தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Makara Lagnam Palangal: ‘மகர லக்னமா நீங்கள்!’ உங்கள் ஜாதகத்தில் 12 வீடுகளில் சனி பகவான் நின்ற பலன்கள்!

Makara Lagnam Palangal: ‘மகர லக்னமா நீங்கள்!’ உங்கள் ஜாதகத்தில் 12 வீடுகளில் சனி பகவான் நின்ற பலன்கள்!

May 13, 2024 07:43 PM IST Kathiravan V
May 13, 2024 07:43 PM , IST

  • ”உழைப்பதற்காகவே பிறந்த லக்னமாக மகர லக்னம் உள்ளது. கடமை ஆற்றுவதற்காகவே பிறந்த லக்னமாக இது உள்ளது. அதிகப்படியான உழைப்பையும், அதனால் ஏற்படும் களைப்பையும் இவர்கள் கொண்டு இருப்பார்கள்”

உழைப்பதற்காகவே பிறந்த லக்னமாக மகர லக்னம் உள்ளது. கடமை ஆற்றுவதற்காகவே பிறந்த லக்னமாக இது உள்ளது. அதிகப்படியான உழைப்பையும், அதனால் ஏற்படும் களைப்பையும் இவர்கள் கொண்டு இருப்பார்கள். 

(1 / 13)

பொதுவாக எந்த லக்னமாக இருந்தாலும், அவரது லக்னத்தில் லக்னாதிபதி இருப்பது தனி அம்சம் ஆகும். சனி பகவானின் இயல்புகள் வெளிப்படும் என்றால் கூட ஜாதகரின் தன்னம்பிக்கை, செயல்திறன் அதிகமாக இருக்கும்.

(2 / 13)

2ஆம் இடத்தில் சனி பகவான் இருப்பது அவ்வளவு சிறப்பு இல்லை. குடும்ப வாழ்கை தாமதப்படுத்தும், சம்பாதிப்பதில் நிறைய இடைஞ்சல்கள், தடைகள் ஏற்படும்.

(3 / 13)

3ஆம் இடத்தில் சனி பகவான் இருப்பது சிறப்பை தரும். குருவின் வீடு என்பதால் குரு வலுப்பெற்று இருந்தால் ஜாதகர் முயற்சிகளால் வெற்றி பெறுவார். உறவுகளால் உதவிகள் கிடைக்கும், நல்ல நண்பர்களால் பலன்கள் உண்டு.

(4 / 13)

மேஷ ராசியான 4ஆம் இடத்தில் சனி பகவான் நீசம் அடைவார். ஒரு பாவி எனும் முறையில் சனி பகவான் கேந்திரத்தில் அமர்வது வலிமையை தரும். செவ்வாய் வலுப்பெற்ற நிலையில் இருந்தால் ஜாதகர் தொழில் கல்வியில் மிகப்பெரிய வெற்றியை பெறுவார். வெளிநாடு செல்லும் வாய்ப்புகள் இருக்கும். சுபர்களால் நீச பங்கம் ஏற்பட்டால் ஜாதகர் மேலும் சிறப்பான பலன்களை பெறுவார். 

(5 / 13)

5ஆம் இடமான ரிஷபத்தில் சனி இருந்து சுபரின் பார்வை பெறும் போது நெறிப்படுத்தப்பட்ட வாழ்கையை ஜாதகர் வாழ்வார். சொந்த ஊரை விட்டு  வெகுதூரம் செல்ல வேண்டிய நிலை உண்டாகும். பூர்வீக சொத்துக்களை கையகப்படுத்த முடியாது. திருமணம், குழந்தை பிறப்பில் எந்த பாதிப்பும் இருக்காது. 

(6 / 13)

6ஆம் இடமான மிதுனத்தில் சனி பகவான் இருப்பது யோகமான நிலை ஆகும். உபஜெய ஸ்தானத்தில் லக்னாதிபதி அமர்ந்து இருப்பதால் ஜாதகருக்கு முயற்சியினால் நன்மைகள் உண்டாகும். புதன் வீடு என்பதால் புதனின் நிலையை பொறுத்து ஜாதகரின் வெற்றிகள் தீர்மானிக்கப்படும்.

(7 / 13)

7ஆம் இடமான கடகத்தில் சனி பகவான் இருப்பது திக்பலம் பெற்ற வலிமையை பெறுவார். இங்கு சந்திரன் வளர்பிறை சந்திரனாக இருந்தால் நன்மைகள் கிடைக்கும். அருமையான வாழ்கை துணை அமையும்.

(8 / 13)

8ஆம் இடமான சிம்மத்தின் சனி பகவான் அமர்வது அவ்வளவு சிறப்பை தராது. லக்னாதிபதி 8ஆம் இடத்தில் மறைகிறார் என்பது முதல் பின்னடைவு. தனக்கு பிடிக்காத பகைவீட்டில் சனி இருப்பது இரண்டாவது பின்னடைவு. இங்கிருந்து சனியின் பார்வை படும் இடங்கள் நன்மையை தராது. சூரியன் பலமாக இருந்தால் ஓரளவு நன்மைகளை பெறலாம்.

(9 / 13)

9ஆம் இடமான புதன் வீட்டில் சனி இருப்பது நல்ல நன்மைகளை தரும். லக்னாதிபதி திரிகோணத்தில் இருக்கும் போது புதன் நிலையை கொண்டு ஜாதகர் முன்னேற்றம் பெறுவார். ஜாதகர் தன்னம்பிக்கையாக இருப்பார். அதிர்ஷ்ட வாய்ப்புகள் ஏற்படும். நடுத்தர வயதிற்கு பின் முன்னேற்றங்கள் கூடும்.

(10 / 13)

துலாம் ராசியில் சனி பகவான் உச்சம் பெறுவதால் கஷ்டப்பட்டாலும் தொழில் அதிபர் ஆக வாய்ப்பு உண்டு. பணம் தேடும் வாய்ப்புகள் கிடைக்கும். நல்ல பொருளாதார வாய்ப்புகள் கிடைக்கும்.

(11 / 13)

11ஆம் இடமான விருச்சிகம் ராசியில் சனி இருக்க கூடாது. வாழ்வியல் போராட்டங்கள், விபத்துக்கள், கண்டங்கள் உள்ளிட்ட பிரச்னைகளை ஜாதகர் சந்திக்க நேரிடும்.

(12 / 13)

12ஆம் இடமான தனுசு ராசியில் சனி பகவான் இருப்பது குருவின் இடத்தை பொறுத்து நன்மைகள் கிடைக்கும். சுப விரயங்கள் ஏற்படும், வெளிநாடு வாழ்கை உண்டாகும்.

(13 / 13)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்