ARRahman Sister: ஆட்டிப்படைத்த தீய சக்தி.. ‘அல்லாஹ் கொடுத்த அழைப்பு’ - ஏ.ஆர்.ரஹ்மான் மதம் மாறிய கதை!
ஏ.ஆர்.ரஹ்மான் சகோதரி ஏ.ஆர்.ரெய்ஹானா, தங்களது குடும்பம், இஸ்லாம் மதத்திற்கு மாறிய காரணம் குறித்து ஆனந்த விகடன் சேனலுக்கு பேசியிருந்தார். அந்த பேட்டியின் ஒரு பகுதி இங்கே!
(2 / 6)
இது குறித்து அவர் பேசும் போது, “ என்னுடைய அம்மாவுக்கு ஆன்மீக நாட்டமும், அதில் பெரும் நம்பிக்கையும் இருந்தது. அவருக்கு சில விஷயங்கள் எல்லாம் முன்கூட்டியே தெரிந்துவிடும். அவருக்கு ஒரு விதமான உள்ளுணர்வு இருந்தது. அந்த உள்ளுணர்வு 90 சதவீதம் சரியாக இருக்கும். அவருடைய வாக்கை நாங்கள் தெய்வ வாக்கு போல தான் பிடித்துக் கொள்வோம்.
(3 / 6)
அவருக்கு சில அழைப்புகள் வந்து கொண்டிருந்தன. அதேபோலத்தான் ரஹ்மானும்; நாங்கள் ஒரு ஞானி போலத்தான் அவரை பார்க்கிறோம். ஒரு கட்டத்தில் இவர்கள் இருவரும், நமக்கு இஸ்லாம் மதம்தான் சரியானதாக இருக்கும். இது மிக உண்மையாக இருக்கிறது என்பதை கண்டுபிடித்தார்கள்.
(4 / 6)
எவ்வளவு நாள்தான் நாம் இங்கே ஒரு கால், அங்கே ஒரு கால் வைத்துக் கொண்டிருக்க முடியும் என்று யோசித்தார்கள். அதனால்தான் ஒரே குதிரையில் பயணம் செய்யலாம் என்று முடிவெடுத்து இஸ்லாம் மதத்தை தழுவினார்கள்.
(5 / 6)
ஆனால் உண்மையில், நான் உடனே இஸ்லாம் மதத்திற்கு மாறவில்லை காரணம், எனக்கு அதற்கான அழைப்பானது அப்போது வரவில்லை. எனக்கு நிறைய கேள்விகள் இருந்தன.
மற்ற கேலரிக்கள்