Health Issue: முதுகு வலி முதல் இடுப்பு வலி வரை.. பின் பாக்கெட்டில் பர்ஸ் வைப்பதால் இத்தனை பாதிப்புகள் ஏற்படுமா?
- Purse In Back Pocket Health Issues: பணம் வைத்திருக்கும் பர்ஸ்களை தங்களது பேண்ட்களின் பின் பைகளில் வைத்திருக்கும் பழக்கம் பலருக்கும் உள்ளது. இந்த பழக்கம் சில வகையான நோய் பாதிப்புகளுக்கு காரணமாக இருப்பது பற்றி பலருக்கு தெரியாது. பார்ஸ்களை பின் பாக்கெட்டுகளில் வைப்பதால் வரும் பாதிப்புகளை பார்க்கலாம்
- Purse In Back Pocket Health Issues: பணம் வைத்திருக்கும் பர்ஸ்களை தங்களது பேண்ட்களின் பின் பைகளில் வைத்திருக்கும் பழக்கம் பலருக்கும் உள்ளது. இந்த பழக்கம் சில வகையான நோய் பாதிப்புகளுக்கு காரணமாக இருப்பது பற்றி பலருக்கு தெரியாது. பார்ஸ்களை பின் பாக்கெட்டுகளில் வைப்பதால் வரும் பாதிப்புகளை பார்க்கலாம்
(1 / 8)
ஆண்கள் மட்டுமல்லாமல், பெண்களும் கூட பணம் வைத்திருக்கும் பார்ஸ்களை தாங்கள் பேண்ட் அணிந்திருந்தால் அதன் பின் பைகளில் வைத்திருக்கும் பழக்கத்தைக் கொண்டுள்ளனர். ஆனால் இந்த பழக்கம் நாளைடைவில் சில உடல் நல பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும் என கூறப்படுகிறது. அத்துடன் பின்னால் வைக்கும் பணப்பை கவனக்குறைவால் கீழே விழுந்து விடவும், மிஸ்ஸாகவும் வாய்ப்பு உள்ளது
(2 / 8)
பின் பகுதியில் வைக்கும் பர்ஸ்களின் காரணமாக முதுகுவலி மற்றும் சியாட்டிகா வலி உள்ளிட்ட பல பிரச்னைகளை ஏற்படலாம் என ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். ஏனெனில் பணப்பையில் வைக்கப்பட்டுள்ள நாணயங்கள், அட்டைகள் மற்றும் பிற கடினமான பொருட்கள் நம் உட்கார்ந்த அல்லது நிற்கும் நிலையிலும் பல்வேறு சிக்கல்களை உருவாக்குகின்றன என சொல்லப்படுகிறது
(3 / 8)
இடுப்புப் பிரச்னைகள்: ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, இடுப்பு நமது முதுகெலும்புக்குக் கீழே அமைந்துள்ளது. இந்த சூழ்நிலையில், பின் பகுதியில் பர்ஸ் வைத்து நாம் எங்காவது உட்காரும்போது, இடுப்பு தரையில் கிடைமட்டமாக இருக்காது. இதன் விளைவாக, முதுகெலும்பில் அழுத்தம் வைக்கப்படுகிறது. இதன் விளைவாக இடுப்பிலும் பல்வேறு பிரச்னைகள் ஏற்படலாம்
(4 / 8)
சியாட்டிகா வலி: சியாட்டிக் நரம்பு இடுப்பு வழியாக கால்களுக்குச் செல்கிறது. உங்கள் பின் பாக்கெட்டில் பர்ஸை நீண்ட நேரம் வைத்திருப்பது சியாட்டிக் நரம்பில் அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. இது சியாட்டிகா வலியை ஏற்படுத்தும்
(5 / 8)
முதுகு மற்றும் இடுப்பு வலி: இடுப்பு கிடைமட்டமாக இல்லாவிட்டால், முதுகெலும்பில் அழுத்தம் ஏற்படுகிறது. இது முதுகு மற்றும் இடுப்பில் கடுமையான வலியை ஏற்படுத்தும். தற்போது பலரும் இந்தப் பிரச்னையால் அவதிப்படுகிறார்கள்
(6 / 8)
வாலட் சிண்ட்ரோம்: வாலட் அல்லது பிரிஃபார்மிஸ் சிண்ட்ரோம் பின் பகுதியில் நாம் வைத்திருக்கும் பர்ஸ் காரணமாகவும் ஏற்படலாம். இந்த நோய்க்குறி முக்கியமாக பிட்டத்தின் தசைகள் சுருங்குவதால் ஏற்படுகிறது
(7 / 8)
கீழ் மூட்டுகள் செயலிழப்பு: பலர் நீண்ட நேரம் உட்கார்ந்தால் கீழ் மூட்டுகள் செயலிழந்து போகலாம். இதற்கு ஒரு காரணம் பர்ஸ் ஆக கூட இருக்கலாம். பணப்பை இடுப்பு பகுதியில் அழுத்தம் கொடுக்கும்போது, இரத்த நாளங்கள் மற்றும் நரம்புகளில் அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. இது கீழ் மூட்டுகளை முடக்குகிறது
மற்ற கேலரிக்கள்