Benefits of Ghee : பட்டுப்போன்ற பளபளக்கும் பாதங்கள் வேண்டுமா? நெய்யை வைத்து என்ன செய்யலாம் பாருங்கள்!
- Benefits of Ghee : பட்டுப்போன்ற பளபளக்கும் பாதங்கள் வேண்டுமா? நெய்யை வைத்து என்ன செய்யலாம் பாருங்கள்!
- Benefits of Ghee : பட்டுப்போன்ற பளபளக்கும் பாதங்கள் வேண்டுமா? நெய்யை வைத்து என்ன செய்யலாம் பாருங்கள்!
(1 / 9)
நெய் தரும் அழகு நன்மைகள் - நெய், வெண்ணெயில் இருந்து உருக்கி எடுக்கப்படுகிறது. இது இந்திய பாரம்பரியத்தில் அழகுக்காக பயன்படுத்தப்படுகிறது. இதில் உள்ள அதிகப்படியான ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், வைட்டமின்கள், ஃபேட்டி ஆசிட்கள் உடல் ஆரோக்கியம் மற்றும் அழகு இரண்டும் மேம்பட உதவுகிறது. உங்கள் அழகை அதிகரிக்க நீங்கள் நெய்யை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம் என்று தெரிந்துகொள்ளுங்கள்.
(2 / 9)
ஈரப்பதம் - நெய் இயற்கையாக உங்கள் உடலுக்கு ஈரப்பதத்தைக் கொடுக்கக்கூடிய ஒன்றாகும். இதனால் உங்கள் சருமம் பொலிவு பெறுகிறது. இதில் உள்ள ஃபேட்டி ஆசிட்கள் உங்கள் வறண்ட சருமத்துக்கு ஈரப்பதத்தை தருகிறது. எனவே உங்கள் உடல் மற்றும் முகத்தில் சிறிதளவு நெய்யை தடவி மெதுவாக தேய்த்து மசாஜ் செய்யவேண்டும். அப்போது அது உங்கள் உடலுக்கு நன்மையைத்தரும்.
(3 / 9)
பாத வெடிப்பு கிரீம் - உங்கள் சருமத்தில் எந்த இடத்தில் வெடிப்புகள் ஏற்பட்டிருந்தாலும், அங்கு கொஞ்சம் நெய்யை தடவி மசாஜ் செய்யுங்கள். அப்படி நீங்கள் மசாஜ் செய்யும்போது அந்த இடத்தில் உள்ள வெடிப்பை நீக்கி, அந்த இடத்தை நீர்ச்சத்துடனும், ஆரோக்கியத்துடனும் வைக்க உதவுகிறது. குறிப்பாக பாதத்தில் ஏற்படும் வெடிப்புக்களை போக்குவதிற்கு நெய் சிறந்தது.
(4 / 9)
பாத கிரீம் - உங்கள் பாதத்தில் வெடிப்பு, வறட்சி, பனிக்காலத்தில் ஏற்படும் வறண்ட சருமம் உடலின் மற்ற எந்த பாகத்தையும் விட பாதங்களை அதிகம் பாதிக்கும். அதற்கு நெய் ஒரு சிறந்த தீர்வு பரும். எனவே உங்கள் பாதங்களை நன்றாக சூடான நீரில் ஊறவைத்துவிட்டு, துடைத்துவிட்டு, நெய்யை தடவவேண்டும். பின்னர் அதன் மீது சாக்ஸ் அணிந்து ஓரிரவு ஊறவிடவேண்டும். இதை உறங்கச் செல்லும் முன் செய்துவந்தால், நீங்கள் பளபளப்பான பாதம் பெறலாம். உங்கள் வறண்ட சருமத்துக்கு போதிய நீர்ச்சத்துக்கள் கிடைக்கும். பட்டுப்போன்ற மிருதுவான பாதமும் கிடைக்கும்.
(5 / 9)
மேக்அப் ரிமூவர் - நெய்யை நீங்கள் இயற்கை மேக்அப் ரிமூவராகப் பயன்படுத்தலாம். நெய்யை உங்கள் முகத்தில் தடவவேண்டும். தடவி நன்றாக மசாஜ் செய்தால் போதும். மேக்அப்கள் களையும். பின்னர் சூடான தண்ணீரில் நனைத்த துணியை வைத்து முகத்தில் உள்ள மேக்அப் கிரீம்கள் மற்றும் நெய்யை துடைத்து எடுத்துவிடவேண்டும். இது உங்கள் சருமத்தை சுத்தமாகவும், ஈரப்பதத்துடனும் வைத்துக்கொள்ளும்.
(6 / 9)
லிப் பாம் - உங்கள் உதடுகள் மிருதுவாகவும், பளபளப்பாகவும் இருக்கவேண்டும் என்றால் அதில் கொஞ்சம் நெய்யை தடவி வாருங்கள். இது உங்களின் உதட்டில் வெடிப்புகள் அல்லது வறட்சி இருந்தால், அதை போக்கும். உங்கள் உதடுகளை எப்போது ஈரப்பதத்துடன் வைத்திருக்கும்.
(7 / 9)
தலைமுடியை காக்கும் கண்டிஷ்னர் - நெய், உங்கள் தலைமுடியை காக்கும் சிறந்த கண்டிஷ்னர் ஆகும். கொஞ்சம் நெய்யை எடுத்து லேசாக சூடாக்கி, உங்கள் தலையில் லேசான சூட்டில் தடவினால் போதும். முடியின் வேர்க்கால்களில் இதமான நெய்யை தடவும்போது, அங்கு ரத்த ஓட்டம் அதிகரிக்கிறது. இதை ஒரு மணி நேரம் விட்டு, மீண்டும் தலையை மிருதுவான ஷாம்பூ கொண்டு அலசவேண்டும். இது உங்கள் தலைமுடிக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது. மேலும் உங்கள் தலைமுடியை மிருதுவாகவும், பளபளப்பாகவும் வைக்க உதவுகிறது.
(8 / 9)
வயோதிகத்துக்க எதிரான சிகிச்சை - நெய்யில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், உங்களுக்கு வயோதிகம் ஏற்படும் வாய்ப்பை தாமதப்படுத்துகிறது. உங்கள் முகத்தில் நெய்யை தடவி வந்தால், அது உங்கள் முகத்தில் சுருக்கங்கள மற்றும் கோடுகள் ஏற்படாமல் காக்கிறது.
(9 / 9)
கண்களுக்கு கீழ் தடவும் கிரீம் - உங்கள் கண்களைச் சுற்றி கடுமையான கருவளையம் போட்டிருந்தாலோ அல்லது உப்பி காணப்பட்டாலோ கொஞ்சம் நெய்யை எடுத்து உறங்கச் செல்லும் முன் தடவுங்கள். இது உங்கள் பொலிவில்லாத சருமத்துக்கு தேவையான பொலிவைத்தரும். சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கி சருமத்திற்கு புத்துணர்ச்சியைத் தரும். கண்களைச் சுற்றியுள்ள உள்ள கருவளையத்தை போக்குகிறது.
மற்ற கேலரிக்கள்