Benefits of conjunction: 4 கிரகத்தின் சேர்க்கை.. குபேர யோகம் பெறும் ராசிகள்!
- ஒவ்வொரு கிரகமும் சில கால இடைவெளியில் ஒன்றுக்கும் மேற்பட்ட ராசிகளுடன் சேரும்.
- ஒவ்வொரு கிரகமும் சில கால இடைவெளியில் ஒன்றுக்கும் மேற்பட்ட ராசிகளுடன் சேரும்.
(1 / 6)
அப்படி சேரும்போது பிப்ரவரி மாதம், மகர ராசியில் சில கிரகங்களின் பெயர்ச்சி நடைபெறவுள்ளது. அப்படி, புதன், செவ்வாய், சுக்கிரன் மற்றும் சூரியன் ஆகியவை மகர ராசியில் சேரப்போகிறது. இதனால் நான்கு ராசிகளுக்கு இடையே சுப பலன்கள் கிடைக்கும்.
(2 / 6)
மேஷம்: மகர ராசியில் சூரியன், செவ்வாய், புதன், சுக்கிரன் ஆகிய கிரக சேர்க்கையால், வியாபாரம் செய்யும் நபர்களுக்கு அதிர்ஷ்டமான காலம் பிறக்கப்போகிறது. வேலை தேடுபவர்களுக்கு ஊதிய உயர்வுடன் கூடிய நல்ல வேலை கிடைக்கும். வங்கியில் சேமிப்புத்தொகையை அதிகரித்து வைத்துக் கொள்வீர். சமூகத்தில் உரிய கவுரத்தைப் பெறுவீர்கள்.
(3 / 6)
துலாம்: இந்த 4 கிரகங்களின் அபூர்வ சேர்க்கையால், துலாம் ராசியினர் பல முக்கிய பதவிகளைப் பெறலாம். புதிய வாகனம் மற்றும் வீட்டடி மனை ஆகியவற்றை வாங்கும் சூழல் ஏற்படும். கேன்வாஸ் செய்யும் தொழில்களில் நல்ல வருமானம் கிடைக்கும். சுப செலவுகள் நடக்கும்.
(4 / 6)
தனுசு: இந்த நான்கு கிரகங்களின் சேர்க்கையால் நன்மை கிடைக்கும். பொருளாதாரச் சிக்கல்கள் நீங்கும். வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்கிப் போடுவீர்கள். தொழில் செய்யும் நபர்களுக்கு நல்ல பலன் கிடைக்கும். உங்கள் மீது சமூகத்தில் மரியாதை கூடும்.
(5 / 6)
மகரம்: இந்த 4 கிரகங்களின் சேர்க்கையால், மகர ராசியினருக்கு நல்ல அதிர்ஷ்டம் கிடைக்கும். வருவாய் அதிகரிக்கும். பொருளாதாரச் சூழல் மேம்படும். பணியிடத்தில் புரோமோஷன் கிடைக்கப்பெறலாம். அருமையான காலம். வங்கிக் கணக்கில் சேமிப்பு உண்டாகும்.
(6 / 6)
பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
மற்ற கேலரிக்கள்