Bayilvan Ranganathan: ச்சீ.. ச்சீ.. சரக்கு சாப்பிடும் போது சைடிஷா..வாய்ப்பில்ல ராஜா..! - ரஜினி சரக்கு ஸ்டைல் தெரியுமா?
ரஜினி சரக்கு ஸ்டைல் உட்பட ரஜினிகாந்தின் உணவு பழக்க வழக்கங்கள் குறித்து பயில்வான் ரங்கநாதன் சினி உலகம் சேனலுக்கு கடந்த சில வருடங்களுக்கு முன்னர் பகிர்ந்த தகவல்கள் இவை!
(1 / 6)
ரஜினிகாந்தின் உணவு பழக்க வழக்கங்கள் குறித்து பயில்வான் ரங்கநாதன் சினி உலகம் சேனலுக்கு கடந்த சில வருடங்களுக்கு முன்னர் பகிர்ந்த தகவல்கள் இவை!
இது குறித்து அவர் பேசும் போது, “ரஜினிகாந்திற்கு வெள்ளை சம்பந்தமான உணவுப் பொருட்கள் எதுவுமே பிடிக்காது. அவர் அரிசி சாப்பாடு, பால், தயிர் உள்ளிட்ட பொருட்களை சாப்பிட மாட்டார். அந்த காலத்தில் ரஜினிகாந்த் வீட்டின் அருகில் உள்ள ஸ்டார் ஹோட்டலுக்கு சென்று மது அருந்துவார்.
செல்லும்பொழுது காரில் செல்வார். வரும்போது நடந்து வருவார்.
(2 / 6)
ரஜினியின் சிறப்பம்சம் என்னவென்றால், மது அருந்தும் பொழுது சைடிஷ் சாப்பிட மாட்டார்.
அவர் தன்னுடைய கல்யாணத்திற்கு பத்திரிகையாளர்களை சிலரை பகல் 12 மணி அளவில் வரச்சொல்லி இருந்தார். அங்கு பார்ட்டி ரெடி செய்யப்பட்டு இருந்தது. எல்லோரும் மது அருந்தினார்கள். முதல் ரவுண்டை முடித்து, இரண்டாவது ரவுண்டுக்கு செல்லும் பொழுது அனைவருக்கும் வயிறு எரிய ஆரம்பித்துவிட்டது. காரணம் என்னவென்றால், அங்கு சைடிஷ் எதுவுமே இல்லை.
(3 / 6)
இதனையடுத்து அவரிடம் சென்று என்ன ரஜினி மது மட்டும்தான் இருக்கிறது; சைடிஸ் எதுவுமே இல்லை என்று கேட்டபோது இதுதான் ரஜினி ஸ்டைல் என்று சொன்னார். உங்களுக்கு அது சரி… ஆனால் எங்களுக்கு என்று கேட்ட போது, இதனையடுத்து ஆந்திரா ஹோட்டலில் இருந்து சாப்பாடு வந்தது.
(4 / 6)
கமல் அவருக்கு அப்படியே எதிர்மாறானவர். உலகத்தில் உள்ள எல்லா அசைவ உணவுகளையும் அவர் சாப்பிடுவார்.
(5 / 6)
ஒரு நாள் ஈசலை நெய்யில் வறுத்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார். கமல்ஹாசன் தயாரித்து அந்தப்படத்தில் கமல்ஹாசனே நடிக்கிறார் என்றால், அந்த படப்பிடிப்பில் தொழிலாளர்களுக்கு எல்லாவித உணவுகளும் இருக்கும்.
மற்ற கேலரிக்கள்