மேன்லியாக அவரை பார்த்தேன்.. அடல்டாகிட்டோம்.. ஒரு முறை நாமும் செய்யலாம்! க்யூட் புரொபோஸ் - அஸ்வின் - ப்ரீத்தி காதல் கதை
- Ashwin Love Story: கிரிக்கெட் வாழ்க்கைக்கு முடிவுரை செய்திருக்கும் இந்திய ஸ்பின் ஜாம்பவானாக திகழ்ந்த ரவிச்சந்திரன் அஸ்வின் தனது காதல் மனைவி ப்ரீத்தி நாராயணன் மற்றும் குழந்தைகளுடன் தனது தனிப்பட்ட வாழ்க்கை மீது கவனம் செலுத்தவுள்ளார்
- Ashwin Love Story: கிரிக்கெட் வாழ்க்கைக்கு முடிவுரை செய்திருக்கும் இந்திய ஸ்பின் ஜாம்பவானாக திகழ்ந்த ரவிச்சந்திரன் அஸ்வின் தனது காதல் மனைவி ப்ரீத்தி நாராயணன் மற்றும் குழந்தைகளுடன் தனது தனிப்பட்ட வாழ்க்கை மீது கவனம் செலுத்தவுள்ளார்
(1 / 10)
மற்ற கிரிக்கெட் வீரர்கள் போல் அஸ்வினின் வாழ்க்கையும் க்யூட்டான காதல் கதை நிரம்பியதாக உள்ளது. பள்ளி வாழ்க்கையில் தொடங்கிய டேட்டிங் முதல் தற்போது வரை மறக்க முடியாத தருணங்களை கொண்டதாக உள்ளது
(2 / 10)
அஸ்வின் - ப்ரீத்தி திருமணம் 2011இல் நடைபெற்றது. இந்த ஜோடிகளுக்கு அகிரா, ஆத்யா என இரு மகள்கள் உள்ளார்கள். பல்வேறு கிரிக்கெட் தொடர்களுக்கு அஸ்வின் தனது மனைவி மற்றும் மகள்களுடன் வந்துள்ளார்
(3 / 10)
ஜியோ சினிமாவின் சாட் ஷோ ஒன்றில் தங்களது காதல் கதையை அஸ்வினின் மனைவி ப்ரீத்தி வெளிப்படுத்தியுள்ளார். சென்னை பத்மா சதாவன் பள்ளியில் ஒன்றாக படித்தபோது அஸ்வினுக்கு என் மீது க்ரஷ் ஏற்பட்டது. இது பள்ளியில் உள்ள அனைவரும் தெரியும் என்றார்
(4 / 10)
நாங்கள் ஒன்றாக ஒரே பள்ளியில் படித்தோம். அப்படித்தான் எங்களுக்குள் அறிமுகமானோம். ஆனால் பின்னர், நாங்கள் வளர்ந்து பெரியவர்களாக மீண்டும் சந்தித்தோம். நான் ஒரு ஈவண்ட் மேனேஜ்மெண்ட் நிறுவனத்தில் வேலை செய்து கொண்டிருந்தேன். அஸ்வினுக்கு என் மீது ஒரு பெரிய ஈர்ப்பு இருந்தது.
(5 / 10)
அஸ்வின் கிரிக்கெட் மீது கவனம் செலுத்த தொடங்கியதும் நாங்கள் இருவரும் பேசிக்கொள்ளாமல் இருந்தாலும். ஆனாலும் நண்பர்களின் பிறந்தநாள், இதர விசேஷங்களில் அவ்வப்போது பார்த்துக்கொண்டோம்
(6 / 10)
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக பணியற்றியபோது தான் அஸ்வின் நான் ஒரு வளர்ந்த மனிதனாக பார்த்தேன். 6 அடி உயரத்தில் அவரை பார்த்தபோது, ஏழாம் கிளாஸில் நான் பார்த்த அஸ்வினா இது என ஆச்சர்யமாக இருந்தது
(7 / 10)
ஒரு நாள் கிரிக்கெட் மைதானத்தில் வைத்தே அஸ்வின் எனக்கு புரொபோஸ் செய்தார். என் வாழ்நாள் முழுவதும் உன்னை விரும்புகிறேன். உன் மீது ஏற்பட்ட ஈர்ப்பு கடந்த 10 ஆண்டுகளாக மாறவில்லை. நாம் இப்போது பெரியவர்கள் ஆகியவிட்டோம். ஏன் நாம் ஒருவெருக்கொருவர் காதலிக்கூடாது. அதை முயற்சிக்கலாமே" என்றார்
(8 / 10)
அஸ்வினை போல் ப்ரீத்தியும் தொழில்நுடப் பிரிவில் டிகிரி முடித்தவராக உள்ளார். ஹோம்மேக்கராக இருந்து வரும் இவர், பயிற்சி பெற்ற கிளாசிக்கல் டான்ஸராகவும் திகழ்கிறார்
(9 / 10)
அஸ்வினின் கிரிக்கெட் வாழ்க்கைக்கு எப்போதும் தனது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளார் ப்ரீத்தி நாரயணன். அஸ்வினை ஊக்கப்படுத்தும் விதமாகவும், அவரை பாராட்டியும் தொடர்ந்து இன்ஸ்டாவில் பதிவுகள் பகிர்ந்து வந்துள்ளார். அதுமட்டுமில்லாமல் தொழில்முறை வாழ்க்கையிலும் அஸ்வினுக்கு பக்க பலமாக இருந்து வருகிறார்
(10 / 10)
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற போதிலும் அஸ்வின் தொடர்ந்து கிளப் கிரிக்கெட்டுகளில் விளையாடுவார். நடந்து முடிந்த ஐபிஎல் ஏலத்தில் சிஎஸ்கே அணியால் வாங்கப்பட்டிருக்கும் அஸ்வின், 2025 சீசினில் விளையாட இருக்கிறார். அஸ்வினின் கிரிக்கெட் அகாடமியான ஜென் நெக்ஸ்ட் கிரிக்கெட் அகாடமியை நிர்வகித்து வருகிறார் அஸ்வினின் மனைவி ப்ரீத்தி நாரயணன்
மற்ற கேலரிக்கள்