Bava chelladurai: ‘இவ்வளவு வன்மம் இருக்கும்னு நினைக்கல.. அவன எங்களால சமாளிக்கவே முடியல' - பிரதீப்பால் கதறும் பவா!
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Bava Chelladurai: ‘இவ்வளவு வன்மம் இருக்கும்னு நினைக்கல.. அவன எங்களால சமாளிக்கவே முடியல' - பிரதீப்பால் கதறும் பவா!

Bava chelladurai: ‘இவ்வளவு வன்மம் இருக்கும்னு நினைக்கல.. அவன எங்களால சமாளிக்கவே முடியல' - பிரதீப்பால் கதறும் பவா!

Mar 11, 2024 01:57 PM IST Kalyani Pandiyan S
Mar 11, 2024 01:57 PM , IST

என்னுடைய மரியாதை இன்னும் குறைந்திருக்குமோ என்ற எண்ணம் இப்போது வருகிறது. பிக்பாஸ் வீட்டிற்குள் சென்ற எனக்கு நாம் ஒரு பெரிய ரைட்டர் என்ற மிதப்பெல்லாம் இல்லை. 

இலக்கிய வட்டாரத்தில் மிகவும் பிரபலமான பவா செல்லதுரை அண்மையில் நடந்து முடிந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றார். உள்ளே சென்ற அவர் அங்கிருந்த போட்டியாளர்களை சமாளிக்க முடியாமலும், பிக்பாஸ் நிகழ்ச்சி ஒரு கேம் என்பதை புரிந்து கொள்ளமாலும் பாதியிலேயே வெளியேறுவதாக அறிவித்தார்.  இதனை கமல் உட்பட பலர் தடுத்த போதும், அவர் கேட்டபாடில்லை. இதனையடுத்து பிக்பாஸ் குழு அவரை வெளியேற அனுமதியளித்தது. இந்த நிலையில் அண்மையில், பிக்பாஸ் வீட்டிற்குள் தான் எதிர்கொண்ட இன்னல்கள் குறித்து பவா செல்லதுரை மனம் திறந்து வாவ் தமிழா சேனலுக்கு பேசியிருக்கிறார்.   

(1 / 5)

இது குறித்து பவாசெல்லதுரை பேசும் போது, “பிக்பாஸ் நிகழ்ச்சியாலும், அங்கு இருந்த போட்டியாளர்களாலும் எனக்கு எந்த விதமான இடையூறுகளும் ஏற்படவில்லை. அவர்கள் என்னை மிகவும் மரியாதையாகவே நடத்தினார்கள். ஆனால், இன்னும் கொஞ்ச காலம் உள்ளே இருந்திருந்தால், என்னுடைய மரியாதை இன்னும் குறைந்திருக்குமோ என்ற எண்ணம் இப்போது வருகிறது. பிக்பாஸ் வீட்டிற்குள் சென்ற எனக்கு நாம் ஒரு பெரிய ரைட்டர் என்ற மிதப்பெல்லாம் இல்லை. நாமும் அந்த 18 பேர்களில் ஒரு போட்டியாளர் என்றுதான் நினைத்தேன். வெளியே வந்த பின்னர்தான் எனக்கு மிகவும் ஷாக்காக இருந்தது. காரணம் வெளியே அப்படியான சர்ச்சைகள் நிகழ்ந்து கொண்டிருந்தன.   

(2 / 5)

குறிப்பாக தோல்வி அடைந்த நபர்களின் வன்மம் மிக மிக அதிகமாக இருந்ததை பார்க்க முடிந்தது. இலக்கியத்துறையில் அந்த மாதிரியான ஆட்கள் இருந்ததை பார்த்து நான் மிகவும் அதிர்ச்சி அடைந்தேன். வாழ்க்கை முழுவதும் நான் மிகவும் பாசிட்டிவான மனிதர்களை பார்த்து வளர்ந்தவன். ஆனால் இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் நான் பங்கேற்றது எனக்கு நெகட்டிவான மனிதர்களை அடையாளம் காட்டியது. ஆனால் அது மாரடைப்பு வரை சென்றிருக்குமா? என்பது எனக்கு தெரியவில்லை. அன்றுதான் நான் சிறிய பிக்பாஸ் வீட்டில் இருந்து பெரிய பிக்பாஸ் வீட்டிற்கு வந்திருந்தேன். அங்கு ஒருவர் என்னை சோம்பேறி என்று அழைத்தார்;அது என்னை மிகவும் வருத்தப்பட செய்ய வைத்து விட்டது.   

(3 / 5)

இதையடுத்துதான் நான் அந்த வீட்டிலிருந்து நிச்சயம் வெளியே வந்துவிட வேண்டும் என்று முடிவு செய்தேன். கமல் உட்பட பிக் பாஸ் குழுவில் இருந்த அனைவரும் என்னை பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்கச் சொன்னார்கள். ஆனால் நான் என் முடிவில் உறுதியாக இருந்தேன். நாபிக் பாஸ் வீட்டிற்குள் சென்றால் நிறைய பேசலாம். நல்ல உரையாடல்கள் நிகழும்; கோடிக்கணக்கான மக்களுக்கு நம்முடைய பேச்சு சென்று அடையும் என்று நினைத்தேன்.   

(4 / 5)

ஆனால், அது முழுக்க முழுக்க ஒரு விளையாட்டு என்பதே அதன் பின்னர்தான் எனக்கு தெரிந்தது. சிறிய வயதிலிருந்தே போட்டிகளில் இருந்து நான் விலகியே இருந்திருக்கிறேன். போட்டிகள் என்றாலே எனக்கு ஒருவித அசெளகரியம் வந்துவிடும். அப்படி இருந்த எனக்கு பிக்பாஸ் வீடே ஒரு போட்டி களமாக இருந்தது. உள்ளே இருந்த பிரதீப்பிற்கு பால்ய காலமானது பயங்கரமாக சிதைக்கப்பட்டிருந்தது. அவரை எங்களால் சமாளிக்கவே முடியவில்லை. இந்த வீட்டில் அவர்தான் ஒவ்வொரு நிமிடமும் கேம் கேம்  விளையாடிக் கொண்டிருந்தார்” என்று பேசினார். 

(5 / 5)

மற்ற கேலரிக்கள்