Belly Fat : அடம்பிடிக்கும் தொப்பை! அடித்து விரட்டும் உணவுகள்! ஆரோக்கியமாக கொழுப்பை குறைக்க வழிகள்!
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Belly Fat : அடம்பிடிக்கும் தொப்பை! அடித்து விரட்டும் உணவுகள்! ஆரோக்கியமாக கொழுப்பை குறைக்க வழிகள்!

Belly Fat : அடம்பிடிக்கும் தொப்பை! அடித்து விரட்டும் உணவுகள்! ஆரோக்கியமாக கொழுப்பை குறைக்க வழிகள்!

May 13, 2024 05:07 PM IST Priyadarshini R
May 13, 2024 05:07 PM , IST

  • Belly fat : உடற்பயிற்சி மற்றும் உணவுக் கட்டுப்பாடு என என்ன செய்தாலும் தொப்பை குறையமாட்டேன் என்று அடம் பிடிக்கிறதா? அதற்கு ஊட்டச்சத்து நிபுணரின் கூற்றுப்படி நீங்கள் செய்ய வேண்டியது என்ன என்பதை இங்கே தெரிந்துகொள்ளுங்கள். 

தொப்பை கொழுப்பு அல்லது உள்ளுறுப்பு கொழுப்பு அனைத்து உடல் கொழுப்புகளுமே நமக்கு தொல்லை தருபவைதான். எனவே நீரிழிவு, இதய பிரச்னை அல்லது உயர் ரத்த அழுத்தம் போன்ற பல நாள்பட்ட உடல்நலப் பிரச்னைகளைத் தவிர்க்க உடனடியாக கவனிக்கவேண்டும். உணவியல் நிபுணர் மன்பிரீத் கல்ரா தொப்பை கொழுப்பை குறைக்க உதவும் உணவுகள் மற்றும் அன்றாட பழக்கவழக்கங்களின் தொகுப்பைப் பகிர்ந்து கொள்கிறார். 

(1 / 12)

(Freepik)

தொப்பை கொழுப்புக்கான காரணங்கள் - உடல் உழைப்பு அல்லது உடற்பயிற்சி இல்லாததால், வயிற்றுப்பகுதியில் அதிகளவில் தொப்பை ஏற்படுகிறது. அதிகப்படியான பதப்படுத்தப்பட்ட குப்பை உணவுகளை உட்கொள்வது, தூக்கமின்மை, மன அழுத்தம், இன்சுலின் எதிர்ப்பு, அதிகப்படியான சர்க்கரை உட்கொள்ளல் மற்றும் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு அதிகமாக ஆல்கஹால் உட்கொள்வது ஆகியவை துரத்தமுடியாத தொப்பை கொழுப்பை குவிக்க வழிவகுக்கும்.

(2 / 12)

(Pexels)

ஆரோக்கியமான கொழுப்புகளை உண்ணுங்கள் - ஊறவைத்த கொட்டைகள் மற்றும் விதைகள் போன்ற நல்ல கொழுப்புகளுடன் உங்கள் நாளைத் தொடங்குவது தொப்பை கொழுப்பை எரிக்க உதவும். மோனோசாச்சுரேட்டட் கொழுப்புகள் மற்றும் ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் போன்ற ஆரோக்கியமான கொழுப்புகள் நிறைந்த உணவுகள் கொழுப்பு இழப்புக்கு வழிவகுக்கும் என்பதை ஆராய்ச்சி நிரூபிக்கிறது, குறிப்பாக நடுப்பகுதியிவ் உள்ள கொழுப்புகள் இதனால் குறையும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். 

(3 / 12)

ஹார்மோன்கள் - உடல் எடை குறைப்பின் ஒரு அங்கமாக ஹார்மோன்கள் உள்ளது. எனவே உடலில் ஏற்படும் அனைத்து மாற்றங்களையும் காண ஹார்மோன் ஏற்றத்தாழ்வு மற்றும் குடல் ஆரோக்கியம் என அனைத்திலும் கவனம் செலுத்துங்கள். 

(4 / 12)

(Unsplash)

தினசரி நடைப்பயிற்சி மற்றும் உடற்பயிற்சிகள் - தினசரி நடைப்பயிற்சி மற்றும் வாரத்திற்கு இரண்டு நாட்கள் உடற்பயிற்சி செய்யுங்கள். இது கண்டிப்பாக உடல் எடையை குறைக்க உதவும். மேலும் உடலை சுறுசுறுப்புடன் வைத்துக்கொள்ள உதவும். உடலின் அனைத்து பாகங்களுக்கும் ரத்த ஓட்டம் சீராக பாய்வதை உறுதிசெய்யும். 

(5 / 12)

(Gustavo Fring )

நார்ச்சத்தை நம்புங்கள் - கரையக்கூடிய நார்ச்சத்துள்ள உணவுகளை அதிகம் சாப்பிடுங்கள், ஏனெனில் இது இன்சுலின் உணர்திறனை மேம்படுத்தவும், உங்கள் குடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்களுக்கு உணவளிக்கவும் உதவும். 

(6 / 12)

இரவில் தாமதமாக சாப்பிடுவதைத் தவிர்க்கவேண்டும் - இரவில் தாமதமாக சாப்பிட நேரிடலாம். நாள் முழுவதும் வேலை என அலைந்து திரயும்போது, சாப்பிடுவதற்கு தாமதம் ஏற்படலாம். இதனால், இரவு உணவை எடுத்துக்கொள்ள குறிப்பிட்ட நேரத்தை வழக்கமாக கடைபிடியுங்கள். அதற்குப்பின்னர் உணவு எடுத்துக்கொள்ளக்கூடாது. தினமும் இரவு 8 மணிக்குள் உணவை முடித்துவிடவேண்டும். இதை வழக்கமாக்கி, கட்டாயம் கடைபிடியுங்கள். 

(7 / 12)

(Shutterstock)

இலவங்கப்பட்டை சிகிச்சை - உணவுக்குப் பிறகு ஒரு கப் மிதமான சூடு உள்ள தண்ணீரில் ஒரு சிட்டிகை லவங்கப்பட்டை சேர்த்துக் குடிப்பதால் கொழுப்பு இழப்பு ஏற்படலாம். இது நன்றாக தூங்கவும் உதவுகிறது. 

(8 / 12)

ஆளி விதைகள் - எந்தவொரு உணவிலும் ஒரு ஸ்பூன் வறுத்த ஆளி விதைகளை கலந்து சாப்பிடலாம் அல்லது தனியாகக்கூட சாப்பிடலாம். ஆளிவிதை உங்கள் உணவில் நார்ச்சத்து, புரதம் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகளைச் சேர்க்க உதவும், மனநிறைவை மேம்படுத்துகிறது மற்றும் கொழுப்பு இழப்புக்கு உதவுகிறது. 

(9 / 12)

ஆப்பிள் சைடர் வினிகர் - உணவுக்கு முன் ஒரு கிளாஸ் தண்ணீரில் ஒரு ஸ்பூன் ஆப்பிள் சைடர் வினிகர் கலந்து பருகிவிட்டு, ஒரு மணி நேரம் கழித்து, உணவை உட்கொள்ளுங்கள். அது தொப்பை கொழுப்iப குறைக்க உதவுவதுடன், உடலுக்கும் ஆரோக்கியம் தரும். 

(10 / 12)

பீன்ஸ் - கார்போஹைட்ரேட்கள், நார்ச்சத்து மற்றும் புரதம் கொண்ட பீன்ஸ் போன்ற காய்கறிகள் கொழுப்பு இழப்புக்கு உதவும். உங்கள் உணவில் போதுமான காய்கறிகளை சேர்த்துக் கொள்வதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். 

(11 / 12)

வெந்தய விதைகள் நீர் - கொழுப்பு இழப்புக்கு நீங்கள் சாப்பிடக்கூடிய மிகச் சிறந்த சூப்பர்ஃபுட்களில் ஒன்று வெந்தய விதை நீர். ஒரு ஸ்பூன் வெந்தயத்தை ஒரு டம்ளர் தண்ணீரில் இரவு முழுவதும் ஊற வைத்து காலையில் குடிக்கவும். 

(12 / 12)

மற்ற கேலரிக்கள்