புத்தாண்டை புதிய பைக்குடன் வரவேற்கும் ஹோண்டா.. புதுமையான அப்டேட்களுடன் 2025 ஹோண்டா எஸ்பி160 அறிமுகம்
- 2025 Honda SP 160: ஹோண்டா நிறுவனம் தனது புதிய மாடல் பைக் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. 2025 ஹோண்டா SP160 என்ற அந்த பைக்கின் ஆரம்ப விலை ரூ.1.22 லட்சம். இதன் சிறப்பு அம்சங்கள், வசதிகள் என்னென்ன என்பதை பார்க்கலாம்
- 2025 Honda SP 160: ஹோண்டா நிறுவனம் தனது புதிய மாடல் பைக் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. 2025 ஹோண்டா SP160 என்ற அந்த பைக்கின் ஆரம்ப விலை ரூ.1.22 லட்சம். இதன் சிறப்பு அம்சங்கள், வசதிகள் என்னென்ன என்பதை பார்க்கலாம்
(1 / 6)
ஹோண்டா இந்தியா, 2025 ஹோண்டா SP160 பைக்கை உள்நாட்டு சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த பைக்கின் சிங்கிள் டிஸ்க் மாடல் ரூ.1,21,951 எக்ஸ் ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்படுகிறது. டூயல் டிஸ்க் மாடல் ரூ.1,27,956 எக்ஸ் ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்படுகிறது
(2 / 6)
2025 ஹோண்டா SP160 மாடலின் வடிவமைப்பை பொறுத்தவரை, பைக்கின் முன்பக்கம் முன்பை விட கூர்மையாகவும் கவர்ச்சியாகவும் செய்யப்பட்டுள்ளது. புதிய ஹெட்லேம்ப்கள் பைக்குக்கு மிகவும் ஸ்டைலான தோற்றத்தை அளிக்கிறது. மற்றபடி பெரிய மாற்றங்கள் எதுவும் செய்யப்படவில்லை. இந்த பைக் இப்போது ரேடியன்ட் ரெட் மெட்டாலிக், பேர்ல் இக்னியஸ் பிளாக், பேர்ல் டீப் கிரவுண்ட் கிரே மற்றும் அத்லெடிக் ப்ளூ மெட்டாலிக் உள்ளிட்ட நான்கு வண்ணங்களில் கிடைக்கிறது
(3 / 6)
ஹோண்டா SP 160 ஆனது 4.2-இன்ச் TFT திரையுடன் பொருத்தப்பட்டுள்ளது. புளூடூத் இணைப்பு மற்றும் ஹோண்டா ரோட் சிங்க் அப்ளிகேஷன் ஆகியவை இந்தத் திரையில் கிடைக்கும். இது டர்ன்-பை-டர்ன் நேவிகேஷன், அழைப்புகள் மற்றும் எஸ்எம்எஸ் எச்சரிக்கைகள், மியூசிக் பிளேபேக் போன்ற அம்சங்களைக் கொண்டுள்ளது. USB Type C சார்ஜிங் போர்ட்டும் உள்ளது. நீண்ட பயணங்களின் போது உங்கள் மொபைலை சார்ஜ் செய்வது வசதியான அம்சமாக திகழ்கிறது
(4 / 6)
ஹோண்டா எஸ்பி 160 பைக்கில் 162.71 சிசி ஏர்-கூல்டு எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்சின் 13 பிஎச்பி பவரையும், 14.8 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும்
(5 / 6)
ஹோண்டா SP 160 பைக் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு வருடத்தில் மிகவும் பிரபலம் அடைந்துள்ளது. எனவே, இந்த பைக்கின் புதிய மாடலை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது சில மேம்பட்ட அம்சங்களுடன் பொருத்தப்பட்டுள்ளது என ஹோண்டா நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
(6 / 6)
இளைஞர்களை மனதில் கொண்டு அழகாக வடிவமைக்கப்பட்ட இந்த பைக் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் நவீன வடிவமைப்பு, தொழில்நுட்பம் சார்ந்த அம்சங்கள் போன்றவற்றுடன், தொழில்நுட்ப ஆர்வமுள்ள வாடிக்கையாளர்களுக்கு இது ஒரு நல்ல தேர்வாக இருக்கும்," என்கிறார் ஹோண்டா நிறுவனத்தின் விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் இயக்குனர் யோகேஷ் மாத்தூர் தெரிவித்துள்ளார்
மற்ற கேலரிக்கள்