August Rasi Palangal: கடைசி வாரத்தில் சுக்ரன் - புதன் இணைவு…கன்னி ராசிக்கு ஆகஸ்ட் மாதம் எப்படி இருக்கும்?
August Rasi Palangal: 10 ம் இடத்தில் புதன் சுக்கிரன்புதனும், சுக்கிரனும் பத்தாம் இடத்தில் இருப்பதால் வெளிநாடுகளுக்கு சென்று வேலை செய்ய விரும்புவர்களுக்கு, இந்த காலமானது மிகச் சரியான காலமாக இருக்கும். - கன்னி ராசிக்கான ஆகஸ்ட் மாத பலன்!
(1 / 5)
கன்னி ராசிக்கான ஆகஸ்ட் மாத பலன்களை லைஃப் ஹாரஸ்கோஃப் யூடியூப் சேனலில் பிரபல ஜோதிடர் ஷங்கர் நாராயணன் பேசி இருக்கிறார். அவர் கணித்திருக்கும் பலன்கள் உங்களுக்கு சாதமாக இருக்கிறதா அல்லது இல்லையா என்பதை இங்கே பார்க்கலாம்.
(2 / 5)
அதில் அவர் பேசும் போது, “கன்னி ராசிக்கு தற்போதைய பெயர்ச்சிகள் அனைத்துமே சாதகமாக இருக்கிறது என்பதை, கடந்த மாதமே பார்த்தோம். இப்போது கன்னி ராசிக்கு குரு பகவான் ஒன்பதாம் இடத்தில் இருக்கிறார். சனிபகவான் ஆறாம் இடத்தில் இருக்கிறார். அதனால், ஓரளவுக்கு உங்களது தொழில் வாழ்க்கை நன்றாகவே சென்று கொண்டிருக்கும். கூடவே செவ்வாய் இருப்பதால், உங்களுக்கு திறமையானது வெளியே நன்றாக தெரியும். அதற்கான அங்கீகாரம் கிடைக்கும்.
(3 / 5)
10 ம் இடத்தில் புதன் சுக்கிரன்
புதனும், சுக்கிரனும் பத்தாம் இடத்தில் இருப்பதால் வெளிநாடுகளுக்கு சென்று வேலை செய்ய விரும்புவர்களுக்கு, இந்த காலமானது மிகச் சரியான காலமாக இருக்கும். ஆகையால், அதற்கான முயற்சிகளை நீங்கள் தொடரலாம். வாய்ப்புகள் உங்கள் வசப்படும்.
ஒன்றாம் இடத்தில் கேது பகவான் இருப்பதால், அவ்வப்போது நீங்கள் கொந்தளிக்கவும், பின்பு மீண்டும் அமைதியாகவும், மாறுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.
(4 / 5)
ஆனால் அது காலப்போக்கில் சரியாகிவிடும் அதைப் பற்றி நாம் பெரிதாக கவலைப்பட தேவையில்லை.
திருமணம் நடக்குமா?
கல்யாண வயதில் இருப்பவர்களுக்கு திருமணம் தொடர்பாக, சின்ன சின்ன தடைகள் வந்தாலும், குருவின் பார்வை இருப்பதால் அது உங்களை வெற்றியை நோக்கி அழைத்துச் சென்று விடும். குடும்பத்தில் இருந்த சின்ன சின்ன குழப்பங்கள், சண்டைகள் உள்ளிட்டவையும் நிவர்த்தி ஆகிவிடும்.
(5 / 5)
பொருளாதார ரீதியாகவும் இந்த மாதம் மிகவும் நன்றாகவே இருக்கிறது.
மாணவர்களுக்கும் இந்த மாதம் நல்ல மாதமாகவே அமைந்திருக்கிறது. நீங்கள் போடுகிற திட்டத்தின் படி முயற்சிகளை முன்னெடுத்தால் மட்டும் போதும். இன்ன பிறவை எல்லாம் உங்களது கைகளில் வந்து சேர்ந்துவிடும். இல்லத்தரசிகளை பொறுத்த வரை,குடும்பத்தில் இருந்த சின்ன சின்ன பிரச்சனைகள் நீங்கி, காலம் உங்களது வசமாக வாய்ப்பு இருக்கிறது. தேவையான செலவுகளை செய்து குடும்பத்தில் நற்பெயரை நீங்கள் சம்பாதிப்பீர்கள்.
உடல் நலத்தைப் பொறுத்தவரை கடைசி வாரம் சுக்கிரன் கேதுடன் இணைகிறார். அதனால் காய்ச்சல், ஜலதோஷம் உள்ளிட்ட சின்ன சின்ன,பிரச்சினைகள் வந்து செல்லும். வயது மூத்தவர்கள் உங்களது ஆசைகளை இந்த மாதத்தில் நிறைவேற்றிக் கொள்வதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. ஆகையால் மிகவும் கூலாக இந்த ஆகஸ்ட் மாதத்தை நீங்கள் கடக்கலாம்” என்று பேசினார்.
மற்ற கேலரிக்கள்