Benefits of Anise : கண் பார்வையை கூராக்கும்! சாப்பிட்டவுடன் சோம்பு மெல்வதால் இத்தனை நன்மைகளா?
- Benefits of Anise : கண் பார்வையை கூராக்கும்! சாப்பிட்டவுடன் சோம்பு மெல்வதால் இத்தனை நன்மைகளா?
- Benefits of Anise : கண் பார்வையை கூராக்கும்! சாப்பிட்டவுடன் சோம்பு மெல்வதால் இத்தனை நன்மைகளா?
(1 / 10)
சோம்பு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் - இந்திய உணவுகளில் சாப்பிட்டவுடன் மென்று சாப்பிடுவதற்கு சோம்பு கொடுக்கப்படுகிறது. வாயை புத்துணர்வுடன் வைத்துக்கொள்ள உதவுகிறது. உங்கள் வாயில் குளிர்ச்சியை ஏற்படுத்துவதைவிட, இந்த சிறிய விதைகள், உங்கள் உடலுக்கு எண்ணற்ற நன்மைகளைக் கொடுக்கிறது. உங்கள் உணவில் தினமும் சோம்பு சேர்ப்பதால் கிடைக்கும் நன்மைகளை தெரிந்துகொள்ளுங்கள்.
(2 / 10)
கண் ஆரோக்கியம் - சோம்பில் வைட்டமின் ஏ சத்துக்கள் அதிகம் உள்ளது. இது கண் பார்வையை அதிகரிக்கச் செய்யும் முக்கிய வைட்டமின் ஆகும். உங்கள் உணவில் சோம்பு சேர்த்துக்கொள்வதை வழக்கமாக்கினால், அது உங்களின் கண்களில் கண் புரைநோய், பார்வை மங்குவது போன்றவை ஏற்படாமல் காக்கிறது.
(3 / 10)
செரிமான ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது -சோம்பில் உள்ள நன்மைகளுள் முக்கியமான ஒன்று, அது செரிமான ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது. சோம்பில் உள்ள செரிமானத்தை தூண்டும் சாறுகள் மற்றும் எண்சைம்கள், நீங்கள் உண்ணும் உணவை உடைத்து, செரிமான கோளாறை சரிசெய்கிறது. வயிறு உப்புசம் மற்றும் மலச்சிக்கல் ஆகியவற்றைப் போக்குகிறது.
(4 / 10)
சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது - சோம்பில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், உங்கள் சரும ஆரோக்கியத்தை அதிகரிக்கிறத. உங்கள் உடலில் உள்ள ஃப்ரி ராடிக்கல்களை எதிர்த்து போராடுகிறது. இது உங்களுக்கு இளம் வயதிலேயே வயோதிக தோற்றம் ஏற்டுவதை தடுக்கிறது. சோம்பு உங்கள் சருமத்தில் உள்ள கழிவுகளை நீக்குகிறது. இது உங்கள் சருமத்தின் ஒட்டுமொத்த பொலிவையும் அதிகரிக்கிறது.
(5 / 10)
சுவாசத்துக்கு புத்துணர்ச்சியைக் கொடுக்கிறது - சாப்பிட்டவுடன் சோம்பை மென்று சாப்பிடுவதால் உங்கள் சுவாசம் புத்துணர்ச்சியடைகிறது. சோம்பின் நறுமணத்தில் ஆன்டி பாக்டீரியல் குணங்கள் உள்ளது. இது வாய் துர்நாற்றத்தை எதிர்த்து போராடுகிறது. உங்கள் சுவாசத்துக்கு புத்துணர்ச்சி தருகிறது.
(6 / 10)
வாயு மற்றும் வயிறு உப்புசத்தை குறைக்கிறது - சோம்பில் உள்ள வாயு நீக்கும் குணங்கள், உங்களுக்கு வாயுத்தொல்லை மற்றும் வயிறு உப்புசம் ஆகியவை ஏற்படுவதை தடுக்கிறது. உங்கள் தசைகளை அமைதிப்படுத்துகிறது. உங்கள் வயிற்றில் சிக்கிய வாயுக்கள் தொல்லை தருவதை குறைக்கிறது.
(7 / 10)
ரத்த அழுத்தத்தை முறைப்படுத்துகிறது - சோம்பில் உள்ள பொட்டாசியச் சத்துக்கள், உங்கள் உடலில் ரத்த அழுத்தத்தை முறைப்படுத் உதவும் முக்கியமான மினரல் ஆகும். சோம்பை அடிக்கடி எடுத்துக்கொள்வது உங்கள் உடலில் ரத்த அழுத்தத்தை குறைக்க உதவுகிறது. உங்கள் உடலில் உள்ள சோடியத்துக்கு எதிராக செயல்பட்டு, ரத்த அழுத்தத்தை முறைப்படுத்துகிறது.
(8 / 10)
உடல் வளர்சிதையை ஊக்குவிக்கிறது - சோம்பு மென்று சாப்பிடும்போது, அது உங்கள் உடலின் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது. சோம்பில் உள்ள ஃபென்சோன், அனேதோலே மற்றும் ஈஸ்ட்ராகோலே ஆகிய முக்கிய எண்ணெய்கள், உங்கள் உடலின் வளர்சிதை மாற்றத்தை ஊக்குவிக்கின்றன. இது உங்கள் உடலின் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவுகிறது.
(9 / 10)
வீக்கத்துக்கு எதிரான குணங்கள் - சோம்பில் உள்ள வலுவான வீக்கத்துக்கு எதிரான குணங்கள், அதில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்களான ஃப்ளாவனாய்ட்கள், ஃபினோலிக் உட்பொருட்கள் மற்றும் வோலாட்டைல் எண்ணெய் ஆகியவற்றால் ஏற்படுகிறது. இந்த உட்பொருட்கள், வீக்கத்தை குறைக்க உதவுகிறது. ஆர்த்ரிட்டிஸ் போன்ற நிலைகளில் இருந்து நிவாரணம் கொடுக்கிறது.
மற்ற கேலரிக்கள்