Badminton: பேட்மின்டன் ஆசியா மிக்ஸ்டு டீம் சாம்பியன்ஷிப்: காலிறுதியில் இந்தியா தோல்வி
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Badminton: பேட்மின்டன் ஆசியா மிக்ஸ்டு டீம் சாம்பியன்ஷிப்: காலிறுதியில் இந்தியா தோல்வி

Badminton: பேட்மின்டன் ஆசியா மிக்ஸ்டு டீம் சாம்பியன்ஷிப்: காலிறுதியில் இந்தியா தோல்வி

Published Feb 16, 2025 01:59 PM IST Manigandan K T
Published Feb 16, 2025 01:59 PM IST

  • Badminton: சீனாவில் நடைபெற்ற ஆசிய கலப்பு அணி சாம்பியன்ஷிப் போட்டியின் காலிறுதியில் இந்தியா தோல்வியை சந்தித்தது. ஜப்பானிடம் 3-0 என்ற கோல் கணக்கில் தோற்றது. இந்த ஆண்டு போட்டியில் ஜப்பான் ஒரு சிறந்த திறனுடன் இருந்தது.

ஆசிய கலப்பு அணிகள் சாம்பியன்ஷிப் காலிறுதியில் ஜப்பானிடம் 3-0 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்த இந்திய அணி வெளியேறியது. முன்னதாக, 2023ல் நடந்த போட்டியில் இந்தியா வெண்கலம் வென்றிருந்தது. 2017 ஆம் ஆண்டில் போட்டியின் முதல் பதிப்பில் ஜப்பான் சாம்பியன் ஆனது. 2019 ஆம் ஆண்டில் அவர்கள் இரண்டாம் இடத்தைப் பிடித்தனர். 

(1 / 6)

(AFP)

இந்தியர்களான எச்.எஸ். பிரணாய் மற்றும் மாளவிகா பன்சோட் ஆகியோர் தங்கள் ஒற்றையர் போட்டிகளில் தோல்வியடைந்தனர், அதே நேரத்தில் துருவ் கபிலா-தனிஷா க்ராஸ்டோ கலப்பு இரட்டையர் பிரிவில் தோல்வியடைந்தனர்.

(2 / 6)

மகளிர் ஒற்றையர் பிரிவில் உலகின் 8 ஆம் நிலை வீராங்கனையான டோமோகா மியாசாகியை எதிர்கொண்டார் மாளவிகா. இறுதியில் 21-12, 21-19 என்ற கணக்கில் தோல்வியடைந்தார். இந்தியா 2-0 என பின்தங்கிய நிலையில், உலகின் 31-வது இடத்தில் உள்ள 32 வயதான எச்.எஸ். பிரணாய், ஆண்கள் ஒற்றையர் பிரிவில் பேட்மிண்டன் தரவரிசையில் 16-வது இடத்தில் உள்ள கென்டா நிஷிமோட்டோவிடம் 21-15, 15-21, 21-12 என்ற கணக்கில் தோஸ்லி அடைந்தார்.

(3 / 6)

தொடக்க ஆட்டத்தில், உலகின் 12-வது இடத்தில் உள்ள இரட்டையர்களான ஹிரோகி மிடோரிகாவா மற்றும் நட்சு சைட்டோ ஆகியோர், தரவரிசையில் 37-வது இடத்தில் உள்ள துருவ் மற்றும் தனிஷாவை மூன்று ஆட்டங்களாக மோதி வீழ்த்தினர். இரண்டாவது செட்டில் இந்திய ஜோடி மீண்டும் வெற்றி பெற்றது, ஆனால் இறுதியில் 61 நிமிடங்களுக்குப் பிறகு 21-13, 17-21, 21-13 என்ற கணக்கில் தோல்வியடைந்தது.

(4 / 6)

ஆசிய பேட்மிண்டன் கலப்பு அணி சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் சீனா இந்தோனேசியாவை எதிர்கொள்ள உள்ளது.

(5 / 6)

பேட்மிண்டன் ஆசிய கலப்பு அணி சாம்பியன்ஷிப் 2025 இல் சனிக்கிழமை (பிப்ரவரி 15) ஜப்பானை 3-2 என்ற கணக்கில் வீழ்த்தி, போட்டியை நடத்தும் சீனா இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.

(6 / 6)

மணிகண்டன், சீனியர் கன்டென்ட் ப்ரொடியூசராக இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் பணிபுரிகிறார். அச்சு ஊடகம், மொழிபெயர்ப்பு துறை மற்றும் டிஜிட்டல் ஊடகம் என 10 + ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். தேசம், சர்வதேசம், கிரிக்கெட், விளையாட்டு உள்ளிட்ட பிரிவுகளில் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் செய்திகளை எழுதி வருகிறார். மெட்ராஸ் யுனிவர்சிட்டியில் பிஎஸ்சி விஷுவல் கம்யூனிகேஷன், அண்ணாமலை யுனிவர்சிட்டியில் எம்.ஏ. அரசியல் அறிவியல் மற்றும் டிப்ளமோ ஜர்னலிசம் படித்துள்ள இவர், தினமணி நாளிதழ், நியூஸ் 7 தமிழ் ஆகிய நிறுவனங்களைத் தொடர்ந்து 2023 ஜனவரி முதல் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.

மற்ற கேலரிக்கள்