Padhma Raja Yogam: மேஷம் முதல் மீனம் வரை! அசூர வெற்றிகளை தரும் பத்மராஜ யோகம் யாருக்கு? ஜோதிடம் சொல்லும் ரகசியம் இதோ!
- Padhma Raja Yogam: தர்மகர்மாதிபதி யோகத்திற்கு இணையான யோகமாக இந்த பத்மராஜ யோகம் விளங்குகின்றது. எதிரிகளின் செல்வத்தை இந்த யோகம் கொடுக்கும். வம்பு, வழக்குகளில் நீதிமன்ற வெற்றிகளை பெற இந்த யோகம் துணை புரியும்.
- Padhma Raja Yogam: தர்மகர்மாதிபதி யோகத்திற்கு இணையான யோகமாக இந்த பத்மராஜ யோகம் விளங்குகின்றது. எதிரிகளின் செல்வத்தை இந்த யோகம் கொடுக்கும். வம்பு, வழக்குகளில் நீதிமன்ற வெற்றிகளை பெற இந்த யோகம் துணை புரியும்.
(1 / 7)
ஜோதிடத்தில் யோகம் என்ற சொல்லு சேர்க்கை என்று பொருள்படுகிறது. ஒருவருடைய ஜாதகத்தில் கிரகங்களின் நகர்வு, பார்வை, ஆட்சி, உச்சம், நீசம் உள்ளிட்டவைகளை வைத்து பல்வேறு யோகங்கள் ஏற்படுகின்றன. ராஜயோகம், விபரீத ராஜயோகம், கஜகேசரி யோகம், பாக்கிய யோகம், ஜோதி யோகம் உள்ளிட்ட பல்வேறு யோகங்கள் உள்ளன. அந்த வகையில் சிறப்பு பலன்களை தரக்கூடிய யோகங்களில் ஒன்றாக பத்மராஜ யோகம் விளங்குகின்றது.
(2 / 7)
போட்டிகளில் வெற்றிகளை குவிக்கும் யோகங்களில் ஒன்றாக பத்மராஜ யோகம் உள்ளது. பதவி,பெயர், புகழ், முன்னேற்றங்களை தரும் யோகங்களில் முதன்மையான யோகமாக இந்த பத்மராஜ யோகம் உள்ளது.
(3 / 7)
தர்மகர்மாதிபதி யோகத்திற்கு இணையான யோகமாக இந்த பத்மராஜ யோகம் விளங்குகின்றது. எதிரிகளின் செல்வத்தை இந்த யோகம் கொடுக்கும். வம்பு, வழக்குகளில் நீதிமன்ற வெற்றிகளை பெற இந்த யோகம் துணை புரியும்.
(4 / 7)
ஒருவருக்கு பத்மராஜ யோகம் அமைய உங்கள் ஜாதகத்தில் 4ஆம் மற்றும் 5ஆம் அதிபதிகளின் ஆதரவு தேவைப்படும்.
(5 / 7)
4ஆம் இடம் என்பது பட்டம், பதவி, அந்தஸ்து, வெற்றி, ரகசிய நடவடிக்கைகள், சொத்து, சுகம் சேர்க்கை உள்ளிட்டவற்றை குறிக்கும் இடமாக உள்ளது. 5ஆம் இடத்திலும் இதற்கு நிகரான பலன்களை கொடுக்க முடியும்.
(6 / 7)
4ஆம் அதிபதியும், 5ஆம் அதிபதியும் இணைந்து 4ஆம் இடத்திலோ அல்லது 5ஆம் இடத்திலோ இருப்பதன் மூலம் இந்த யோகம் உண்டாகின்றது.
(7 / 7)
4ஆம் அதிபதி 5ஆம் இடத்திலும், 5ஆம் அதிபதி 4ஆம் இடத்திலும் பரிவர்தனை பெற்று இருப்பது. 4ஆம் இடத்திலோ, அல்லது 5ஆம் இடத்திலோ யாரேனும் ஒருவர் ஆட்சி பெற்று மற்றொருவர் அவரை பார்ப்பது, பரஸ்பரம் இவர்களுக்கு ஒருவரை ஒருவர் 4ஆம் இடத்தில் இருந்தபடியோ அல்லது 5ஆம் இடத்தில் இருந்தபடியோ பார்பதன் மூலம் பத்மராஜ யோகம் உண்டாக காரணமாக அமைகின்றது.
மற்ற கேலரிக்கள்