’உங்களுக்கு தனம்! வாக்கு! குடும்பம் எப்படி இருக்கும்?’ ஜோதிடத்தில் 2ஆம் இடம் சொல்லும் ரகசியம்!' ஜோதிடம் அறிவோம்!
- ஒருவருக்கு குடும்பம் என்ற அமைப்பு நிலைப்பெற 2ஆம் இடம் நன்றாக இருக்க வேண்டியது அவசியம். 2ஆம் இடத்தை பொறுத்தே ஒரு மனிதனின் பேச்சு, செயல்திறன், சம்பாதிக்கும் திறன், நினைவாற்றல் ஆகியவற்றை குறிக்கும்.
- ஒருவருக்கு குடும்பம் என்ற அமைப்பு நிலைப்பெற 2ஆம் இடம் நன்றாக இருக்க வேண்டியது அவசியம். 2ஆம் இடத்தை பொறுத்தே ஒரு மனிதனின் பேச்சு, செயல்திறன், சம்பாதிக்கும் திறன், நினைவாற்றல் ஆகியவற்றை குறிக்கும்.
(1 / 8)
ஒரு ஜாதகத்தில் லக்னத்திற்கு அடுத்தபடியாக முக்கியத்துவம் பெறும் இடமாக 2ஆம் இடம் உள்ளது. தனம், வாக்கு, குடும்பம் ஆகியவற்றை வரையறுக்கும் இடமாக 2ஆம் இடம் உள்ளது.
(2 / 8)
ஒரு மனிதனின் ஒழுக்கம், குணநலன்கள், அடிப்படை கல்வி, பேசும் திறன், சம்பாதிக்கும் தன்மை, குடும்ப அமைப்பு, வாக்கு வன்மை, சொல்வாக்கு, செல்வாக்கு ஆகியவற்றை குறிக்கும் இடம் ஆகும்.
(3 / 8)
ஒருவருக்கு குடும்பம் என்ற அமைப்பு நிலைப்பெற 2ஆம் இடம் நன்றாக இருக்க வேண்டியது அவசியம். 2ஆம் இடத்தை பொறுத்தே ஒரு மனிதனின் பேச்சு, செயல்திறன், சம்பாதிக்கும் திறன், நினைவாற்றல் ஆகியவற்றை குறிக்கும்.
(4 / 8)
2ஆம் இடம் பலம் குறைந்தால் ஜாதகருக்கு நினைவாற்றல் குறைந்து பேச்சு திறன் பாதிக்கும், அவரது பேச்சுக்கு மரியாதை கிடைக்காத நிலை உண்டாகும். இரண்டாம் இடம் என்பது மாரக ஸ்தானமாகவும் விளங்குகிறது.
(5 / 8)
ஜாதகத்தில் ஆயுள் ஸ்தானமாக 8 மற்றும் 3ஆம் இடத்தை வகைப்படுத்துகின்றனர். 8 மற்றும் 3 ஆகிய வீடுகளுக்கு விரையம் தரும் வீடாக 2ஆம் இடம் உள்ளது. 2ஆம் இட அதிபதி தசை நடைபெறும் போது கண்டம் மற்றும் மாரகம் வருவதற்கு வாய்ப்புகள் உண்டு. நமக்கு அமைய போகும் குடும்பம் எப்படி இருக்கும், நமது வாழ்கை துணை எப்படி இருப்பார், நமது வருமானம் எப்படி இருக்கும், தாய், தகப்பன், உறவுகள் பற்றிய தன்மைகளை 2ஆம் இடம் குறிக்கின்றது. (Freepik)
(6 / 8)
2ஆம் இடத்தில் சூரியன் இருந்தால் பேச்சுத்திறன், குடும்பத்தை வழிநடத்துவது, சம்பாதிக்கும் ஆற்றல் ஆகியவை இருக்கும். 2ஆம் இடத்தில் சந்திரன் இருந்தால் விட்டு கொடுத்து போகும் திறன், நிறைய பணம் செலவு செய்வது, துணிந்து பேசுவது, கவிதை, கட்டுரை, இசையில் ஆர்வம் இருக்கும்.
(7 / 8)
2ஆம் இடத்தில் செவ்வாய் இருந்தால் தோஷம் உண்டாகும். அதே நேரத்தில் பேச்சு திறன் குறைவு, வாக்கு நாணயம் இன்மை, கடும் பேச்சு பேசுவது, எதை செய்தாவது சம்பாதிப்பது போன்ற இயல்புகள் ஜாதகருக்கு இருக்கும்.
(8 / 8)
நீ என்ன நினைக்கிறாய்? - உங்கள் குழந்தையின் கருத்து என்னவென்று அவர்களிடம் கேட்டால், அது உங்கள் குடும்பம் குறித்து திட்டமிட உங்களுக்கு உதவும். குறிப்பான அன்றாட தேர்வுகளில் அவர்களிடம் நீங்கள் கருத்து கேட்கும்போது, அது அவர்களுக்கு மதிப்பைத் தரும். இதனால் அவர்களையும் நீங்கள் மதிக்கிறீர்கள் என்பதை அவர்கள் உணர்கிறார்கள். இது அவர்களுக்கு பிற்காலத்தில் முடிவுகள் எடுக்க உதவும். அவர்களை வெளிப்படுத்தும் தன்னம்பிக்கையைத் தரும்.
மற்ற கேலரிக்கள்