வைச்சு செய்த அஷ்டமச்சனி.. அதன் விலகல்.. கடக ராசிக்கு தரும் நன்மைகள்.. எதிலெல்லாம் எச்சரிக்கை தேவை?
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  வைச்சு செய்த அஷ்டமச்சனி.. அதன் விலகல்.. கடக ராசிக்கு தரும் நன்மைகள்.. எதிலெல்லாம் எச்சரிக்கை தேவை?

வைச்சு செய்த அஷ்டமச்சனி.. அதன் விலகல்.. கடக ராசிக்கு தரும் நன்மைகள்.. எதிலெல்லாம் எச்சரிக்கை தேவை?

Jan 06, 2025 02:37 PM IST Marimuthu M
Jan 06, 2025 02:37 PM , IST

  • அஷ்டமச் சனி முடிவு கடக ராசியினருக்கு என்ன பலன்களைத் தருகிறது? என்பது குறித்துப் பார்ப்போம்.

கடக ராசிக்கு 2025ல் வரும் சனிப்பெயர்ச்சி எவ்வாறு பலன்களைத் தரப்போகிறது என ஐபிசி பக்தி யூட்யூப் சேனலுக்கு, ஜோதிடர் வேல் சங்கர் அளித்த பேட்டியைக் காணலாம்.அதில், ''கடக ராசி அஷ்டமச்சனியில் இருக்கிறார். அதனால் இரண்டரை ஆண்டுகளாகப் பிரச்னை எனச் சொல்வார்கள். அது அல்ல உண்மை. ஐந்து வருடமாகவே, கடக ராசியினருக்குப் பிரச்னை தான். ஏனென்றால், அதற்கு முன்னாடி, சனி மகரத்தில் இருந்தார். மகர ராசியில் இருக்கும்போது கடக ராசி அதிபதி சந்திரனுக்கு சத்ரு கிரகம் என்பதனால், ஏழாம் பார்வையாக சனி கடகத்தைப் பார்த்தார்'. 

(1 / 6)

‘’குறிப்பாக, திருவோண நட்சத்திரத்தில் சனி சஞ்சாரம் செய்யும்போது, கடகராசியினர் பலருக்கு திருமணம் எல்லாம் நிச்சயம் ஆகி, அந்த திருமணம் எல்லாம் ரத்தாகி இருக்கும். நிறைய வம்பு, வழக்கு, கோர்ட், கேஸ் ஹாஸ்பிட்டல், என எந்தப் பிரச்னை என்றே வைத்தியம் பார்த்து ஏராளமான செலவு. அதன்பின் அஷ்டமச்சனியாக வந்தபிறகு, ஒரே வார்த்தையில் சொன்னவேண்டும் என்றால், கடகத்தை சின்னாபின்னமாக சீர்குலைத்தது, இந்த சனி பகவான்''. 

(2 / 6)

பிரச்னையில் இருந்த கடக ராசி: கதறி கதறி வெளிப்படையாக அழுதால் பிரச்னை என்று, சிலர் பாத்ரூமில் சென்று எல்லாம் அழுதிருக்கிறார்கள். இதெல்லாம் நிதர்சனமான உண்மை. ஏனென்றால், கடக ராசிக்கு அவ்வளவு தோல்வி. அவ்வளவு அவமானம்.குறிப்பாக ராகுவில் சஞ்சாரம் செய்தபோது கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு முன்பு, கடக ராசிக்கு வம்பு வழக்குப் பிரச்னை எல்லாம் தீராமல் துரத்திக்கொண்டே இருக்கிறது.கடக ராசிக்கு 11ஆவதுபிறவியில் குரு வந்தபிறகு, அது லாபகுருவாக வந்தது. நிறைய விஷயங்கள் கண்களுக்குத் தெரிந்து கைகளுக்கு எட்டவில்லை.இந்த காலகட்டத்தில் நிறைய பிளஸ் நடக்கவில்லை என்றாலும், மைனஸ் இல்லை என்பதே பெரிய பிளஸ் எனப் புரிந்துகொள்ளவேண்டும்.

(3 / 6)

‘’கடக ராசி கடந்த 5 வருடங்களாக இருந்த பிரச்னைகள் எல்லாம் படிப்படியாக தீரும். இனிமேல், தான் அவர்கள் சிரித்து நீங்கள் பார்க்கப்போகிறீர்கள். அதிலும் பூச நட்சத்திரக்காரர்களும், புனர்பூச நட்சத்திரக்காரர்களும் வெகுவாகப் பாதிக்கப்பட்டிருப்பார்கள். அவர்கள் வரக்கூடிய இந்த பாக்யசனி காலகட்டத்தில் சொத்துக்கள் வாங்குவர். தந்தை வழி உறவுகளால் சிறிதளவு ஆதாயம் அடைவார்கள். வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு விசா தொடர்பான பிரச்னைகள் தீரும். முதலீடுகளில் லாபம் கிடைக்கும். வியாபாரத்தில் வெற்றி கிடைக்கும்.முதலீடு செய்யும்போது அரசால் அங்கீகரிக்கப்பட்ட துறையில் மட்டும் முதலீடு செய்யவேண்டும். மாணவர்கள் கூடுதல் கவனமாகப் படிப்பார்கள்''.

(4 / 6)

கடக ராசியினர், இந்த காலகட்டத்தில் தங்கள் உடல்நிலையைப் பத்திரமாகப் பார்த்துக் கொள்ள வேண்டும். செவ்வாய், கடக ராசியில் நீசமடைவதால், நோய் எதிர்ப்புச் சக்தி குறைவாகக் காணப்படும். எனவே, அதற்கேற்ற வகையில் உடல்நிலையைப் பார்த்துக்கொள்வது புத்திசாலித்தனம்.ராகு எட்டாம் இடத்தில் இருப்பதால் அடிவயிறு தொடர்பான பிரச்னைகளில் உஷ்ணம் இல்லாமல் இருக்க கூடுதல் கவனம் எடுத்துக்கொள்ளவேண்டும். குழந்தைகள் தொடர்பான விஷயங்களில் பெண்கள் அதிக அக்கறையுடன் இருந்துகொண்டு, டென்ஷன் இல்லாமல் இருப்பது புத்திசாலித்தனம். அதற்காக யோகா போன்ற நிகழ்வுகளில் பங்கேற்கலாம்.வியாழக்கிழமை குரு வழிபாடு செய்வது வாழ்வியல் பக்குவத்தை அளிக்கும். வழக்கமாக, ஆஞ்சநேயர் வழிபாடு, நரசிம்மர் வழிபாடு, பைரவர் வழிபாடு புத்திசாலித்தனம். 90 விழுக்காடு கடக ராசிக்கு நன்றாகவே உள்ளது’’ எனத் தெரிவித்தார். நன்றி: ஐபிசி பக்தி யூட்யூப் சேனல், ஜோதிடர் வேல் சங்கர்

(5 / 6)

பொறுப்புத்துறப்பு:இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

(6 / 6)

பொறுப்புத்துறப்பு:இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.(Pixabay)

மற்ற கேலரிக்கள்