ஐபிஎல் 2025: இந்த சீசனின் முதல் தோல்வி.. அக்சர் படேலுக்கு அபராதம் விதித்த பிசிசிஐ! மூன்றாவது கேப்டனாக தண்டனை
- ஏப்ரல் 13 டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடந்த மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் குறைந்த ஓவர் ரேட் குற்றத்தில் ஈடுபட்டதாக டெல்லி கேபிடல்ஸ் கேப்டன் அக்சர் படேலுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
- ஏப்ரல் 13 டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடந்த மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் குறைந்த ஓவர் ரேட் குற்றத்தில் ஈடுபட்டதாக டெல்லி கேபிடல்ஸ் கேப்டன் அக்சர் படேலுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
(1 / 7)
இந்த சீசனில் குறைவான ஓவர் ரேட் ஐபிஎல் நடத்தை வதிமீறல் குற்றத்தில் ஈடுபட்ட கேப்டன்களில் மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியா, ராஜஸ்தான் ராயல்ஸ் தற்காலிக கேப்டன் ரியான் பராக் ஆகியோருக்கு அடுத்தபடியாக டெல்லி கேபிடல்ஸ் அக்சர் படேல் இணைந்துள்ளார்
(PTI)(2 / 7)
டெல்லி கேபிடல்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையிலான இந்த போட்டியில் 12 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை வெற்றி பெற்றது. ஆட்டத்தின் 19வது ஓவரில் தொடர்ந்து மூன்று ரன்அவுட்டுகள் ஆன நிலையில் டெல்லி கேபிடல்ஸ் அணியின் நான்கு தொடர் வெற்றி பயணம் முடிவுக்கு வந்தது. இதில் தோல்வியை தழுவிய டெல்லி கேப்டன் அக்சர் படேலுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது
(PTI)(3 / 7)
ஐபிஎல் நடத்தை விதிமீறல் குறித்த நேரத்தில் பந்து வீசி முடிக்கவில்லை. இது ஐபிஎல் நடத்தை விதிகளின் பிரிவு 2.22 இன் கீழ், (குறைந்தபட்ச பந்து வீச்சு குற்றங்களுடன் தொடர்புடையது) குற்றமாகும். இது அந்த அணியின் முதல் தவறு என்பதால் பராக்குக்கு ரூ. 12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
(PTI)(4 / 7)
இந்த போட்டியில் முதலில் பேட் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 5 விக்கெட் இழப்புக்கு 205 ரன்கள் குவித்தது. அந்த அணியின் திலக் வர்மா 59 ரன்கள் எடுத்தார்
(AP)(5 / 7)
இம்பேக்ட் வீரராக டெல்லி கேபிடல்ஸ் அணியில் களமிறங்கிய கருண் நாயர், அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 40 பந்துகளில் 12 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்களுடன் 89 ரன்கள் எடுத்து நல்ல தாக்கத்தை ஏற்படுத்தினார்
(AP)(6 / 7)
மும்பை இந்தியன்ஸ் நிர்ணயித்த 206 ரன்கள் என்ற மிக பெரிய இலக்கை துரத்திய டெல்லி கேபிடல்ஸ் அணி 19 ஓவர்களில் 193 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. இதனால் 12 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
(AFP)மற்ற கேலரிக்கள்