சனி பகவான் நல்லவரா? கெட்டவரா?சனி பெயரை கேட்டாலே நடுங்குபவரா நீங்க இந்த விஷயங்களை முதல்ல தெரிஞ்சுக்கோங்க மக்களே
நவக்கிரகங்களில் சனிபகவானின் பெயரை கேட்டாலே பலருக்கு பீதியுடன் காம்போ ஆஃபராக பதற்றமும் வந்து ஒட்டிக்கொள்ளும். குரு பெயர்ச்சியின் போது குஷியாக இருப்பவர்கள், சனிபகவான் பெயர்ச்சியின்போது மனஉளைச்சலில் திரிவார்கள்.
(1 / 5)
நவக்கிரகங்களில் சனிபகவானின் பெயரை கேட்டாலே பலருக்கு பீதியுடன் காம்போ ஆஃபராக பதற்றமும் வந்து ஒட்டிக்கொள்ளும். குரு பெயர்ச்சியின் போது குஷியாக இருப்பவர்கள், சனிபகவான் பெயர்ச்சியின்போது மனஉளைச்சலில் திரிவார்கள். சிலர் கவலையின் உச்சத்திற்கே சென்று "என்ன நடக்குமோ... ஏது நடக்குமோ..." என்று தவியாய் தவிப்பார்கள். சனிபகவானின் தசா நடப்பவர்களின் நிலைமையோ இதைவிட மோசம். இப்படியெல்லாம் விரக்தியில் புலம்பும் அளவிற்கு சனிபகவான் அவ்வளவு மோசமானவரோ, கொடூரமானவரோ அல்ல. இதற்கெல்லாம் சனிபகவான் பற்றி சிலர் ஏற்படுத்தி வைத்துள்ள மாயபிம்பம்தான் காரணம்.
(2 / 5)
"சனிபகவானிடம் கொடுப்பதற்கு எதுவுமே இல்லை. மனித வாழ்க்கைக்கு தேவையில்லாத விஷயங்களை தான் தருவார். அவரிடம் நல்லதே கிடையாது" போன்ற பேச்சுகள் அதிகம். ஒரு பொய்யை திரும்ப திரும்ப ஆயிரம் தடவை சொன்னால் உண்மையாக இருக்குமோ என்று நம்புவது மனித இயல்புதானே.
(3 / 5)
"கஷ்டம், நஷ்டம், வறுமை, பிரச்னைகளைதான் சனிபகவான் கொடுப்பார்" என்று கேட்டு கேட்டு நமக்கும் அது பழகிவிட்டது. இதெல்லாம் விட உச்சகட்ட கொடுமை, சனிபகவானுக்குரிய 8-ம் எண்ணைக்கூட அதிர்ஷ்டம் இல்லாத நம்பர் என்று ஒதுக்கிவைத்துவிட்டார்கள். RTO ஆபிஸ்கூட இதற்கு விதிவிலக்கல்ல.
(4 / 5)
உண்மையை சொன்னால், சனிபகவானிடம் கொடுப்பதற்கு ஏராளமான நல்ல விஷயங்கள் உள்ளன. ஆயுளுக்கு காரக கிரகமே சனிபகவான்தான். "உத்தியோகம் புருஷ லட்சணம்" என்று சொல்வார்கள். அந்த உத்தியோகத்திற்கு காரகனும் அவர்தான். மனிதனுக்கு வேலை, தொழிலை கொடுத்து உயர்த்தி விடுவார். தொழிலாளியும் அவரே, தொழிலதிபரும் அவரே. சனிபகவானிடம் கொடுப்பதற்கு எதுவும் இல்லை என்றால் மேலே சொன்ன விஷயங்களை வேண்டாம் என்று சொல்லிவிடுவோமா?
மற்ற கேலரிக்கள்