Benefits of Green Apple : உங்கள் குழந்தையின் மூளை ஷார்ப்பாக வேண்டுமா? இந்த ஒரு பழம் மட்டும் போதும்!
- Benefits of Green Apple : உங்கள் குழந்தையின் மூளை ஷார்ப்பாக வேண்டுமா? இந்த ஒரு பழம் மட்டும் போதும்!
- Benefits of Green Apple : உங்கள் குழந்தையின் மூளை ஷார்ப்பாக வேண்டுமா? இந்த ஒரு பழம் மட்டும் போதும்!
(1 / 8)
Benefits of Green Apple : உங்கள் குழந்தையின் மூளை ஷார்ப்பாக வேண்டுமா? எனில் அதற்கு கிரீன் ஆப்பிள் உதவுகிறது. மேலும் பல்வேறு நன்மைகளைத் தரும் கிரீன் ஆப்பிள்கள் குறித்து தெரிந்துகொள்ளுங்கள்.
(2 / 8)
புற்றுநோய் ஆபத்தை குறைக்கிறது - கிரீன் ஆப்பிளில் அதிகளவில் ஃப்ளாவனாய்ட்கள் உள்ளது. இது நுரையீரல், கணையம் மற்றும் குடல் புற்றுநோய்கள் ஏற்படும் ஆபத்தை தடுக்கிறது. மார்பகம், குடல் மற்றும் சருமத்தில் புற்றுநோய் செல்கள் வளர்வதை தடுக்க உதவுகிறது. நுரையீரல் புற்றுநோய் வளர்வதை தடுக்க ஆண்கள், பெண்கள் இருவருக்கும் கிரீன் ஆப்பிள் உதவுகிறது. ஆனால் புற்றுநோய் ஆபத்துக்கள் வந்தால் உடனடியாக மருத்துவரை அணுகுவதுதான் சிறந்தது.
(3 / 8)
மூளைக்கு நல்லது - மூளையில் சேதத்தை தடுக்க கிரீன் ஆப்பிள் சாறுகள் உதவுகிறது. இது மூளையின் நரம்புகளுக்கு சுறுசுறுப்பு கொடுக்கிறது. அதிக நார்ச்சத்துக்கள் நிறைந்தது கிரீன் ஆப்பிள், மூளை நோய்களை எதிர்த்து போராடுகிறது. மறதிநோயான அல்சைமர், நடுக்குவாதம் எனப்படும் பார்கின்சன்ஸ் நோய்களை குணப்படுத்துகிறது. உங்களுக்கு மூளை தொடர்பான பிரச்னைகள் இருந்தால், நீங்கள் உங்கள் மருத்துவரின் அறிவுரைப்படி கிரீன் ஆப்பிள்களை எடுத்துக்கொள்ளலாம். உங்கள் குழந்தைகளின் மூளை சுறுசுறுப்புக்கும் உதவும் என்பதால், அவர்களுக்கும் அல்லப்போது கிரீன் ஆப்பிள்களைக் கொடுக்கலாம்.
(4 / 8)
நுரையீரல் பிரச்னைகளுக்கு தீர்வு - நுரையீரல் பிரச்னைகளுக்கு கிரீன் ஆப்பிள் சாப்பிடுவது நல்லது. ஆஸ்துமாவை குணப்படுத்தும். கிரீன் ஆப்பிள் சாப்பிடுவது ஆஸ்துமாவைக் குறைக்கிறது. ஆஸ்துமா மற்றும் நுரையீரல் கோளாறுகள் ஏற்படும் ஆபத்தை குறைக்கிறது என்று ஆய்வுகள் தெரிவிக்கிறது. நுரையீரல் நன்றாக இயங்கவும் கிரீன் ஆப்பிள் உதவுவதாக ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன. நீங்கள் ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டிருந்தால், மருத்துவரின் அறிவுரையுடன், நீங்கள் கிரீன் ஆப்பிள்களை எடுத்துக்கொள்ளலாம்.
(5 / 8)
நீரிழிவு நோய்க்கு உதவுகிறது - கிரீன் ஆப்பிளை சாப்பிடுவது உங்களுக்கு டைப் 2 நீரிழிவு நோய் ஏற்படும் ஆபத்தைக் குறைக்கிறது. இதில் கரையக்கூடிய நார்ச்சத்துக்கள் அதிகம் உள்ளது. அது உங்கள் ரத்தத்தில் சர்க்கரை அளவைக் குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதன் தோல்களில் உள்ள நற்குணங்கள் உங்களுக்கு நீரிழிவு நோய் ஆபத்தை குறைக்கிறது. தினமும் ஒரு கிரீன் ஆப்பிள் சாப்பிடுவது சர்க்கரை நோய் ஏற்படும் ஆபத்தை குறைக்கும் என்று ஆய்வுகள் கூறுகின்றன.
(6 / 8)
உடல் எடை குறைப்பதில் உதவுகிறது - அதிக நார்ச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை மட்டுமே ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தை பராமரிக்க மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள். ஆப்பிளில் நார்ச்சத்துக்கள் அதிகம் உள்ளது. அதிலும் கிரீன் ஆப்பிளில் நார்ச்சத்துக்கள் அதிகம் உள்ளது. அது உடல் எடையை குறைக்க உதவுகிறது. கிரீன் ஆப்பிள்களை சாப்பிடுவதால், உடல் எடை குறையும். உடல் எடையை குறைக்க கிரீன் ஆப்பிளை உட்கொண்டவர்களுக்கு ரத்தத்தில் சர்க்கரை அளவை குறைக்க உதவுகிறது. நீங்கள் உடல் எடை குறைக்க விரும்பினால், மருத்துவரின் பரிந்துரைப்படி கிரீன் ஆப்பிளை சாப்பிடலாம். கிரீன் ஆப்பிள் சாப்பிடுவது நோய் எதிர்ப்பு திறனை அதிகரிக்க உதவுகிறது. கண்களில் எவ்வித பிரச்னைகளும் ஏற்படாமல் தடுக்கிறது.
(7 / 8)
கிரீன் ஆப்பிளில், உடலில் உள்ள கழிவுகளை நீக்கும் திறன் உள்ளது. இது உங்கள் கல்லீரலை சுத்தம் செய்ய உதவுகிறது. உடலில் உள்ள நச்சுக்களை அகற்றுகிறது. கிரீன் ஆப்பிள் வலியைப் போக்க உதவுகிறது. கிரீன் ஆப்பிளில் வீக்கத்க்கு எதிரான குணங்கள் உள்ளது. கிரீன் ஆப்பிளை அப்படியே பச்சையான சாப்பிடலாம். சாறாகப் பருகலாம். ஜாம் செய்யலாம்.
(8 / 8)
கிரீன் ஆப்பிள்கள் சாப்பிடுவதால் ஏற்படும் பக்கவிளைவுகள் - கிரீன் ஆப்பிள்கள் சாப்பிடுவதால், பற்களில் பிரச்னைகள் ஏற்படும். இதன் அமிலத்தன்மை, பற்களில் உள்ள மினரல்களை குறைக்கிறது. எனவே இதை அதிகம் எடுத்துக்கொள்ளும்போது, பற்களில் அரிப்பை ஏற்படுத்துகிறது. கிரீன் ஆப்பிள் சாப்பிடுவதால் உங்கள் பற்களில் பிரச்னைகள் ஏற்பட்டால், நீங்கள் உங்கள் பல் மருத்துவரை உடனடியாக அணுகவேண்டும்.
மற்ற கேலரிக்கள்