Maha Bhagya Yogam: ’மேஷம் முதல் மீனம் வரை!’ ஆட்சியில் அமர வைக்கும் மகா பாக்ய யோகம் யாருக்கு?
- “மற்ற கிரகங்களின் அமைப்போ, திசைகளோ, புத்திகளோ, கோச்சாரமோ இந்த யோகம் கொண்டவர்களை பெரிதும் பாதிக்காது”
- “மற்ற கிரகங்களின் அமைப்போ, திசைகளோ, புத்திகளோ, கோச்சாரமோ இந்த யோகம் கொண்டவர்களை பெரிதும் பாதிக்காது”
(1 / 8)
ஜோதிடத்தில் யோகம் என்ற சொல்லுக்கு சேர்க்கை என்று பொருள்படும். மகாபாக்ய யோகம் என்பது புகழ்பெற்ற உயர்நிலை அந்தஸ்தை அடைய செய்யும் யோகமாக விளங்குகிறது.
(2 / 8)
12 ராசிகளில் மேஷம், மிதுனம், சிம்மம், துலாம், தனுசு, கும்பம் ஆகிய ராசிகள் ஆண் ராசிகளாகவும், ரிஷபம், கடகம், கன்னி, விருச்சிகம், மகரம், மீனம் ஆகிய ராசிகள் பெண் ராசிகளாகவும் பிரிக்கப்பட்டுள்ளன.
(3 / 8)
மகா பாக்ய யோகம் ஒருவரை வல்லமையும், அதிகாரமும் மிக்க நபராக மாற்றும் தன்மை கொண்டது. நீங்கள் பகலில் பிறந்து, உங்கள் லக்னம், ராசி மற்றும் சூரியன் ஆகிய மூன்றும் ஆண் ராசிகளில் அமைய பெற்றால் மகா பாக்ய யோகம் ஏற்படுகிறது.
(4 / 8)
சித்திரை, ஆனி, ஆவணி, ஐப்பசி, மார்கழி, மாசி ஆகிய மாதங்கள் ஆண் ராசிக்கான மாதங்களாக உள்ளது. இந்த மாதங்களில் பகலில் பிறக்கும் நபர்களுக்கு சூரியன் ஆண் ராசியில் இருப்பார். அதே போல் சந்திரன் இந்த ஆண் ராசிக்களில் பயணம் செய்து கொண்டிருக்க வேண்டும்.
(5 / 8)
பகலில் பிறப்பெடுத்து ஆண் லக்னம், ஆண்ராசியாக இருக்க வேண்டும், இல்லை எனில் இரவில் பிறப்பெடுத்து பெண் லக்னம், பெண் ராசியாக இருந்தால் இதே மகா பாக்ய யோகம் ஏற்படும்.
(6 / 8)
பெண் ராசிகளில் இரவில் பிறப்பெடுத்து பெண் லக்னம் மற்றும் பெண் ராசியாக இருந்து, இந்த ராசிகளில் சந்திரனில் இருக்கும் போது பிறப்பவர்களுக்கும் மகா பாக்ய யோகம் ஏற்படும்.
(7 / 8)
மற்ற கிரகங்களின் அமைப்போ, திசைகளோ, புத்திகளோ, கோச்சாரமோ இந்த யோகம் கொண்டவர்களை பெரிதும் பாதிக்காது.
மற்ற கேலரிக்கள்