Numerology:ஆகஸ்டில் பிறந்தவர்களுக்கு எண் கணிதம் கணித்துச் சொல்லும் சுப, அசுப பலன்கள்: எச்சரிக்கையாக இருக்கவேண்டியவர்கள்?
- Numerology: ஆகஸ்டில் இந்த தேதியில் பிறந்தவர்களுக்கு அதிர்ஷ்டம் எவ்வாறு இருக்கும் என்பதை புட்டுபுட்டு வைக்கும் எண்கணிதம் பற்றி கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
- Numerology: ஆகஸ்டில் இந்த தேதியில் பிறந்தவர்களுக்கு அதிர்ஷ்டம் எவ்வாறு இருக்கும் என்பதை புட்டுபுட்டு வைக்கும் எண்கணிதம் பற்றி கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
(1 / 9)
Numerology: ஆகஸ்ட் மாதம் தொடங்கியுள்ளது. எண் கணிதத்தின்படி, இந்த மாதத்தின் எந்த தேதிகளில் உங்களுக்கு அதிர்ஷ்டம் கிடைக்கும் என்பது குறித்துப் பார்ப்போம். ஆகஸ்ட் மாதத்தில் எண் கணிதம் சொல்வது என்ன?எண் கணிதத்தின்படி, ஆகஸ்ட் மாதம் ஆண்டின் எட்டாவது மாதமாகும். எட்டு என்ற எண் சனியுடன் தொடர்புடையது என்பதால் இந்த மாதம் சனியின் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. இது தவிர, இந்த ஆண்டும் சனி பகவான் தான் வீரியமாகப் பல ராசிகளில் தாக்கத்தை ஏற்படுத்துகிறார். சனி பகவான் நியாயமானவர், கர்மத்திற்கு ஏற்ப பலன்களைத் தரக்கூடியவர். அதனால்தான் பிறந்த தேதி அல்லது பிறந்த தேதியின் கூட்டுத்தொகை 8 உள்ளவர்களுக்கு இந்த மாதம் சிறப்பாக இருக்கும்.
(2 / 9)
எண்-1:ஆகஸ்ட் மாதத்தில் ஒன்றாம் தேதி அல்லது பிறந்த தேதியின் கூட்டுத்தொகையில் பிறந்தவர்களுக்கு சூரிய பகவானின் அருளாசியால், பதவி உயர்வு கிட்டும். சூரிய பகவானின் கருணையால் மாதம் முழுவதும் சமூகத்தில் மரியாதை மாதம் முழுவதும் இருக்கும்.
(3 / 9)
எண்-2:ஆகஸ்ட் மாதத்தில் இரண்டாம் தேதி அல்லது பிறந்த தேதியின் கூட்டுத்தொகை இரண்டில் பிறந்தவர்களுக்கு, சந்திரன் இந்த தேதியில் மன அமைதியைத் தருவார். மேலும் நம்பிக்கை அதிகரிக்கும். பல இடங்களில் இருந்தும் பணம் சம்பாதிப்பீர்கள். மன அழுத்தம் குறையும்.
(4 / 9)
எண் -3: ஆகஸ்ட் மாதத்தில் மூன்றாம் தேதி அல்லது பிறந்த தேதியின் கூட்டுத்தொகை மூன்றில் பிறந்தவர்களுக்கு, குருவின் பாக்கியம் கிடைக்கும். பல இடங்களில் இருந்து பணம் கிடைக்கும். பண ஆதாயத்தின் அறிகுறிகள் குறித்து அறிந்துகொள்வோம்.
(5 / 9)
எண்-4: ஆகஸ்ட் மாதத்தில் நான்காம் தேதி அல்லது பிறந்த தேதியின் கூட்டுத்தொகை நான்கில் பிறந்தவர்களுக்கு, ராகு அதிபதியாகத் திகழ்கிறார். அதனால், இந்த ராசியினருக்கு நல்ல தொழில் வாய்ப்புகள் கிடைக்கும். கொஞ்சம் மன அழுத்தம் இருக்கலாம். உங்களுக்கு ஏதாவது நல்ல விஷயங்களும் நடக்கலாம்.
(6 / 9)
எண்- 5:ஆகஸ்ட் மாதத்தில் ஐந்தாம் தேதி அல்லது பிறந்த தேதியின் கூட்டுத்தொகை ஐந்தில் பிறந்தவர்களுக்கு, புதன் பகவான் அதிபதி ஆவார். ஐந்தாம் எண் உள்ளவர்களுக்கு பணியிடத்தில் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.
(7 / 9)
எண்-6:ஆகஸ்ட் மாதத்தில் ஆறாம் தேதி அல்லது பிறந்த தேதியின் கூட்டுத்தொகை ஆறில் பிறந்தவர்களுக்கு, ஆறாம் எண்ணின் அதிபதி சுக்கிரன் ஆவார். இந்த எண்ணில் உள்ளவர்கள் வேலையில் வெற்றி பெறுவார்கள். வியாபாரத்தில் புதிய மேம்பாட்டைத் தொடங்குவார்கள்
(8 / 9)
எண்-7:ஆகஸ்ட் மாதத்தில் ஏழாம் தேதி அல்லது பிறந்த தேதியின் கூட்டுத்தொகை ஏழாம் எண்ணில் பிறந்தவர்களுக்கு, ஏழாம் எண்ணின் அதிபதி கேது பகவான் ஆவார். இந்த எண்ணிக்கையில் உள்ளவர்கள் தங்கள் கடின உழைப்பின் பலனைப் பெறுவார்கள். அலுவலக நாட்கள் நன்றாக இருக்கும்.
மற்ற கேலரிக்கள்