’உங்களுக்கு அடுத்த பிறவி உண்டா?’ அயன, சயன, போகத்தை கூறும் 12ஆம் வீட்டின் ரகசியங்கள்!
- அயன, சயன, போக, சுக, விரைய ஸ்தானமாக 12ஆம் இடம் விளங்குகிறது!
- அயன, சயன, போக, சுக, விரைய ஸ்தானமாக 12ஆம் இடம் விளங்குகிறது!
(1 / 9)
ஜோதிடத்தில் 12ஆம் இடம் என்பது மோட்ச ஸ்தானம் என அழைக்கப்படுகிறது. அயன, சயன, போக, சுக, விரைய ஸ்தானமாகவும் இது விளங்குகிறது.
(2 / 9)
ஒரு ஜாதகரின் தூக்கம், மோட்சம், விரையம், கிரையம், போகம், சிறை, தூரதேச பயணம், வெளிநாட்டு குடியுரிமை, தலைமறைவு வாழ்கை, மறைமுக நோய், வாழ்கை துணையின் உடல்நிலை ஆகியவற்றை குறிகின்றது. (Pixabay)
(3 / 9)
ரகசிய செயல்பாடுகள், புதையல் யோகம், திடீர் அதிர்ஷ்டம், துறவு, மறைமுக சொத்து சேர்க்கை, திடீர் மரணம், கட்டில் சுகம் ஆகியவற்றை 12ஆம் இடத்தில் இருந்து அறியலாம்.
(4 / 9)
சூரியன் 12ஆம் வீட்டில் இருந்தால் சிறப்பு இல்லை. மன உறுதியற்ற நிலை, தகப்பன் - மகன் உறவுகளில் சிக்கல், அந்நிய தேசத்தில் வசிப்பது, அரசு தண்டனை பெறுவது, ஒழுக்கம் தவறுவது உள்ளிட்ட பிரச்னைகள் உண்டாகும். சூரியன் ஆட்சி, உச்சம் அல்லது இயற்கை சுபர்கள் பார்வை படும் போது இந்த பலன்கள் மாறுபடும். சந்திரன் 12ஆம் இடத்தில் இருந்தால் குழப்பமான மனநிலை, உறுதியற்ற தன்மை, குதர்க்கம் பேசுவது, அந்நிய தேசத்தில் சிறை படுவது உள்ளிட்ட பிரச்னைகள் உண்டாகும்.
(5 / 9)
செவ்வாய் 12ஆம் இடத்தில் இருந்தால் தோஷம் உண்டாகும். அவர் 7ஆம் பார்வையாக களத்திர ஸ்தானத்தை பார்ப்பதால் வாழ்கை துணை விஷயத்தில் பிரச்னை உண்டாகும். பிடிவாதத்தால் விரையம் ஏற்படும். சகோதர வர்க்கத்துடன் பிரச்னை உண்டாகும். புதன் 12ஆம் இடத்தில் இருந்தால் சிறப்பை தரும். மறைந்த புதன் நிறைந்த கல்வி மற்றும் தனத்தை தருவார். துணிச்சல், சாதூர்யம், உயர்க்கல்வி, முன்னேற்றம், வெளிநாட்டு வாழ்கை, அறிவால் காரியம் சாதிக்கும் தன்மை உண்டாகும்.
(6 / 9)
குரு பகவான் 12ஆம் இடத்தில் இருந்தால், சிறப்பு அல்ல. விதண்டாவாதம் பேசுதல், தெய்வ மறுப்பு, பெரியோர்களை அவமானம் செய்வது, வீண் விரையம் உள்ளிட்ட தன்மைகள் உண்டாகும். சுக்கிரன் 12ஆம் இடத்தில் இருந்தால் ஜாதகருக்கு நன்மைகள் கிடைக்கும். சுகபோக சிந்தனை ஜாதகருக்கு இருக்கும், பெண்களால் ஆதாயம், காமத்தில் ஆர்வம், ஆடம்பர வாழ்கை பற்றிய சிந்தனைகள் அதிகம் இருக்கும்.
(7 / 9)
சனி பகவான் 12ஆம் இடத்தில் இருந்தால், சிறைபடுதல், கண் நோய், எதிலும் நஷ்டம், விதண்டாவாதம், ஒத்துழையாமை, குற்றம் செய்தல். போதை வஸ்துக்கள் உள்ளிட்ட பிரச்னைகள் உண்டாகும்.
(8 / 9)
ராகு பகவான் 12ஆம் இடத்தில் இருந்தால், சிறப்பு இல்லை. இயற்கை சுபர் தொடர்பு இல்லாத போது ராகு 12இல் இருந்தால் சோம்பேறிதனம் அதிகம் இருக்கும். சட்டத்திற்கு புறம்பான செயல்களில் ஈடுபாடு இருக்கும். பங்குச்சந்தை மற்றும் சூதாட்டம் மீது ஆர்வம் இருக்கும். சுபர்கள் தொடர்பு இருந்தால் அன்னிய தேசத்தில் பொருள் ஈட்டும் யோகம் உண்டாகும்.
(9 / 9)
கேது 12ஆம் வீட்டில் இருந்தால், பிறவி முடிவுக்கு வரும் என்று ஜோதிட மூல நூல்கள் கூறுகின்றன. ஆனால் இதற்கு சுபர்களின் தொடர்பு ஏற்பட வேண்டும். பாவ கிரகங்களுடன் கேதுவுக்கு தொடர்பு இருந்தால் தூக்கம் கெடுதல், மனநோய் உண்டாதல், அலைச்சல், பற்று அற்ற நிலை, குடும்ப வாழ்கையில் ஈடுபாடு இல்லாமை உள்ளிட்ட சிக்கல்கள் உண்டாகும். (Pixabay)
மற்ற கேலரிக்கள்