Bayilvan Ranganathan: ‘அவ எனக்கு கஞ்சி ஊத்துறாளா; மாசம் 10 லட்சம் வேணும்;பொய்யா பேசிக்கிட்டு இருக்கா- பயில்வான் விளாசல்!
Bayilvan Ranganathan: உண்மை எப்போதும் உண்மையாகத்தான் இருக்கும் பொய் பேசுகிறவர்கள், எப்போதும் பொய் பேசிக் கொண்டுதான் இருப்பார்கள். - பயில்வான் விளாசல்!
(1 / 5)
Bayilvan Ranganathan: ‘அவ எனக்கு கஞ்சி ஊத்துறாளா; மாசம் 10 லட்சம் வேணும்;பொய்யா பேசிக்கிட்டு இருக்கா;பயில்வான் விளாசல்!
(2 / 5)
பயில்வான் ரங்கநாதன் பொதுவெளியில் மற்ற நடிகர்களை பற்றி பேசுவதை கண்டித்த சின்மயி தாயார் பத்மஹாசினி கேடகம் யூடியூப் சேனலுக்கு பேசி இருந்தார். குழந்தைகளை குழந்தைகளாக பார்க்க வேண்டும்.அதில் அவர் பேசும் போது, “பயில்வான் ரங்கநாதன் செய்கிற அட்டூழியத்தை தாங்கவே முடியவில்லை. அவருக்கும் நான் சில விஷயங்களை சொல்ல வேண்டும். அவருக்கும் எனக்கும் கிட்டத்தட்ட ஆறு வயது வித்தியாசம். தயவு செய்து அவர் குழந்தைகளை குழந்தைகளாக பார்க்க வேண்டும். தயவுசெய்து அந்த குழந்தைகளை சந்தியில் சிரிக்க வைத்து அவர்களது வயிறை எறிய வைக்க கூடாது.
(3 / 5)
நீங்கள் அப்படி செய்யாதீர்கள். உங்களுக்கு பணம் தானே வேண்டும். நான் உங்களுக்கு தருகிறேன். உங்களை வைத்து நான் கஞ்சி ஊத்துகிறேன். தயவுசெய்து இந்த காரியத்தை செய்யாதீர்கள். நான் இருக்கும் காலத்தில், மஞ்சள் பத்திரிக்கை என்ற ஒன்று இருந்தது.
(4 / 5)
அதை நான் எப்போது கேள்விப்பட்டேன் என்றால், எம் எஸ் சுப்புலட்சுமி அம்மாவை பற்றி அதில் தவறாக எழுதி இருந்தார்கள். யாரோ செத்துப் போனதற்கெல்லாம் அவரை குற்றம் சாட்டி இருந்தார்கள். அவரை அந்த பகவான் சதாசிவம்தான் காப்பாற்றி கொண்டு வந்தார்.” என்றார். பயில்வான் பதிலடி இதற்கு பதிலடி கொடுத்திருந்த பயில்வான் ரங்கநாதன், “ வைரமுத்து, கல்யாணத்திற்கு வருவதற்கு ஐம்பதாயிரம் வரை வாங்குகிறார். அப்படி இருப்பவர் உங்கள் கல்யாணத்திற்கு கூப்பிடாமலேயே வந்தார் என்று சொல்கிறீர்கள். இது எப்படி நம்ப முடியும். அவள் பேட்டியில் எனக்கு கஞ்சி ஊத்துவதாக கூறியிருக்கிறாள். அவளுக்கெல்லாம் நான் பதில் சொல்லத் தேவையில்லை.
(5 / 5)
உண்மை எப்போதும் உண்மையாகத்தான் இருக்கும் பொய் பேசுகிறவர்கள், எப்போதும் பொய் பேசிக் கொண்டுதான் இருப்பார்கள். ஆகையால் இது குறித்து என்ன செய்தி வெளியானாலும், அது குறித்து எனக்கு கவலை இல்லை. எனக்கு மாதம் மாதம் 10 லட்ச ரூபாயை சம்பளமாக தரச் சொல்லுங்கள் நான் பொதுவெளியில் பேசுவதை நிறுத்தி விடுகிறேன்” என்று பேசினார்.
மற்ற கேலரிக்கள்