Karthikai Month: வாழ்வில் சகல வளத்தை சேர்க்கும் கார்த்திகை மாத விசேஷங்கள்!
- ஆன்மிக முக்கியத்துவம் வாய்ந்த கார்த்திகை மாதத்தில் பல சிறப்புகள் உள்ளன. அவற்றில் முக்கியமான சிலவற்றைக் காண்போம்.
- ஆன்மிக முக்கியத்துவம் வாய்ந்த கார்த்திகை மாதத்தில் பல சிறப்புகள் உள்ளன. அவற்றில் முக்கியமான சிலவற்றைக் காண்போம்.
(1 / 7)
கார்த்திகை மாதம் நாளை (நவ.17) பிறக்க உள்ள நிலையில், இந்த மாதத்தின் சிறப்புகள் பற்றி தெரிந்துகொள்வோம்.
(2 / 7)
கார்த்திகை மாதத்தில் கார்த்திகை தீபம், சோமவார விரதம், உமாமகேஸ்வர விரதம், கார்த்திகை ஞாயிறு விரதம், கார்த்திகை விரதம், விநாயகர் சஷ்டி விரதம், முடவன் முழுக்கு, கார்த்திகை மாத வளர்பிறை துவாதசி, துளசி கல்யாணம், ப்ரமோதினி ஏகாதசி, ரமா ஏகாதசி போன்ற வழிபாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன.
(3 / 7)
கார்த்திகை மாதத்தில் சோமாவார விரதம் இருப்பது சிறப்பு வாய்ந்தது. இந்த விரதத்தை கடைபிடித்தால் பல ஜென்ம பாவங்கள் நீங்கும். கணவன் மனைவி ஒற்றுமை அதிகரிக்கும்.
(4 / 7)
கார்த்திகை மாதத்தில் சிவலிங்கத்தை நெய்யினால் அபிஷேகம் செய்து வில்வம் மற்றும் மரிக்கொழுந்தால் அர்ச்சனை செய்து வழிபட்டால் குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும்.
(5 / 7)
கார்த்திகைத் தீபத் திருநாளன்று தீபங்கள் ஏற்றி முருகனையும், சிவபெருமானையும் வழிபடுவது சிறந்தது.
(6 / 7)
கார்த்திகை மாதத்தில் திருக்கோயில்களில் தீபம் ஏற்றி வைப்பதும், இல்லத்தில் இரு வேளைகளில் விளக்கேற்றுவதும் அனைத்து மங்களங்களையும் தந்து வாழ்வை ஒளிமயமாக்கும்.
மற்ற கேலரிக்கள்