender Coconut : இயற்கையான பானம் எண்ணற்ற ஊட்டச்சத்துக்களை அடக்கியது இந்த இளநீர். கோடை காலத்தில் உடல் இழக்கும் எலக்ட்ரோலைட்களை மீட்பதுடன், உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்ககிறது. உங்களை புத்துணர்ச்சியுடன் வைத்துக்கொள்கிறது.
- Benefits of Tender Coconut : இயற்கையான பானம் எண்ணற்ற ஊட்டச்சத்துக்களை அடக்கியது இந்த இளநீர். கோடை காலத்தில் உடல் இழக்கும் எலக்ட்ரோலைட்களை மீட்பதுடன், உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்ககிறது. உங்களை புத்துணர்ச்சியுடன் வைத்துக்கொள்கிறது.
(1 / 8)
நீர்ச்சத்துக்கள் அதிகம் உள்ளதால், இது நீர்ச்சத்து இழப்பை எதிர்த்து போராடுகிறது. இதில் பொட்டாசியம், சோடியம் மற்றும் மெக்னீசியம் என்ற எலக்ட்ரோலைட்கள் உள்ளன. உடல் இழந்த தண்ணீரை விரைவில் கொடுக்கிறது. இது இயற்கையான விளையாட்டு வீரர்களுக்கான பானம் ஆகும்.
(2 / 8)
இளநீரில் எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளது. இதில் வைட்டமின் சி மற்றும் பி காம்ப்ளக்ஸ்கு வைட்டமின்கள், கால்சியம் மற்றும் இரும்பு போன்ற மினரல்கள் உள்ளன. இது கலோரிகள் குறைந்தது. கொழுப்பு இல்லாதது. சரிவிகித உணவு உட்கொள்ள நினைப்பவர்களுக்கு சிறப்பான தேர்வு.
(3 / 8)
இளநீரில் உள்ள அதிகப்படியான நார்ச்சத்துக்கள், செரிமானத்துக்கு உதவுகிறது. இது அஜீரணக் கோளாறை நீக்குகிறது. மலச்சிக்கல் மற்றும் அசிடிட்டி ஆகியவற்றை போக்குகிறது. இதில் உள்ள பயோஆக்டிவ் எண்சைம்கள் உடல் வளர்சிதை மாற்றத்துக்கு ஊக்குவித்து, ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தையும் காக்கிறது.
(4 / 8)
இளநீரில் உள்ள பொட்டாசியம் மற்றும் சோடியம் ஆகியவை உடலில் எலக்ட்ரோலைட்களை முறைப்படுத்த முக்கியமானது. இது விளையாட்டு வீரர்களுக்கு அவசியமானது. உடற்பயிற்சி பிரியர்களுக்கு மிகவும் அவசியமானது. இதில் தசைவலி மற்றும் சோர்வை போக்குகிறது.
(5 / 8)
இளநீரில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், அமினோஅமிலங்கள் மற்றும் சைட்டோகினின்கள், உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. இதை எடுத்துக்கொள்வதை வழக்கமாக்கினால், உடல் தொற்று மற்றும் நோய்களை எதிர்த்து போராடுவதை உறுதிசெய்கிறது.
(6 / 8)
சருமம் மற்றும் தலைமுடி ஆரோக்கியத்துக்கு நல்லது. இதன் நீர்ச்சத்துக்கள் தன்மை சருமத்தின் நெகிழ்தன்மைக்கு உதவுகிறது. முகப்பருக்களை நீக்குகிறது. இதனால் சருமம் இளமையுடன் தோற்றமளிக்கிறது. தலைமுடியின் ஆரோக்கியத்துக்கும், பொடுகை போக்கவும் உதவுகிறது.
(7 / 8)
இளிநீரில் சோடியம் சத்து குறைவாகவும், பொட்டாசியச் சத்துக்கள் அதிகமாகவும் உள்ளதால், இது ரத்த அழுத்தத்தை முறைப்படுத்த உதவுகிறது. உயர் ரத்த அழுத்தத்தை குறைக்கிறது மற்றும் இதய நோய்கள் ஏற்படுத்தும் ஆபத்தை குறைக்கிறது.
மற்ற கேலரிக்கள்