‘அட்வான்ஸ் தொகையை திருப்பிக்கொடுக்குறது என் பாலிசியே கிடையாது’ - 25 ஆயிரத்தை அமுக்க பார்த்த சரிதா! - கதை தெரியுமா?
அவரும் அந்த கதாபாத்திரத்தில் நடிக்கிறேன் என்று ஒப்புக்கொண்டார். இதனையடுத்து அவருக்கு முன் பணமாக 25 ஆயிரம் ரூபாய் கொடுத்து, அவருடைய தேதிகள் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் பத்திரத்தில் எழுதி, கையெழுத்து வாங்கி விட்டார்
(1 / 6)
‘தண்டிக்கப்பட்ட நியாயங்கள்’ படத்தில் சரிதா செய்த இடையூறுகள் குறித்து பாலாஜி பிரபு பெட்டர் டுடே யூடியூப் சேனலுக்கு பேசி இருக்கிறார்.
சரிதாதான் சரியாக இருப்பார்
அவர் பேசும் போது, ‘அப்போது நடிகை சரிதா மிகவும் பிரபலமாக இருந்தார். ‘தண்டிக்கப்பட்ட நியாயங்கள்’ படத்தில் இடம்பெற்ற பெண் கதாபாத்திரமும் அழுத்தமாக எழுதப்பட்டிருந்தது; அதனால் அந்த கதாபாத்திரத்திற்கு சரிதாதான் சரியாக இருப்பார் என்று என்னுடைய அப்பா அவரிடம் பேசினார். அவரும் அந்த கதாபாத்திரத்தில் நடிக்கிறேன் என்று ஒப்புக்கொண்டார். இதனையடுத்து அவருக்கு முன் பணமாக 25 ஆயிரம் ரூபாய் கொடுத்து, அவருடைய தேதிகள் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் பத்திரத்தில் எழுதி, கையெழுத்து வாங்கி விட்டார்.
(2 / 6)
சரிதா, செக்கை வங்கியில் கொடுத்து, இரண்டு நாட்களில் பணத்தை வாங்கிக் கொண்டார். முதல் நாள் மைசூரில் ஷூட்டிங். அதனால் அதற்கு தேவையான எல்லா ஏற்பாடுகளையும் அப்பா செய்திருந்தார். நாளை சூட்டிங், எல்லோரும் கிளம்ப வேண்டும் என்ற கட்டம் இருக்கும் பொழுது,
(3 / 6)
சரிதாவின் மேனேஜர் என்னுடைய அப்பாவிற்கு ஃபோன் செய்து, சரிதாவால் நாளை ஷூட்டிங்கிற்கு வர முடியாது என்றார்.
இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அப்பா, காரணத்தைக் கேட்க, பாலச்சந்தர் இயக்கும் அக்னி சாட்சி திரைப்படத்தில் சரிதா நடித்துக்கொண்டிருப்பதாகவும், அதன் படப்பிடிப்பு இன்னும் ஒரு வாரம் நீள வாய்ப்பு இருப்பதால், இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.
(4 / 6)
அட்வான்ஸ் தொகை
இதனையடுத்து அப்பா கோபம் அடைந்து, சரிதாவை பேசச் சொல்லுங்கள் என்று சொல்ல, சரிதா என்னை அவர் அறிமுகப்படுத்திய இயக்குனர் அவர் கேட்கும் பொழுது என்னால் தட்ட முடியாது; அதனால் உங்கள் படத்தின் சூட்டிங்கை நீங்கள் அடுத்த வாரம் தள்ளி வைத்து விடுங்கள் என்று கூறினார். இதை கேட்டு மேலும் கோபம் அடைந்த அப்பா, கடைசி நேரத்தில் இப்படி சொன்னால் எப்படி, எல்லாம் தயாராகிவிட்டது.
(5 / 6)
அதனால் எதையும் இனிமேல் மாற்ற முடியாது; மாற்றினால் பெரு நஷ்டம் ஏற்படும்; அதனால் நீங்கள் நாளை வர முயற்சி செய்யுங்கள் என்று சொல்ல.. இங்கு முடியுமா முடியாதா என்பது கேள்வி அல்ல; என்னால் வர முடியாது என்பதே பதில் என்றார். உடனே அப்பா, நீங்கள் நான் கொடுத்த அட்வான்ஸ் தொகையை திருப்பிக் கொடுத்து விடுங்கள் என்று சொல்ல, கொடுத்த அட்வான்ஸ் தொகையை திருப்பிக் கொடுப்பது என்னுடைய பாலிசியில் இல்லை என்றார் சரிதா; இதையடுத்து அப்பா, கொடுத்த அட்வான்ஸ் தொகையை திருப்பி வாங்காமல் விடுவது என்னுடைய பாலிசி அல்ல என்று கூறினார்.
(6 / 6)
வெளுத்த விட்ட அப்பா
உடனடியாக அன்றைய தினம் மிகவும் பிரபலமாக இந்த பத்திரிகைகளில் விஷயத்தை அப்பா கூறினார். அந்த விஷயம் பேப்பரில் வந்து விட்டது. இதனையடுத்து தன் பெயரை காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்று நினைத்த சரிதா, அப்பா கொடுத்த முன்பணம் அவருக்கு வந்து சேரவில்லை என்று பேட்டி கொடுத்தார். இதையடுத்து அப்பா அதே பத்திரிகைக்கு வங்கி கணக்கு விவரங்களை கொடுக்க, அது அடுத்த நாளே வந்து விட்டது. இதில், சரிதா சரியாக மாட்டிக் கொண்டார்.
அந்த செய்தி வெளியான 2 மணி நேரத்தில் 25 ஆயிரம் ரூபாயை அவரது மேனேஜர் மூலம் அப்பாவிடம் கொடுத்து அனுப்பிவிட்டார். நடிகைகளுக்கு பண ஆசை அதிகம்; அவருக்கு முன்னமே அந்த தேதியில் தன்னால் வர முடியாது என்பது நன்றாக தெரியும். ஆனாலும் பணத்தாசையால் இதையும் வாங்கி போட்டுக் கொள்வோம்; கடைசி நேரத்தில் முடியாது என்று சொல்லிப் பார்ப்போம்;வந்தால் லாபம், இல்லையென்றால் பணத்தை திருப்பி கொடுத்துவிடுவோம் என்ற ரீதியில் தான் அவர் செயல்பட்டு இருக்கிறார்’ என்று பேசினார்.
(sima)மற்ற கேலரிக்கள்